ரிசர்வ் வங்கி செய்தி புதுப்பிப்புகள்: சிறு தொழில்கள், எம்.எஸ்.எம்.இ, சிறு நிதி வங்கிகள் மற்றும் தனிநபர்கள் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை நாட்டு மக்களை பாடாய் படுத்தி வருகிறது. இவை அனைத்திற்கும் நிவாரணம் வழங்குவதற்காக, ரிசர்வ் வங்கி இன்று பல பெரிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
கடன் தடை குறித்து ரிசர்வ் வங்கி ஒரு பெரிய அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அப்படி எந்த அறிவிப்பும் இன்று வரவில்லை. அடுத்த கொள்கை அறிவிப்பில் இது குறித்து ரிசர்வ் வங்கி (Reserve Bank) அறிவிக்கும் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.
கொரோனாவின் (Coronavirus) இரண்டாவது அலையின் சீற்றம் காரணமாக பொருளாதார முறைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநர் இன்று அளித்த அறிவிப்புகளில் முக்கிய 10 அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.
1. ரிஸ்ர்வ் வங்கி ஆன் டேப் பணப்புழக்கம் குறித்து அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி 2022 மார்ச் 31 வரை 3 ஆண்டுகளுக்கு ரூ .50,000 கோடிக்கான ஒரு செயல்முறையைத் திறந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தடுப்பூசி உற்பத்தியாளர்கள், மருத்துவ வசதிகள், மருத்துவமனைகள் மற்றும் நோயாளிகளுக்கு வங்கிகள் உதவும். வங்கிகள் விரும்பினால், இதற்காக ஒரு கோவிட் கடன் புத்தகத்தையும் உருவாக்கலாம்.
2. 35000 கோடி அரசு பத்திரங்கள் (GSAP) வாங்குவதற்கான இரண்டாம் கட்டம் மே 20 ஆம் தேதி தொடங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
3. முன்னுரிமைத் துறைகளுக்கு உடனடி கடன்கள் மற்றும் சலுகைகளை வழங்கப்படும்.
4. ரூ .500 கோடி வரை சொத்துக்கள் கொண்ட எம்.எஃப்.ஐ.க்கள் முன்னுரிமைத் துறை கடனில் சேர்க்கப்படும். சிறு நிதி வங்கிகள் சிறிய நுண் நிதி நிறுவனத்திற்கு ரூ .500 கோடி கடன்களை வழங்க முடியும்.
5. சிறு நிதி வங்கிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ரூ .10,000 கோடி எஸ்.எல்.டி.ஆர்.ஓ கடன் வழங்குவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதில் கடன் வாங்கும் ஒவ்வொருவருக்கும் 10 லட்சம் என்ற வரம்பு இருக்கும். 2022 மார்ச் 31 வரை இந்த கடனுக்கு கால அவகாசம் கிடைக்கும்.
ALSO READ: சலிக்காமல் தாக்கும் கொரோனா தொற்று: உலக அளவில் இதுவரை 15,49,66,166 பேர் பாதிப்பு
6. தற்போதைய சூழ்நிலையில், KYC விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வீடியோ மூலம் கே.ஒய்.சி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
7. தனிநபர்கள், எம்.எஸ்.எம்.இ.க்களுக்கான ஒரு முறை மறுசீரமைப்புக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சலுகை 30 செப்டம்பர் 2021 வரை அளிக்கப்படும். இதுவரையில் மறுசீரமைப்பு செய்யாதவர்களுக்கு இது பயனளிக்கும்
8. கடன் தடை காலத்தை 2 ஆண்டுகள் நீட்டிக்கவும் ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. வங்கிகள் விரும்பினால் இதை செய்ய முடியும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது
9. மாநிலங்களுக்கான ஓவர் டிராஃப்ட் வசதியிலும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி மாநிலங்களின் ஓவர் டிராப்டை 36 நாட்களில் இருந்து 50 நாட்களாக உயர்த்தியுள்ளது.
10. இந்த ஆண்டுக்கான பருவ மழைக்காலம் சாதாரணமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் தேவை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில், டிராக்டர்களுக்கான தேவை அதிகரித்து வந்தது. பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலை உயர்வைக் காண முடிந்தது. நல்ல பருவமழை இருந்தால் விலை உயர்வு குறையும் என நம்பப்படுகின்றது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பணவீக்கத்தில் குறைந்த தாக்கம் ஏற்பட்டுள்ளது.
ALSO READ: Covid Crisis: கொரோனாவை சமாளிக்க பயிற்சி மருத்துவர்களும் பணியில் ஈடுபடலாம்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR