Gold / Silver Rate April 7, 2021: ஏப்ரல் 7, புதன்கிழமை, இன்று தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. தேசிய அளவில் 22 காரட் தங்கத்தின் விலை 4,420 ரூபாயாக உள்ளது. நேற்றும் இதே விலையில்தான் தங்கத்தின் விற்பனை நடந்தது. 22 காரட் தங்கத்தின் 10 கிராம் விலை முந்தைய விலையிலிருந்து மாறாமல், 44,200 ரூபாயாகவே உள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ .45,200 ஆக உள்ளது. 10 கிராமுக்கான 22 காரட் மற்றும் 24 காரட் விலைகளில் 1000 ரூபாய்க்கான வித்தியாசம் உள்ளது.
வெள்ளியின் விலையும் கிராமுக்கு 65 ரூபாய் என்ற நேற்றைய விலையிலிருந்து மாறாமல் அப்படியே உள்ளது.
பல்வேறு நகரங்களில் அந்தந்த பகுதிகளுக்கான வரி வகைகளைப் பொறுத்து தங்கத்தின் விலை (Gold Rate) மாறுபடுகிறது. நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரங்களை இங்கே காணலாம்:
டெல்லி: தேசிய தலைநகரில் 22 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ .44,550 ஆக உள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை இதை விட 4000 ரூபாய் அதிகமாக ரூ .48,600 ஆக உள்ளது.
சென்னை: சென்னையில் 22 காரட் 10 கிராம் தங்கம் 42,570 ரூபாய்க்கும் 24 காரட் தங்கம் 46,450 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தா: கொல்கத்தாவில் 10 கிராம் 22 காரட் தங்கம் (Gold) 44,630 ரூபாய்க்கும் 24 காரட்டுக்கு 10 கிராம் தங்கம் 47,320 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
ALSO READ: Gold Rates Today: இன்று தங்கம் வாங்கலாமா? உங்கள் ஊரில் தங்கம் என்ன விலை?
மும்பை: மும்பையில் 10 கிராமுக்கு 22 காரட் தங்கத்தின் விலை 44,200 ரூபாயாகவும் 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை 45,200 ரூபாயாகவும் உள்ளது.
தங்கத்தின் சர்வதேச விலை:
சர்வதேச சந்தையில், தங்கத்தின் வீதம் புதனன்று அவுன்ஸ் ஒன்றுக்கு 0.40 சதவீதம் குறைந்து 1,736.70 அமெரிக்க டாலராக உள்ளது. கடந்த 30 நாட்களில் அதன் செயல்திறன் 2.15 சதவீதம் அதிகரித்துள்ளது. இது 36.60 அமெரிக்க டாலருக்கு சமமாகும்.
வெள்ளி விலை நிலவரம்:
தங்கத்தின் விலையைப் போலவே, இன்று வெள்ளி 9Silver) விலையிலும் தேசிய அளவில் எந்த மாற்றமும் இல்லை. 10 கிராம் வெள்ளி 650 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது.
மெட்ரோ நகரங்களில் வெள்ளி விலைகள் பின்வருமாறு:
டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தாவில் ஒரு கிலோ வெள்ளியின் விலை 65,000 ரூபாயாக உள்ளது. சென்னை மற்றும் ஹைதராபாத்தில் அதே அளவிலான வெள்ளியின் விலை 69,300 ரூபாயாக உள்ளது.
ALSO READ: இனி தங்கத்தின் தூய்மை பற்றிய கவலை வேண்டாம்: BIS Care Mobile App உங்களுக்கு உதவும்!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR