Income Tax சூப்பர் செய்தி: ரூ. 87,500 மாத சம்பளத்துக்கும் வரி செலுத்த வேண்டாம்

Budget 2023: உங்கள் சம்பளம் ரூ. 10.5 லட்சமாக இருந்தால், இந்த சம்பளத்திலும் 100% வரியைச் சேமிக்கலாம். ஆம்!! இந்த அளவு வருமானத்துக்கும் வரி கட்ட வேண்டியதில்லை.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 11, 2023, 06:57 PM IST
  • 2.5 லட்சம் வரை வருமானம் இருந்தால் வரி விலக்கு உண்டு.
  • 50,000 ரூபாய்க்கு நிலையான விலக்கு கிடைக்கும்.
  • 1.5 லட்சத்திற்கு 80சியின் கீழ் விலக்கு அளிக்கப்படும்.
Income Tax சூப்பர் செய்தி: ரூ. 87,500 மாத சம்பளத்துக்கும் வரி செலுத்த வேண்டாம்  title=

வருமான வரி ஸ்லாப்: வருமான வரி செலுத்துபவர்களுக்கு ஒரு சிறந்த செய்தி உள்ளது. இப்போது வரி செலுத்துவோருக்கு பெரிய பலன் கிடைக்கும். உங்கள் சம்பளம் ரூ. 10.5 லட்சமாக இருந்தால், இந்த சம்பளத்திலும் 100% வரியைச் சேமிக்கலாம். ஆம்!! இந்த அளவு வருமானத்துக்கும் வரி கட்ட வேண்டியதில்லை. இதை எப்படி செய்வது என இந்த பதிவில் காணலாம். 

2.5 லட்சம் வரை வருமானம் இருந்தால் வரி விலக்கு உண்டு

இப்போது உங்கள் வருமானம் ரூ 2.5 லட்சம் வரை இருந்தால் வரிவிலக்கு உண்டு. ஆனால் இந்த அளவுக்குப் பிறகும், ரூ 10.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு நீங்கள் வரி செலுத்தாமல் இருக்க முடியும். 

50,000 ரூபாய்க்கு நிலையான விலக்கு கிடைக்கும்

ஒரு நபரின் ஆண்டு வருமானம் ரூ. 10 லட்சத்து 50,000 ரூபாயாக இருந்தால், அவருக்கு ரூ. 50,000 நேரடி நிலையான விலக்கு (ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷன்) கிடைக்கும். இந்த சூழ்நிலையில், உங்கள் வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ.10 லட்சமாகிறது. இந்த பட்ஜெட்டில் அரசாங்கம் ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷன் தொகையை 50,000 ரூபாயில் இருந்து 70,000 ரூபாயாக அதிகரிக்கலாம் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

1.5 லட்சத்திற்கு 80சியின் கீழ் விலக்கு அளிக்கப்படும்

இவை அனைத்தையும் தவிர்த்து, வருமான வரிச் சட்டம், 1961ன் பிரிவு 80சியின் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரிவிலக்கு பெறலாம். இதில் எல்ஐசி, பிபிஎஃப் உள்ளிட்ட பல வசதிகளும் கிடைக்கின்றன. அதன்படி, உங்கள் வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ.8,50,000 ஆகிறது.

50,000 தள்ளுபடி இங்கே கிடைக்கும்

இது தவிர, வருமான வரிச் சட்டம் 1961 இன் பிரிவு 80CCD இன் கீழ் NPS மூலமாகவும் நீங்கள் வரியைச் சேமிக்கலாம். இதில், நீங்கள் ரூ.50,000 வரை தள்ளுபடி பெறுவீர்கள். அதாவது உங்கள் வரிக்கு உட்பட்ட வருமானம் இப்போது வெறும் ரூ.8 லட்சமாக இருக்கும்.

மேலும் படிக்க | உஷார் மக்களே, இப்பொழுதே வாங்கிவிடுங்கள்: பட்ஜெட்டுக்கு பின் இந்த 35 பொருட்களின் விலை உயரும்!! 

2 லட்சம் தள்ளுபடி இங்கே கிடைக்கும்

நீங்கள் ஏதேனும் வீடு வாங்கியிருந்தாலோ அல்லது உங்கள் பெயரில் ஏதேனும் வீட்டுக் கடன் பெற்றிருந்தாலோ, வருமான வரிச் சலுகையின் பலனையும் பெறுவீர்கள். வருமான வரிச் சட்டம் 24B-யின் கீழ், 2 லட்சம் வரை முழு விலக்கு பெறுவீர்கள். எனவே இதன்படி உங்கள் வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ.6 லட்சம் ஆகிவிடும்.

காப்பீடு செய்து ரூ.75,000 தள்ளுபடி பெறலாம்

இது தவிர, வருமான வரியின் 80D பிரிவின் கீழ் ரூ.75,000 க்ளைம் செய்யலாம். உங்கள் குடும்பத்திற்கும் காப்பீடு செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ.5 லட்சத்து 25 ஆயிரமாக ஆக குறையும்.

இங்கு ரூ.25,000 தள்ளுபடி கிடைக்கும்

இவை அனைத்தையும் தவிர, நீங்கள் ஏதேனும் ஒரு நிறுவனத்துடன் தொடர்புடையவராக இருந்தால், நன்கொடை மூலம் ரூ.25,000 வரை வரிவிலக்கு பெறலாம். இதில் 80G வரியின் கீழ் நீங்கள் க்ளைம் செய்யலாம். இந்த விலக்கைப் பயன்படுத்திக் கொண்ட பிறகு, உங்கள் வரிக்குரிய வருமானம் ரூ. 5 லட்சமாகும். அதற்கு நீங்கள் எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை.

மேலும் படிக்க | Budget 2023-ல் வரப்போகும் மாஸ் செய்தி: இவர்களுக்கு நிவாரணம், HRA-வில் அரசின் பெரிய முடிவு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News