Republic Day 2025: ஜனவரி 26 ஆம் தேதி நாம் நமது நாட்டின் 76 ஆவது குடியரசு தின விழாவை கொண்டாடவுள்ளோம். 1950 ஆம் ஆண்டு நாட்டின் அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் குடியரசு தின நாளாக கொண்டாடப்படுகின்றது. குடியரசு தின விழாவுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்துவருகின்றன. நாடு முழுவதும் மக்கள் குடியரசு தின கொண்டாட்டங்களுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
தலைநகர் புது டெல்லியில், பிரம்மாண்டமான அணிவகுப்புகள், கலாச்சார கண்காட்சிகள் மற்றும் வண்ணமயமான மாநில அலங்கார ஊர்திகளுக்கான ஏற்பாடுகள் முழு முனைப்புடன் நடந்துகொண்டிருக்கின்றன. இந்த ஆண்டு குடியரசு தின அலங்கார ஊர்திகளுக்கான கருப்பொருள் என்ன? எந்தந்த மாநில ஊர்திகள் அணிவகுப்பில் பங்குகொள்ளும்? இந்த தகவகளை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Republic Day 2025 Tableaux Theme: அலங்கார ஊர்திக் கருப்பொருள்
குடியரசு தின விழா கொண்டாட்டங்களில் மக்களின் மனதையும் கண்களையும் அதிகம் கவர்வது பல்வேறு மாநிலங்கள் மற்றும் அமைச்சகங்களின் வகை வகையான அலங்கார ஊர்திகள்தான். மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் அரசு அமைச்சகங்களின் அலங்கார ஊர்திக் காட்சிகள் இல்லாமல் குடியரசு தினக் கொண்டாட்டம் முழுமையடையாது என்றே கூறலாம்.
இந்த ஆண்டு அலங்கார ஊர்திக் கருப்பொருள், ஸ்வர்ணிம் பாரத்: விராசத் அவுர் விகாஸ் (பாரம்பரியம் மற்றும் மேம்பாடு).
Republic Day Parade: அணிவகுப்பில் பங்குகொள்ள எத்தனை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன?
- கர்தவ்ய பாதையில் நடைபெறும் அணிவகுப்பில் பங்குகொள்ள பதினைந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
- ஆந்திரப் பிரதேசம், பீகார், சண்டிகர், தாதர் நகர் ஹவேலி & டாமன் மற்றும் டையூ, கோவா, குஜராத், ஹரியானா, ஜார்கண்ட், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், திரிபுரா, உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவை பிரமாண்டமான குடியரசு தின அணிவகுப்பில் தங்கள் அலங்கார ஊர்திகளை காட்சிப்படுத்தும்
- இவை தவிர, அணிவகுப்பின் போது 15 அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் அலங்கார ஊர்திகளையும் காணலாம்.
- கர்தவ்ய பாதைக்கு தேர்ந்தெடுக்கப்படாத யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்கள் ஜனவரி 26 முதல் 31 வரை செங்கோட்டையில் உள்ள பாரத் பர்வில் தங்கள் ஊர்திகளை காட்சிப்படுத்தலாம்.
அணிவகுப்புக்கு தயாராகும் ஊர்திகள்
ஊர்திகளின் அமைப்பு, நேர்த்தி, தரம் ஆகியவற்றை மேம்படுத்த, அதிகாரிகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இது குறித்த ஒரு மூத்த நிலை கூட்டத்தை நடத்தினர். அதில் அளிக்கப்பட்ட உத்தரவுகளின் படி, ஊர்திகளின் வடிவமைப்பு வண்ணமயமாகவும் புரிந்துகொள்ள எளிதாகவும் இருக்க வேண்டும். அவற்றை புரிய வைக்க வார்த்தைகளோ, விரிவாக்கமோ அல்லது விளக்கமோ தேவைப்படாத அளவு அவை இயல்பாகவும் எளிதாகவும் அமைந்திருக்க வேண்டும். குழு உறுப்பினர்களின் பரிந்துரையோ அல்லது அங்கீகாரமோ இல்லாமல், ஊர்திகளில் லோகோக்களை பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.
ஊர்திகளின் முன்பக்கத்தில், மாநிங்கள் / யூனியன் பிரதேசங்களின் பெயர்ங்கள் இந்தி எழுத்துருவில் எழுதப்பட்டிருக்க வேண்டும். பின்புறத்தில் ஆங்கில எழுத்துரு இருக்கலாம். ஊர்திகளின் பக்கங்களில் மாநிங்கள் / யூனியன் பிரதேசங்களின் பெயர்ங்கள் பிராந்திய மொழிகளில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
துறைகள், அமைச்சகங்கள், நிறுவனங்களின் ஊர்திகள்
இதேபோல், துறைகள், அமைச்சகங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் தங்கள் பெயர்களை முன்பக்கத்தில் இந்தி எழுத்துருவிலும் பின்புறத்தில் ஆங்கில எழுத்துருவிலும் எழுத வேண்டும். மெய்நிகர் ரியாலிட்டி வடிவமைப்புகளைக் காட்ட அவர்கள் CD -கள் மற்றும் DVD -களைப் பயன்படுத்தலாம்.
மேலும் படிக்க | 76வது குடியரசு தினம்: இந்த 7 படம் ரொம்ப முக்கியம்.. பார்க்க மறந்துறாதீங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ