வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு; இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை

மே மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகள் இயங்காது என்பதை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்..

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 1, 2022, 06:38 AM IST
  • மே மாதத்தில் வங்கிகள் 11 நாட்கள் மூடப்படும்
  • ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை
  • எந்தெந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை
வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு; இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை title=

மே 2022 மாதத்தில் வங்கி விடுமுறைகள்: வங்கி விடுமுறைகளின் விபரங்களை அறிந்து கொள்வதன் மூலம் உங்கள் வங்கி பணிகளை எளிதாக திட்டமிட முடியும் என்பதோடு, பல வகையான பிரச்சனையையும் தவிர்க்கலாம்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு வங்கி விடுமுறைகள் வேறுபடும். அதேபோல் போது விடுமுறையும் இருக்கக்கூடும். எனவே வங்கிகளின் வேலை நாட்கள், விடுமுறை தினம் ஆகியவற்றை முன்கூட்டியே தெரிந்து கொள்வது சிறந்தது. இதில் ஒவ்வொரு மாதமும் ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை. இதுபோக இரண்டாம் சனிக்கிழமை, நான்காம் சனிக்கிழமை நாட்களிலும் விடுமுறை ஆகும்.

மேலும் படிக்க | SBI Recruitment 2022: பாரத ஸ்டேட் வங்கி வேலைக்கு விண்ணப்பிக்கலாமா?

இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களின்படி, நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் இந்த நாட்களில் மூடப்படும். அதன்படி தற்போது ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, வரும் மே மாதத்தில் வங்கிகள் 11 நாட்கள் மூடப்படும். முழு விடுமுறை பட்டியல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

எந்தெந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை
மே 1 2022: ஞாயிற்றுக்கிழமை - உழைப்பாளர் தினத்தை ஒட்டி நாடெங்கிலும் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும்.
மே 2, 2022: திங்கள்கிழமை - ரம்ஜான் பண்டிகை - கேரள மாநிலம் கொச்சி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் மட்டும்.
மே 3, 2022: செவ்வாய்க்கிழமை - ரம்ஜான் பண்டிகை - கொச்சி, திருவனந்தபுரம் தவிர்த்து நாடு முழுவதிலும் விடுமுறை ஆகும்
மே 9 2022: திங்கள்கிழமை - ரவீந்திரநாத் தாக்கூர் பிறந்தநாள் விழா - மேற்கு வங்கம் மட்டும்.
மே 14 2022: சனிக்கிழமை - இரண்டாம் சனிக்கிழமை அடிப்படையில் நாடெங்கிலும் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும்.
மே 16 2022: திங்கள்கிழமை - புத்த பூர்ணிமா - நாட்டின் ஒரு சில பகுதிகளில் விடுமுறை.
மே 28 2022: சனிக்கிழமை - நான்காவது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும்.

மே 2022 இல் வார இறுதி வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல்
1 மே 2022 : ஞாயிற்றுக்கிழமை
8 மே 2022 : ஞாயிற்றுக்கிழமை
15 மே 2022 : ஞாயிற்றுக்கிழமை
22 மே 2022 : ஞாயிற்றுக்கிழமை
29 மே 2022 : ஞாயிற்றுக்கிழமை

மேலும் படிக்க | Akshaya Tritiyai 2022: இந்த நன்நாளில் இதை செய்தால் பன்மடங்கு நன்மை உண்டாகும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News