இந்தியா - ரஷியா பங்கேற்கும் 19_வது உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் இந்தியாவுக்கு நேற்று வந்தடைந்தார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடினை இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தில்லி விமான நிலையத்தில் கைகுலுக்கி வரவேற்றார்.
பின்னர் ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் இந்திய பிரதமர் மோடியும் சந்தித்து பேசினார். அதேபோல இன்று டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் விளாடிமிர் புதின் மற்றும் பிரதமர் மோடி இருவரும் சந்தித்து பேசினர். இரு நாட்டு உறவுகளை குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
இந்த சந்திப்பின் போது இருநாடுகளுக்கிடையே பல ஒப்பந்தங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. அதில் குறிப்பாக, ரஷியாவின் அதிநவீன எதிர்ப்பு ஏவுகணையான எஸ்-400 விமானம் வாங்கும் ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தற்போது ரஷ்யாவிடம் இருந்து அதிநவீன எதிர்ப்பு ஏவுகணையான எஸ்-400 விமானம் வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது என்று தகவல் கிடைத்துள்ளது.
Deal for space cooperation signed between Russia and India . An Indian monitoring station will be built near the Russian city of Novosibirsk in Siberia: Sources #PutininIndia https://t.co/wsAohSCZR4
— ANI (@ANI) October 5, 2018