புதுடெல்லி: டெல்லியில் செவ்வாய்கிழமை (நவம்பர் 16, 2021) காலை காற்றின் தரம் தொடர்ந்து மூன்றாவது நாளாக ‘மிகவும் மோசமான’ அளவில் இருந்தது. காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் (SAFAR) படி, காலை 6:20 மணிக்கு, தேசிய தலைநகரின் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு (AQI) 331 ஆக இருந்தது.
டெல்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகப் பகுதியில் AQI 356, மதுரா சாலையில் AQI 349, பூசா சாலையில் AQI 319, IIT டெல்லி வளாகத்தில் AQI 319 ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பூஜ்ஜியத்திற்கும் 50க்கும் இடைப்பட்ட AQI 'நல்லது' என்றும், 51-100-க்கு இடைப்பட்ட அளவு 'திருப்திகரமானது' என்றும், 101-200-க்கு இடைபட்ட அளவு 'மிதமானது' என்றும், 201-300-க்கு இடையிலான அளவு 'மோசமானது’ என்றும், 301-400-க்கு இடைபட்ட அளவு 'மிக மோசமானது' என்றும், 401-500 இடைபட்ட அளவு 'கடுமையானது' என்றும் கருதப்படுகிறது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, தில்லியில் (Delhi) திங்கள்கிழமை காற்றின் தரம் ஓரளவு மோசமடைந்துள்ளது. அடுத்த சில நாட்களில் எந்த முன்னேற்றமும் இருக்கும் என எதிர்பார்க்கப்படவில்லை.
முன்னதாக திங்களன்று, அத்தியாவசியமற்ற கட்டுமானங்கள், போக்குவரத்து மற்றும் மின் உற்பத்தி நிலையங்களை செவ்வாய்க்கிழமை மாலைக்குள் நிறுத்துவது போன்ற நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க செவ்வாய்க்கிழமை அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்குமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
ALSO READ:Air Pollution: உச்சகட்டத்தில் டெல்லியின் காற்று மாசுபாடு
தில்லியின் காற்று மாசுபாட்டிற்கு காய்ந்த பயிர்களை எரிப்பது முக்கியப் பங்காற்றவில்லை என்ற மத்திய அரசின் சமர்ப்பிப்பை உச்ச நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொண்டதுடன், தில்லியில், தூசி, தொழில்துறை மற்றும் வாகன உமிழ்வுகளில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது.
அதைத் தொடர்ந்து, டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய், டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டிஎம்ஆர்சி) மற்றும் டெல்லி டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் (டிடிசி) அதிகாரிகளுடன் தலைநகரின் பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் பயணிகளின் அளவை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
"இரண்டு நாட்களுக்குள் இது தொடர்பாக ஒரு திட்டத்தை தயாரிக்க DMRC மற்றும் DTC கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன," என்று அவர் கூறினார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal) தலைமையிலான அரசாங்கம் சிக்கலைத் தீர்க்க கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க தயாராக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், காற்று மாசுபாட்டை சரிபார்க்கும் ஒரு நடவடிக்கையாக, தில்லி அரசு திங்கள்கிழமை முதல் ஒரு வாரத்திற்கு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் பிசிக்கல் வகுப்புகள் நடத்தப்படாது என்று சனிக்கிழமை அறிவித்தது. அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்களைத் தவிர அனைத்து அரசு அலுவலகங்கள், ஏஜென்சிகள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் பணியாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு (Work From Home) கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நவம்பர் 17 ஆம் தேதி வரை தேசிய தலைநகரில் கட்டுமான மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்கு அனுமதி இல்லை என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
ALSO READ:தில்லியில் காற்று மாசு: லாக்டவுன் அறிவிக்கப்படுமா; உச்ச நீதிமன்றம் கூறியது என்ன..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR