டெல்லி: இன்று நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு முடிவுகளை சி.பி.எஸ்.இ.-யின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான cbse.nic.in, cbseresults.nic.in ஆகியவற்றில் காணலாம். மேலும் மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.
சிபிஎஸ்இ தலைவர் அனிதா கர்வால் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தேர்வு முடிவுக் குறித்து பேசி வருகிறார். அந்த நேரத்தில் முதல் இடம் பிடித்த இரண்டு மாணவிகளை பற்றி பேரினார். இவர்களில் முதன்மையானவர் கஜியாபாத்தை சேர்ந்த ஹன்சிகா சுக்லா. இவர் 499 மதிப்பெண்களை பெற்றுள்ளார். மற்றொருவர் முசபர்நகரை சேர்ந்த கரிஷ்மா அரோரா. இவரும் 499 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.
10 சிறப்பம்சங்கள்:
> இந்த முறை சிபிஎஸ்இ-யின் தேர்வு முடிவுகள் 28 நாட்களிலே வெளியிடப்பட்டது.
> இந்த முறை 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்ச்சி விகிதம் மொத்தம் 83.4 சதவிகிதமாகும்.
> மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 88.70, மாணவர்களின் சதவீதம் 79.4.
> திருநங்கைகளின் தேர்ச்சி விகிதம் மொத்தம் 83.4 83.3 சதவிகிதமாகும்.
> உ.பி. மாநிலத்தை சேர்ந்த ஹன்சிகா சுக்லா, கரிஷ்மா அரோரா ஆகியோர் 499 மதிப்பெண் பெற்று முதலிடத்தில் உள்ளனர்.
> 3 மாணவிகள் 498 மதிப்பெண் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளனர்.
> மூன்றாவது இடத்தில் மொத்தம் 18 பேர் இடம் பிடித்துள்ளனர். அதில் மாணவிகள் 11 பேர், மாணவர்கள் 7 பேர்.
> திருவனந்தபுரம் பகுதியில் அதிகபட்சமாக 98.2% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
> சென்னை மண்டலத்தில் 92.93 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
> டெல்லி மண்டலத்தில் 91.87 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.