Republic Day 2025 Latest News Live Updates: 76வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. நாட்டின் தலைநகரான டெல்லியின் கடமை பாதையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு (Droupadi Murmu) கொடியேற்றினார். மேலும், மாநிலங்களின் சிறப்பு வாகன அணிவகுப்புகள், விமான மற்றும் ஹெலிகாப்டர்கள் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதேபோல், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை மெரினா கடற்கரை அருகே காமராசர் சாலை, உழைப்பாளர் சிலை அருகில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு (Republic Day 2025 Parade) விழாவில், அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.
பத்ம விருதுகள் (Padma Awards) நேற்றிரவு அறிவிக்கப்பட்டன. தமிழ்நாட்டின் வெவ்வேறு துறைகளை சார்ந்த 12 ஆளுமைகளுக்கு பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமின்றி, பட்ஜெட் 2025 எதிர்பார்ப்புகள் உள்ளிட்ட உள்ளூர், மாநில, தேசிய, உலக, பொருளாதார, விளையாட்டு போன்ற அனைத்து விதமான இன்றைய செய்திகள் குறித்த உடனடி அப்டேட்களை இங்கு காணலாம்.