சுவாசத்தை 10 வினாடி நிருத்தி வைப்பதன் மூலம் கொரோனாவை கண்டறியலாமா?

நமது மூச்சை 10 வினாடிகள் நிறுத்தி வைப்பதன் மூலம் கொரோனா தொற்றை கண்டறியலாம் என்பது உண்மையா?... 

Last Updated : Mar 30, 2020, 11:22 AM IST
சுவாசத்தை 10 வினாடி நிருத்தி வைப்பதன் மூலம் கொரோனாவை கண்டறியலாமா?  title=

நமது மூச்சை 10 வினாடிகள் நிறுத்தி வைப்பதன் மூலம் கொரோனா தொற்றை கண்டறியலாம் என்பது உண்மையா?... 

தீயாய் பரவி வரும் கொரோனா வைரஸை விட மிகக் கொடுமையானது, அது தொடர்பாக வலம் வரும் போலி செய்திகள் தான். அப்படி பரவி வரும் செய்திகளில் ஒன்று தான் 10 வினாடி சுவாசத்தை நிறுத்தி வைக்கும் சோதனை. அதாவது, உங்களுக்கு வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிவதற்கு குறைந்தபட்சம் 10 வினாடிகள் மூச்சை அப்படியே நிறுத்தி வைத்து பார்க்க வேண்டுமாம். உங்களால் 10 விநாடிகள் மூச்சை நிறுத்தி வைக்க முடியும், அதுவும் இருமலோ அல்லது கஷ்டம் இல்லாமல் இதை செய்யமுடியும் என்றால் உங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு வரவில்லை என்று அர்த்தம் என்ற செய்தி. 

இதை தொடர்ந்து, வெப்பமான இடத்தில் கொரோனா வைரஸ் பரவாது என்ற மற்றொரு செய்தி.... இதுவரை கிடைத்த சான்றுகளிலிருந்து, COVID-19 வைரஸ் வெப்பமான மற்றும் ஈரப்பதமான வானிலை உள்ள பகுதிகள் உட்பட அனைத்து பகுதிகளிலும் பரவுகிறது. காலநிலையைப் பொருட்படுத்தாமல், நீங்கள் வசிக்கிறீர்கள் என்றால் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் அல்லது COVID-19-யை புகாரளிக்கும் பகுதிக்குச் செல்லுங்கள். COVID-19 க்கு எதிராக உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சிறந்த வழி உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்வதாகும். இதைச் செய்வதன் மூலம் உங்கள் கைகளில் இருக்கும் வைரஸ்களை அகற்றி, உங்கள் கண்கள், வாய் மற்றும் மூக்கைத் தொடுவதன் மூலம் ஏற்படக்கூடிய தொற்றுநோயைத் தவிர்க்கவும்" இது தான் உண்மை. 

இந்நிலையில், 10 வினாடி சுவாசத்தை நிறுத்தி வைக்கும் சோதனை குறித்து WHO (உலக சுகாதார அமைப்பு) உண்மையை என்ன என்பதை வெளியிட்டுள்ளது. இது உண்மையா என்று கேட்டால்..... "இருமல் அல்லது அசௌகரியம் இல்லாமல் உங்கள் சுவாசத்தை 10 வினாடிகள் அல்லது அதற்கு மேல் வைத்திருக்க முடியும் என்பது நீங்கள் #கொரோனா வைரஸ் நோய் அல்லது வேறு எந்த நுரையீரல் நோயிலிருந்தும் விடுபட்டுள்ளீர்கள் என்று அர்த்தமல்ல. இந்த தகவல் பொய்யானது என தெரிவித்துள்ளது. 

இதை போன்றே மற்றொரு தகவல் தான், "ஆல்கஹால் குடிப்பதால் நம்மை கொரோனா தாக்கத்தில் இருந்து காத்துக்கொள்ளலாம்" என்ற செய்தி. இதன் உண்மை என்ன..... உண்மை: ஆல்கஹால் குடிப்பது #COVID19-விலிருந்து உங்களைப் பாதுகாக்காது மற்றும் அது மிகவும் ஆபத்தானது.

அடிக்கடி அல்லது அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வது உங்கள் உடல்நலப் பிரச்சினைகளை அதிகரிக்கும்" என WHO (உலக சுகாதார அமைப்பு) கொரோனா வைரஸைப் பற்றிய சில உண்மையான தகவலை தெரிவித்துள்ளது.  

Trending News