122 ஆண்டுகள் காணாத அதிபயங்கர வெயில். தகிக்கும் இந்தியா

வரலாறு காணாத வெயிலை இந்தியா இந்த ஆண்டு கண்டுள்ளது. இது இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Last Updated : Apr 3, 2022, 03:25 PM IST
  • இந்தியாவில் தகிக்கும் வெயில்
  • வரலாறு காணாத வெப்பம் பதிவு
  • உலகம் முழுவதும் நிலைமை மோசம்
122 ஆண்டுகள் காணாத அதிபயங்கர வெயில். தகிக்கும் இந்தியா title=

இதுவரை பதிவான அளவீடுகளிலேயே மிக வெப்பமான மார்ச் மாதம் இந்த ஆண்டுதான் என இந்திய வாநிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஓவ்வொரு ஆண்டும் மார்ச் 15 முதல் மே 15 வரையிலான பங்குனி, சித்திரை மாதங்கள் இந்தியாவின் வெயில் காலமாக அறியப்படுகிறது. 

அந்த வகையில் இந்த ஆண்டின் மார்ச் மாத வெப்பத்தை கணக்கிடுகையில் இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே அதிகமான வெயில் இந்த ஆண்டுதான் பதிவாகியிருக்கிறது. சராசரியாக 33.1 சென்டிகிரேட் வெப்பம் பதிவாகியுள்ளது. இதற்கு முன் 2010ஆம் ஆண்டு மார்ச் மாதம் 33.09 டிகிரி வெப்பம் பதிவாகியிருந்தது.

மேலும் படிக்க | கொளுத்தும் வெயில் : கொடைக்கானலில் 3.கி.மீ தூரத்துக்கு டிராஃபிக்

உச்சபட்சமாக மார்ச் 20ஆம் தேதி டெல்லியில் 39.9 டிகிரி வெப்பம் பதிவாகியிருந்தது. ஹரியானா, சண்டிகர், டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகபட்ச வெப்பநிலை சராசரியை விட 4.5 டிகிரி வரை உயர்ந்திருக்கிறது. இந்த ஆண்டு மட்டுமல்ல, கடந்த இரண்டு ஆண்டுகளுமே ஒவ்வொரு ஆண்டும் புதிய அதிகபட்ச வெப்பத்தை பதிவு செய்து வருகிறது.

summer

இப்படியான வெப்பநிலை அதிகரிப்பு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் காணப்படுகிறது. உலகளவிலான அதிவெப்பமான ஆண்டுகள் கடந்த இருபது ஆண்டுகளாகத்தான் இருந்துள்ளன. இதேபோல இந்த ஆண்டு இந்தியாவில் கோடை மழையும் குறைந்த அளவே பதிவாகும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும் படிக்க | Video: விண்வெளியில் 355 நாட்களுக்குப் பின் பூமிக்குத் திரும்பிய விண்வெளி வீரர்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News