தலைமை ஆசிரியர் தண்டித்ததால் 5-ம் வகுப்பு மாணவன் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்து உள்ளது.
உ.பி., மாநிலம் கோரக்பூர் மாவட்டம் உள்ள செயின்ட் அந்தோனி பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவன் நாவ்நீத் (வயது 11) வகுப்பு தலைமை ஆசிரியை பாவனா ஜோசப் தண்டித்ததால் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்ச்சி செய்துள்ளான். இதை அறிந்த பெற்றோர் அவனை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த மாணவன் நேற்று உயிரிழந்தான்.
இதுதொடர்பாக மாணவனின் தந்தை ரவி பிரகாஷ், காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வகுப்பு தலைமை ஆசிரியை பாவனாவை கைது செய்து உள்ளனர்.
சிறுவன் ஸ்கூல் பேக்கில் கடிதம் இன்று இருந்தது. அந்த கடிதத்தில், எனது ஆசிரியை என்னை மூன்று வகுப்புக்கள் முடிவும் வரையில் நிற்க வைத்தார். அதனால் நான் மிகவும் பாதிப்படைத்தேன். நான் எனது உயிரை மாய்த்து கொள்கிறேன் என சிறுவன் கடிதத்தில் கூறியுள்ளதாக அவனது பெற்றோர்கள் கூறினார்கள்.