Coromandel Express Train Accident: Coromandel Express Train Accident: ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே வந்துகொண்டிருந்த போது, கோரமண்டல் விரைவு ரயிலின் (ரயில் எண் - 12842) பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது என தகவல்கள் வெளியாகின.
இந்த விபத்து குறித்து ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பேசியுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் இருந்து விபத்து சார்ந்த உதவிகளுக்கு குழுவை அனுப்பிவைப்பதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தில் #CoromandelExpress விபத்துக்குள்ளான செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். உடனடியாக மாண்புமிகு ஒடிசா மாநில முதலமைச்சர் @Naveen_Odisha அவர்களைத் தொடர்புகொண்டு விபத்து குறித்துக் கேட்டறிந்தேன். அவர் கூறிய தகவல்கள் கவலையளிக்கிறது.
விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எனது… https://t.co/Gh5H4jI0JO
— M.K.Stalin (@mkstalin) June 2, 2023
மேலும் படிக்க | கோரமண்டல் ரயில் விபத்து... சென்னை வந்துகொண்டிருந்தபோது விபரீதம் - 132 படுகாயம்!
ஒடிசா செல்லும் தமிழக குழு
அந்த வகையில், தமிழ்நாடு போக்குவரத்து அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் ஒடிசாவுக்கு செல்ல உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளும் செல்கின்றனர். தற்போது, அமைச்சர் அரியலூர் மாவட்டத்தில் இருப்பதால், அவர் சென்னை புறப்பட உள்ளார். நாளை காலை முதல் விமானத்தில் ஒடிசாவுக்கு தமிழக குழு செல்ல உள்ளது. அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கருடன் வருவாய் துறை செயலாளர், போக்குவரத்து துறை செயலாளர், அர்ச்சனா ஐஏஎஸ் ஆகியோர் செல்ல உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பயணிகள் எத்தனை பேர்?
ரயிலில் மொத்தம் 800 பயணிகள் இருந்ததாக கூறப்படும் நிலையில், சென்னை வரும் பயணிகளின் 150- 200 ஆக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஆந்திராவை சேர்ந்த பயணிகளும் அதில் அதிகம் இருக்கலாம் என கூறப்படுகிறது.
அவசரகால கட்டுப்பாட்டு அறை உதவி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. ஹவுரா ஹெல்ப்லைன் - 033 26382217 காரக்பூர் ஹெல்ப்லைன் - 8972073925, 9332392339 ஹெல்ப்லைன் - 8249591559, 7978418322 ஷாலிமார் ஹெல்ப்லைன் - 9903370746 3503370740, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் - 430 45430 953, 044 25354771 உள்ளிட்ட அவசர அழைப்பு எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஹவுரா ரயிலும் விபத்து
இந்நிலையில், விபத்து நடந்தது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை ரயில்வே துறை செய்தித்தொடர்பாளர் அமிதாப் சர்மா செய்தியாளர் சந்திப்பின்போது வெளியிட்டார். அவர் கூறுகையில், "இரவு 7 மணியளவில், ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸின் (ரயில் எண் - 12842) 10-12 பெட்டிகள் பாலேஸ்வர் அருகே தடம் புரண்டு, எதிர் தண்டவாளத்தில் விழுந்தன. சிறிது நேரம் கழித்து, யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியதால், அதன் 3-4 பெட்டிகள் தடம் புரண்டன" என தெரிவித்துள்ளார்.
#WATCH | Odisha Train accident: At around 7pm, 10-12 coaches of the Shalimar-Chennai Coromandel Express derailed near Baleswar and fell on the opposite track. After some time, another train from Yeswanthpur to Howrah dashed into those derailed coaches resulting in the derailment… pic.twitter.com/Fixk7RVfbq
— ANI (@ANI) June 2, 2023
தற்போது விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்கும் பணி விரைவாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. கொல்கத்தாவில் இருந்து ஒடிசா, ஆந்திரா வழியாக சென்னைக்கு வரக்கூடிய இந்த ரயில் பாதி வழியிலேயே விபத்துக்குள்ளாகியுள்ளது. தற்போது 132 பேர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிக இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ