புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கமும் பரவலும் அதிகரித்திருக்கும் நிலையில் புதிதாக பலருக்கு தொற்றுநோய் பரவியிருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 326,098 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 3,890 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.
கோவிட் -19 நோய்தொற்று தொடர்பாக கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 1.7 மில்லியன் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை 3,13,017,193 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council of Medical Research) தெரிவித்துள்ளது.
Also Read | முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் கொடுக்கிறார் விஜயகாந்த்
இந்தியாவில் நேற்று மட்டும் 3,26,089 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 353,299 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனால் குணமானவர்களின் எண்ணிக்கை 20,432,898 ஆக உயர்ந்துள்ளது.
தொற்றுநோயின் இரண்டாவது அலை காரணமாக இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தினசரி அடிப்படையில் கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள் மற்றும் இறப்பு எண்ணிக்கை குறித்து அரசு முகமைகள் தகவல்களை தொகுத்து வழங்கிவருகின்றன.
இந்தியாவில் கோவிட் -19 நோய் நிலைமை தொடர்ந்து மோசமாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) வெள்ளிக்கிழமையன்று கவலை தெரிவித்துள்ளது. பல மாநிலங்களில் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் மற்றும் கொரோனா மரணங்கள் ஏற்படுவது கவலைகளை அதிகரிக்கச் செய்கிறது.
Also Read | உருவானது ‘டவ் தே’ புயல்; தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR