அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்... ஏப்ரல் 1 முதல் ஓய்வூதியத்தில் மாற்றம்.. யார் யாருக்கெல்லாம் ஆதாயம்?

Government Employees News In Tamil: பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கும் (OPS) தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கும் (NPS) இடையே சமநிலையை ஏற்படுத்தும் முயற்சியாக UPS  என்னும் ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் குறித்து, மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்  அறிவித்தது. இது ஏப்ரல் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கை வெளியானது.

Unified Pension Scheme Latest News: ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் அரசு ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு உத்தரவாதமான ஓய்வூதியத்தை வழங்குகிறது அவர்களின் நிதி பாதுகாப்பை உறுதி செய்ய  ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் உதவுகிறது. யுபிஎஸ் திட்டத்தை தேர்வு செய்பவர்களுக்கு என்ன என்ன பலன்கள் கிடைக்கும், யாரெல்லாம் இதற்கு தகுதி பெறுவார்கள் என்பதை விரிவாக அறிந்து கொள்ளலாம்.

1 /8

நாட்டின் பொது பட்ஜெட்டினை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதை பிப்ரவரி 1, 2025 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார். இதற்கு முன், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மேற்கொண்ட முக்கிய நடவடிக்கையாக, மத்திய ஊழியர்களுக்கான யுபிஎஸ் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

2 /8

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்: ஏப்ரல் 1, 2025 முதல் யுபிஎஸ் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம், NPS திட்டத்தின் கீழ் வரும் மத்திய ஊழியர்களுக்கு பொருந்தும். அரசிதழ் அறிவிப்பின்படி, மத்திய அரசு ஊழியர்கள் NPS திட்டத்தின் கீழ் UPS விருப்பத்தை தேர்வு செய்யலாம் அல்லது UPS விருப்பம் இல்லாமல் NPS திட்டத்தை தொடரலாம். 

3 /8

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் (என்பிஎஸ்) ஊழியர்களின் பங்களிப்பு,  அடிப்படை சம்பளத்தில் 10 சதவீதம் என்ற அளவிலும், இதில் அரசு பங்களிப்பு 14 சதவீதமாகவும் உள்ளது. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் அரசின் பங்களிப்பு 18.5 சதவீதமாக இருக்கும்

4 /8

அரசு கருவூலத்தில் கூடுதல் சுமை: ஏப்ரல் 1, 2025 முதல் UPS நடைமுறைக்கு வந்த பிறகு, அரசாங்கத்தின் இந்த பங்களிப்பு ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் 18.5 சதவீதமாக இருக்கும். இதன்படி முதல் ஆண்டில் அரசு கருவூலத்தில் கூடுதல் சுமை ரூ.6250 கோடியாக இருக்கும்.  

5 /8

UPS சிறப்பு அம்சம்: மத்திய அரசின் 23 லட்சம் ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் (UPS) பலனைப் பெறுவார்கள், இதன் கீழ் பணியாளரின் சராசரி அடிப்படைச் சம்பளத்தில் 50 சதவீதம் 12 மாதங்களுக்கு ஓய்வுக்குப் பிறகு வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். 

6 /8

ஊழியர்கள் குறைந்தது 25 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். 25 ஆண்டுகள் சேவையை முடித்த பிறகு விருப்பு ஓய்வு பெறும் ஊழியர்களும் இதற்கு தகுதி பெறுவார்கள். அதேசமயம் ஒரு ஊழியர் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணியாற்றியிருந்தால், அவருக்கு குறைந்தபட்சம் 10,000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும்.

7 /8

குடும்ப ஓய்வூதியம்: ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில், Dearness Relief (DR) நன்மையும் சேர்க்கப்படும். அதோடு, பணியாளரின் மரணத்திற்குப் பிறகு, சட்டப்பூர்வமாக திருமணமான வாழ்க்கைத் துணைக்கு உத்திரவாத ஓய்வூதிய தொகையிலிருந்து 60% பேமிலி பென்ஷனாக வழங்கப்படும்.

8 /8

பணிக்கொடை: புதிய திட்டத்தின் மற்ற மற்றும் பெரிய பலன்களில், பணிக்கொடையைத் தவிர, UPS  திட்டத்தின் கீழ் ஓய்வு பெறும்போது ஒரு மொத்தத் தொகையும் வழங்கப்படும். இது ஊழியர்களின் ஒவ்வொரு 6 மாத சேவைக்கான அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 10வது பகுதியாக கணக்கிடப்படும். இதில், ஓபிஎஸ் திட்டத்துடன் ஒப்பிடும்போது பணிக்கொடை தொகை குறைவாக இருக்கலாம்.