நீங்கள் ஒரு நாளைக்கு ரூ .74 ஐ மட்டும் சேமித்து அதை NPS முதலீடு செய்தால், ஓய்வு பெறும் போது உங்கள் கையில் ஒரு கோடி ரூபாய் இருக்கும். உங்களது 20 வயதில் இருந்தே, உங்கள் ஓய்வூதியத்திற்கான திட்டமிடலை தொடங்கலாம். பொதுவாக இந்த வயதில் வேலை செல்லவில்லை என்றாலும், ஒரு நாளைக்கு ரூ .74 சேமிப்பது பெரிய விஷயமல்ல. மேலும் இந்த முதலீட்டு திட்டம் மிகவும் பாதுகாப்பானது
NPS திட்டத்தில் செய்யப்படும் முதலீடு உங்களை ஒரு கோடீஸ்வரராக்கும்
உங்களுக்கு 20 வயது என்று வைத்துக்கொள்வோம். NPS இல் நீங்கள் நாள் ஒன்றுக்கு ரூ .74 அதாவது மாதத்திற்கு ரூ. 2230 சேமித்து முதலீடு செய்தால், 40 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் ஓய்வு பெறும்போது, நீங்கள் ஒரு கோடீஸ்வரராக இருப்பீர்கள். உங்களுக்கு 9% என்ற விகிதத்தில் வருமானம் கிடைத்தது என்று வைத்துக்கொண்டால், நீங்கள் ஓய்வு பெறும்போது, உங்கள் மொத்த ஓய்வூதிய தொகை ரூ .1.03 கோடியாக இருக்கும்.
NPS திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்குங்கள்
வயது 20 ஆண்டுகள்
மாத முதலீடு ரூ. 2230
முதலீட்டு காலம் -ன் 40 ஆண்டுகள்
மதிப்பிடப்பட்ட வருமானம் 9%
ALSO READ | Ration Card விதிகளில் முக்கிய மாற்றம்; இனி உங்களுக்கு ரேஷன் கிடைக்காமல் போகலாம்..!!
NPS முதலீட்டில் பெறும் வருமான விபரம்
மொத்த முதலீடு ரூ .10.7 லட்சம்
பெறப்பட்ட மொத்த வட்டி ரூ .92.40 லட்சம்
ஓய்வூதிய தொகை 1.03 கோடி
மொத்த வரி சேமிப்பு ரூ .3.21 லட்சம்
இதில், நீங்கள் பணத்தை ஒரே நேரத்தில் திரும்பப் பெற முடியாது, அதில் 60 சதவிகிதத்தை மட்டுமே நீங்கள் எடுக்க முடியும், மீதமுள்ள 40 சதவிகிதத்தை நீங்கள் வருடாந்திர முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும், அதில் இருந்து ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் கிடைக்கும். உங்கள் பணத்தின் 40% வருடாந்திர திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். உங்களுக்கு 60 வயதாகும்போது, நீங்கள் மொத்தமாக 61.86 லட்சங்களை திரும்பப் பெற முடியும் மற்றும் அதற்கான வட்டி 8% என்று கணக்கிட்டால், ஒவ்வொரு மாத ஓய்வூதியமும் சுமார் 27500 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்
ஓய்வூதிய கணக்கு
வருடாந்திர திட்டத்தில் முதலீடு 40 சதவீதம்
மதிப்பிடப்பட்ட வட்டி விகிதம் 8%
பெற்ற மொத்த தொகை ரூ.61.86 லட்சம்
மாதாந்திர ஓய்வூதியம் ரூ.27,496
இது சந்தையுடன் இணைந்த முதலீட்டு திட்டம் என்பதால், கிடைக்கும் வருமானத்தின் அளவி சிறிது மாறுபடும் வாய்ப்பு உள்ளது. எந்தவொரு முதலீட்டைம், இளம் வயதிலேயே தொடங்குவது நல்ல பலனைத் தரும்.
ALSO READ | அதிர்ச்சித் தகவல்! ரயில் பயணிகளுக்கு 'இந்த’ சேவை கிடைக்காது; காரணம் என்ன..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR