CSK கேப்டன் எம்.எஸ்.தோனியின் தாய் தேவகி மற்றும் தந்தை பான் சிங் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து ராஞ்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஐபிஎல் 2021 போட்டி தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ( CSK) கேட்பனாக உள்ள எம்.எஸ்.தோனி மும்பையில் மும்பையில் உள்ளார்
எம்.எஸ்.தோனியின் தந்தையும் தாயும் ராஞ்சியில் உள்ள பல்ஸ் சூப்பர்ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் (Pulse Super Speciality Hospital) சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL 2021) 14 வது போட்டித் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனான தோனி, ஐபிஎல் 2020 க்குப் பிறகு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டார். ஏனெனில் அவர் ஐபிஎல் பருவத்திற்கு முன்னர் எந்தவொரு போட்டி போட்டிகளிலும் பங்கேற்கவில்லை.
ALSO READ | KKR vs CSK: இன்றைய போட்டியில் ஆடக்கூடிய 11 வீரர்களின் பட்டியல் கணிப்பு
தோனி மார்ச் மாத தொடக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸில் இணைந்து, சென்னையில் பயிற்சி முகாமை வழிநடத்தினார்.
பின்னர் தோனியும் அவரது சிஎஸ்கே அணியினரும் மும்பைக்குச் சென்றனர். அங்கு ஐபிஎல் 2021 க்கான பயிற்சியைத் தொடங்குவதற்கு முன்பு 7 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.
தற்போது நடந்து கொண்டிருக்கும் இந்தியன் சூப்பர் லீக் (Indian Super League) தொடரின் 15 வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணிகள் மோதவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவிட் -19 தொற்றின் இரண்டாவது அலையில், தொற்று பாதிப்பு மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், இந்தியா 2.95 லட்சத்திற்கும் அதிகமான புதிய கோவிட் -19 தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளது. இதை அடுத்து, மொத்த தொற்று பாதிப்பு, 1.56 கோடி என்ற அளவை தாண்டியுள்ளது.
ALSO READ | TN Corona Update: கடந்த 24 மணி நேரத்தில், 10,986 பேருக்கு COVID-19 தொற்று
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR