வாழ்க்கையை புரட்டி போடும் ‘5’ தோஷங்களும், அதன் பரிகாரங்களும்..!!

ஜாதகத்தில் சில குறிப்பிட்ட தோஷங்களின் பலன்கள் வாழ்க்கையை புரட்டி போட்டு விடும் என என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 1, 2021, 01:23 PM IST
  • ஒரு ஜாதகத்தில் ராகு-கேது ஒன்றாக அமர்ந்தால் கால சர்ப்ப தோஷம் என்பதாகும்.
  • ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால், பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்
  • ராகுவுடன் வியாழன் இணைவதும் தோஷங்களை உருவாக்குகிறது
வாழ்க்கையை புரட்டி போடும் ‘5’ தோஷங்களும், அதன் பரிகாரங்களும்..!! title=

புதுடெல்லி: ஜோதிட சாஸ்திரத்தில், ஜாதகத்தில் காணப்படும் பல வகையான தோஷங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் ஜாதகத்தில் உள்ள சில தோஷங்கள் வாழ்க்கையில் பெரும் பிரச்சனைகளை உருவாக்கும். ஜோதிட சாஸ்திரத்தில் இதற்கான பரிகாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. உங்கள் வாழ்க்கையை புரட்டி போடக் கூடிய 5 தோஷங்கள், அதற்கான காரணங்கள் மற்றும் பரிகாரங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

செவ்வாய் தோஷம்

ஜோதிடத்தில், ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால், திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் உண்டாகும். குடும்பத்தில் குழப்பங்கள், சிக்கல்கள் ஏற்படும். ஒரு ஜாதகத்தில் 4, 7, 8 மற்றும் 12 ஆம் வீட்டில், ஏதேனும் ஒன்றில் செவ்வாய் இருந்தால், செவ்வாய் தோஷம் எனப்படும்.

பரிகாரம்:

செவ்வாய் கிழமைகளில் அனுமன் சாலிசா பாராயணம் செய்யவும்.

வேப்ப மரத்தை தவறாமல் வணங்குங்கள்.

கோபத்தைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள்.

மூத்த சகோதரருடன் அன்பான உறவைப் பேணுங்கள்.

ALSO READ | ராகு பெயர்ச்சி 2022: இந்த ‘6’ ராசிக்காரர்களுக்கு மிகுந்த எச்சரிக்கை தேவை..!!

பித்ரு தோஷம்

ஜாதகத்தின் பித்ரா தோஷம் மிகவும் அசுபமானது. ஒரு நபர் இந்த தோஷத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், அந்த நபருக்கு வேலை தொடர்பான பிரச்சினைகள் இருக்கும். ஜாதகத்தின் 6 ஆம் வீட்டில் ராகு, புதன் அல்லது சுக்கிரன் இருப்பது பித்ரு தோஷத்தை உருவாக்குகிறது. இது தவிர ஜாதகத்தில் சூரியன் மீது சனி, ராகு, கேது கிரகங்களின் பார்வை இருந்தாலும் பித்ரு தோஷம் ஏற்படும்.

பரிகாரம்:  குல தெய்வம், இஷ்ட தெய்வம் வழிபாட்டுடன், அனுமன் வழிபாட்டை தவறாமல் செய்ய வேண்டும். மேலும், ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்கள், ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் கொடுப்பது பித்ரு தோஷத்தைப் போக்கும். மயிலாடுதுறையில் உள்ள முக்தீஸ்வரர் கோவில், பவானி கூடுதுறையில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் ஆகிய இடங்களில் பித்ருக்களுக்கு தர்பணம் செய்வது மிகவும் விசேஷம்.

ALSO READ | Numerology: 2022 ஆம் ஆண்டில் இந்த எண்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றி தான்..!!

கால சர்ப்ப தோஷம்

ஜாதகத்தில் பிறந்த நேரத்தில் ராகுவும் கேதுவும் ஒன்றாக அமர்ந்தால், கால சர்ப்ப தோஷம் உண்டாகும்.

பரிகாரம்:

சந்தனத் திலகத்தை நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும்.

தனிப்பட்ட சுகாதாரத்தை கடைபிடிப்பதோடு வீட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

அன்றாடம் வெள்ளிப் பொருளை பயன்படுத்தவும்.

குல தெய்வ வழிபாடு

மாமியார்களுடன் நல்ல உறவை வைத்துக் கொள்ளுங்கள்.

ஜோதிடரின் ஆலோசனையைப் பெற்ற பிறகு பவளத்தை அணியலாம்.

ALSO READ | அடுத்த 13 நாட்களுக்கு அன்னை லட்சுமியின் கடைக்கண் பார்வை பெறும் 5 ராசிக்காரர்கள்!

குரு சண்டாள தோஷம்

ஒரே வீட்டில் ராகுவுடன் வியாழன் இணைந்து இருக்கும் போது இந்த தோஷம் ஜாதகத்தில் உருவாகிறது. இந்த தோஷம் இருந்தால், குழந்தை பாக்கிய பிரச்னைகள் இருக்கும். புத்திர தோஷம், புத்திர சோகம் ஏற்படலாம்

பரிகாரம்

வியாழன் அன்று மஞ்சள் நிற பொருட்களை தானம் செய்யுங்கள்.

மீன்களுக்கு தானியங்களை உணவளிக்கவும்.

நெற்றியில் குங்குமம், சந்தன  திலகம் தடவவும்.

வியாழன் அன்று விரதம் இருந்து இரவில் துர்கா சப்தசதி பாராயணம் செய்யவும்.

விஷ தோஷம்

ஜாதகத்தில் சந்திரனும் சனியும் சேர்ந்து அமர்ந்தால் விஷ தோஷம் உண்டாகும். விஷ தோஷம் உள்ளவர்கள் வாழ்க்கையில் மிகவும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

பரிகாரம்: 
பஞ்சமி திதியில் விரதம் இருங்கள். குறிப்பாக நாகபஞ்சம தினத்தில் விரதம் அனுஷ்டித்து முறையாகக் கடைப்பிடிக்கவும்.

நாக தெய்வத்தை வழிபடவும். மேலும் வீட்டில் தொடர்ந்து கற்பூரம் ஏற்றி வழிபடவும். வீட்டில் பகவத் புராணம் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Trending News