ஜார்கண்ட் சுகாதார அமைச்சர் பன்னா குப்தா (Banna Gupta) கொரோனா வைரஸ் தொற்றுக்கு நேர்மறையானதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.
செவ்வாய்க்கிழமை ராஞ்சியில் உள்ள மாநில செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பன்னா குப்தா கலந்து கொண்டார். அமைச்சரவைக் கூட்டத்திற்கு மூன்று மணி நேரத்திற்குப் பிறகு, பன்னா குப்தாவின் சோதனை அறிக்கை நேர்மறையானதாகக் கண்டறியப்பட்டது.
இதுவரை, ஜார்கண்ட் (Jharkhand) முதல்வர் ஹேமந்த சோரன் (Hemant Soren) இரண்டு முறை COVID-19 பரிசோதனை செய்துகொண்டுள்ளார். நான்கு நாட்களுக்குப் பிறகு அவர் மீண்டும் ஒரு கொரோனா வைரஸ் பரிசோதனைக்குச் செல்வார் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, முதல்வரின் வீட்டில் 20 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
ALSO READ: ஆசிரியர்களுக்கு கட்டாய COVID-19 சோதனை; செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்க வாய்ப்பு
இதைத் தொடர்ந்து சோரன் புதன்கிழமை அனைத்து சந்திப்புகளையும் ரத்து செய்தார்.
ஜார்கண்டில் கொரோனா தொற்று (Corona Virus) உறுதி செய்யப்பட்டுள்ள இரண்டாவது அமைச்சர் ஆவார் பன்னா குப்தா. முன்னதாக, குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சர் மிதிலேஷ் தாக்கூர் கோவிட் -19 நேர்மறையாக இருப்பது கண்டறியப்பட்டது. இதுவரை ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்லனர்.
ஜார்கண்டில், கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,000-க்கும் அதிகமாக உள்ளது. தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 265 ஐ எட்டியுள்ளது.
ALSO READ: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 55,079 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!