மக்கள் அதிர்ச்சி... ஜூலை முதல் தொடர்ந்து உயரும் சிலிண்டர் விலை - சென்னையில் எவ்வளவு தெரியுமா?

Commercial LPG Cylinder Price Hike: வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் இன்று (டிச. 1) 16 ரூபாய் அதிகரித்துள்ளது. இதன்மூலம் 19 கிலோ எடைக்கொண்ட இந்த சிலிண்டர் தற்போது சென்னையில் 1,980.50 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Dec 1, 2024, 06:51 AM IST
  • நவம்பரில் ரூ.1,964.50 ஆக விற்பனையாகி வந்தது.
  • தற்போது ரூ.16 உயர்ந்துள்ளது.
  • கடந்த ஜூலை மாதம் இது. ரூ.1,809 ஆக இருந்தது.
மக்கள் அதிர்ச்சி... ஜூலை முதல் தொடர்ந்து உயரும் சிலிண்டர் விலை - சென்னையில் எவ்வளவு தெரியுமா?  title=

Commercial LPG Cylinder Price Hike: வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் இன்று (டிச. 1) 16 ரூபாய் அதிகரித்துள்ளது. இதன்மூலம் 19 கிலோ எடைக்கொண்ட இந்த சிலிண்டர் தற்போது சென்னையில் 1,980.50 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது.

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் பெரும்பாலும் உணவகங்கள், சாலையோர தள்ளுவண்டி உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தப்படும். அந்த வகையில், கடந்த ஜூலை மாதத்திற்கு பின் இந்த வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆங்கில மாதத்தின் 1ஆம் தேதி அன்று சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருள்களின் விலையில் மாற்றம் செய்யப்படும்.

அந்த வகையில், டிசம்பர் மாதத்தின் 1ஆம் தேதியான இன்று நாடு முழுவதும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகமாகி உள்ளது. நவம்பர் மாதம் ரூ.1,964.50 என்ற விலையில் விற்பனையான வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று 16 ரூபாய் அதிகரித்து, ரூ.1,980.50 என்ற விலையில் விற்பனையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்பிஜி: சென்னை விலை நிலவரம்

அதாவது கடந்த ஜூலை மாதம் ரூ.1,809.50 என்ற விலைக்கு இந்த வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விற்பனையானது. தொடர்ந்து, ரூ.7.50, ரூ.38, ரூ.48, ரூ.61.50 என ஜூலை மாதத்தில் இருந்து முறையே ஒவ்வொரு மாதமும் படிப்படியாக கடந்த 4 மாதங்களில் மட்டும் 171 ரூபாய் உயர்ந்து காணப்படுகிறது. இந்த விலை நிலவரம் அனைத்தும் சென்னை மாநகரத்திற்கானது என்பதையும் வாசகர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க | EPFO 3.0: பிஎஃப் பங்களிப்பு வரம்பு, ATM மூலம் PF தொகை.... அரசின் பெரிய திட்டங்கள்

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து உயரும் காரணமாக ஹோட்டல்களில் உணவு விற்பனையின் விலையிலும் ஏற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், வணிகர்கள் மட்டுமின்றி வெளியில் உணவருந்தும் பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகலாம் என கூறப்படுகிறது. வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் தொடர்ந்து மாற்றமில்லாமல் இருப்பது மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் (14.2 கிலோ சிலிண்டர்) ரூ.818.50 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூ.918.50 ஆக விற்பனையாகி வந்த வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர், கடந்த மார்ச் 1ஆம் தேதி அன்று ரூ.100 குறைந்து ரூ.818.50 என்ற விலைக்கு விற்பனைக்கு வந்தது. அப்போது முதல் கடந்த 9 மாதங்களாக வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | மத்திய அரசின் சூப்பர் திட்டம்! இனி மூத்த குடிமக்களுக்கு இலவச சிகிச்சை?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News