ஜல்லிக்கட்டு: மோடி வீட்டை முற்றுகையிட்ட அன்புமணி கைது

 தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடியை சந்தித்து ஜல்லிக்கட்டு தொடர்பாக பேசி அவசர சட்டத்திருத்தம் செய்ய வலியுறுத்துவதற்காக அன்புமணி எம்.பி, டெல்லி சென்றிருந்தார்.

Last Updated : Jan 19, 2017, 02:22 PM IST
ஜல்லிக்கட்டு: மோடி வீட்டை முற்றுகையிட்ட அன்புமணி கைது title=

டெல்லி:  தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடியை சந்தித்து ஜல்லிக்கட்டு தொடர்பாக பேசி அவசர சட்டத்திருத்தம் செய்ய வலியுறுத்துவதற்காக அன்புமணி எம்.பி, டெல்லி சென்றிருந்தார்.

ஜல்லிக்கட்டு நடைபெற வலியுறுத்தி உலகமெங்கும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறது. 

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட காரணத்தால், ஜல்லிக்கட்டை இந்த ஆண்டும் நடத்த முடியாமல் போனது. ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்தக்கோரியும், தடைக்கு காரணமான பீட்டா அமைப்பை தடை செய்ய கோரியும் இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் தன்னார்வலர்கள் என, பல தரப்பினரும் போராடி வருகின்றனர். 

அலங்காநல்லூரில் தொடங்கிய இந்த போராட்டம் உலகம் முழுவதும் பரவியது. குறிப்பாக இந்த போராட்டத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பெரிய புரட்சியாக தற்போது உருமாறியுள்ளது. 

இந்நிலையில் அன்புமணி பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று பிரதமர் மோடியின் வீட்டிற்கு முன்னாள் போரட்டம் நடித்தி வருகின்றார்.

இதனையடுத்து அங்கு வந்த போலீசார், அன்புமணி மற்றும் ஏ.கே.மூர்த்தியை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி

ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் பிற கட்சித் தலைவர்களை சந்திப்பதற்காக நான் டெல்லி வந்திருந்தாலும் என் மனம் முழுவதும் மாணவர்கள் நடத்தும் போராட்டத்தின் மீது தான் உள்ளது.

மாணவர்களின் தன்னெழுச்சியான இப்போராட்டத்தை மதித்து தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வசதியாக மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும். அடுத்த இரு நாட்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த மத்திய அரசு அனுமதி அளிக்க மறுத்தால் வரும் 26-ம் தேதி குடியரசு நாள் அன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பாமக சார்பில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு ஆகிய போட்டிகள் தடையை மீறி அமைதியாக நடத்தப்படும்.

என்று கூறினார்

Trending News