கேரளா லாட்டரி Win Win W-808 குலுக்கல்.. முதல் பரிசு 75 லட்சம் அதிர்ஷ்டம் யாருக்கு?

Kerala Lottery News In Tamil: இன்று (பிப்ரவரி 10) மதியம் 3 மணிக்கு கேரளா லாட்டரி வின் வின் டபிள்யூ-808 லாட்டரி குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 10, 2025, 12:10 PM IST
கேரளா லாட்டரி Win Win W-808 குலுக்கல்.. முதல் பரிசு 75 லட்சம் அதிர்ஷ்டம் யாருக்கு? title=

Win Win W-808 Lottery Results Latest Update: இன்று (2025 பிப்ரவரி 10, திங்கட்கிழமை) கேரளா லாட்டரி வின் வின் டபிள்யூ-808 குலுக்கல் (Kerala Lottery Win Win W-808) முடிவுகள் வெளியிடப்படவுள்ளது. வின் வின் லாட்டரி குலுக்கல் முடிவுகள் கேரளா லாட்டரி துரையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். வின் வின் லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல் முடிவுகளை தெரிந்துக்கொள்ள நமது ZEE TAMIL NEWS சேனலுடன் இணைந்திருங்கள். 

முதல் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ. 75 லட்சம் ரூபாயும், இரண்டாம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ. 5 லட்சம் ரூபாயும், மூன்றாம் இடம் பிடிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும் மற்றும் ஆறுதல் பரிசாக ரூ. 8000 வழங்கப்படும்.

கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகளை எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?

கேரள லாட்டரி குலுக்கல் முடிவுகள் பிற்பகல் 2:55 மணிக்கு நேரலையில் அறிவிக்கப்படும். அதன்பிறகு பிற்பகல் 3 மணி முதல் கேரள லாட்டரியின் அதிகாரப்பூர்வ இணையதளமான statelottery.kerala.gov.in மற்றும் keralalotteriesresults.in மூலம் முடிவுகள் அறிந்துக்கொள்ளலாம்.

கேரளா லாட்டரி வின் வின் டபிள்யூ-808 குலுக்கல் எத்தனை மணிக்கு நடைபெறும்?

வின் வின் டபிள்யூ-808 குலுக்கல் (Kerala Lottery Win Win W-808) டிக்கெட்டுக்கான குலுக்கல் முடிவுகள் மதியம் 2:55 மணிக்கு அறிவிக்கப்படும்.

கேரளா லாட்டரி வின் வின் டபிள்யூ-808 குலுக்கல் எங்கு நடைபெறும்?

லாட்டரி முடிவுகளுக்கான அதிர்ஷ்டக் குலுக்கல் பெரும்பாலும் திருவனந்தபுரம் பேக்கரி சந்திப்புக்கு அருகிலுள்ள கோர்க்கி பவனில் நடைபெறுகிறது. 1967 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கேரள லாட்டரி மாநில அரசின் கேரள மாநில லாட்டரிகளால் நடத்தப்படுகிறது.

கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகளை ஆன்லைனில் எப்படி பார்ப்பது?

படி 1: கேரள லாட்டரி முடிவுகளை statelottery.kerala.gov.in மற்றும் keralalotteriesresults.in அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். 

படி 2: லாட்டரி ரிசல்ட் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

படி 3: புதிய பக்கம் திறக்கப்படும். 

படி 4: வியூ (View) என்பதை கிளிக் செய்யவும்.

படி 5: லாட்டரி முடிவுகள் திரையில் காட்டப்படும். 

படி 6: அதை பதிவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள்

வின் வின் லாட்டரி குலுக்கல் பரிசு விவரங்கள்

முதல் பரிசு: ரூ 75 லட்சம்
2வது பரிசு: ரூ. 5 லட்சம்
3வது பரிசு: ரூ. 1 லட்சம்
4வது பரிசு: ரூ. 5,000
5வது பரிசு: ரூ. 2,000
6வது பரிசு: ரூ. 1,000
7வது பரிசு: ரூ. 500
8வது பரிசு: ரூ. 100
ஆறுதல் பரிசு: ரூ. 8,000

கேரளா லாட்டரி சீட்டு சேதமடைந்தால் உங்களுக்கு பரிசு கிடைக்குமா?

ஒருவேளை நீங்கள் லாட்டரி குலுக்கலில் வெற்றி பெற்ற நிலையில், உங்கள் டிக்கெட் சேதமடைந்தால், உங்களுக்கான பரிசுத்தொகை நிராகரிக்க வாய்ப்பு உள்ளது.

கேரளா லாட்டரி குலுக்கல் பணம் எப்பொழுது கிடைக்கும்?

கேரள லாட்டரி குலுக்கலில் உங்களுக்கு பரிசுத்தொகை கிடைத்தால், 30 நாட்களுக்குள் ரொக்கப் பரிசைப் பெற்றுக் கொள்ளலாம். அதற்காக சில ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அதேநேரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமான லாட்டரி பரிசை யாராவது வென்றால், ஒரு தனிநபர் சரியான அடையாளச் சான்று ஆவணங்களை கேரள லாட்டரி வாரியத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

லாட்டரி பரித்தொகை பணத்துக்கு வரி விதிக்கப்படுமா?

நீங்கள் லாட்டரி குலுக்கலில் வெற்றி பெற்றால், உங்களுக்கு கிடைக்கும் ரொக்கப் பரிசுத்தொகையில் இருந்து 30 சதவீதம் லாட்டரி வரியும், முகவர் லாட்டரிக்கு 10 சதவீதம் கமிஷனும் விதிக்கப்படும்.

(பொறுப்புத் துறப்பு: லாட்டரிக்கு அடிமை ஆகாமல் பொறுப்புடன் விளையாட வேண்டும். இந்தப் பக்கத்தில் வழங்கப்பட்ட தரவுகள் அனைத்தும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. அறிவுரையாகவோ அல்லது ஊக்கமாகவோ கருதப்படக்கூடாது. Zee News Tamil எப்பவும் லாட்டரியை ஊக்குவிக்காது.)

 

Trending News