பட்ஜெட் 2023: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். இம்முறை அரசு தங்களுக்கு பல நல்ல செய்திகளை அளிக்கும் என சாமானியர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். வருமான வரி விலக்கு வரம்பு, வருமான வரிக்கான ஸ்லேப், காப்பீடு ஆகியவை உட்பட இன்னும் பல விஷயங்களில் அரசு பெரிய மாற்றங்களை செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பட்ஜெட்டில் இறக்குமதி வரியை அதிகரிப்பதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
35-க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதி மீதான வரியை அரசு அதிகரிக்கக்கூடும் என தெரிகிறது. பல்வேறு அமைச்சகங்களிலிருந்து பெறப்பட்ட அறிக்கைகளின்படி, இறக்குமதி வரி அதிகரிக்கப்பட வேண்டிய பொருட்களின் பட்டியலை அரசாங்கம் தயாரித்துள்ளது.
இவற்றின் விலை பட்ஜெட்டுக்கு பின்னர் உயரக்கூடும்
- அரசாங்கம் தயார் செய்துள்ள பட்டியலில் தனியார் ஜெட் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், விலையுயர்ந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், நகைகள், ஹை-கிளாஸ் பேப்பர் மற்றும் வைட்டமின்கள் அடங்கும்.
- இறக்குமதியை குறைக்கவும், நாட்டில் இந்த பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கவும், அவற்றின் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்படுகிறது.
- இது தற்சார்ப்பு இந்தியா திட்டத்துக்கான உறுதிப்பாட்டை இன்னும் வலுப்படுத்தும் என்று அரசு கூறுகிறது.
- இதுமட்டுமின்றி கடந்த ஆண்டும் பட்ஜெட்டில் பல பொருட்களின் இறக்குமதி வரியை உயர்த்தி அரசு அறிவித்திருந்தது.
டிசம்பரில், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் அனைத்து அமைச்சகங்களையும் அத்தியாவசியப் பொருட்களின் கீழ் வராத பொருட்களின் பட்டியலைத் தயாரிக்குமாறு கேட்டுக் கொண்டது. இந்தப் பட்டியலில் உள்ள பொருட்களின் கட்டணத்தை அதிகரித்து அவற்றின் இறக்குமதியைக் குறைக்க அரசு விரும்புகிறது. செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதாவது சிஏடி ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது என்று கூறப்படுகிறது.
இதன் மூலம், செப்டம்பர் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 4.4 சதவீதமாக இருந்தது. முந்தைய காலாண்டில் இது 2.2 சதவீதமாக இருந்தது. உலக அளவில் பல்வேறு வகையான பொருட்களின் விலை வீழ்ச்சியால், தற்போது CAD பற்றிய சில கவலைகள் குறைந்துள்ளன. இருப்பினும் இதில் அனைத்து வித முயற்சியையும் எடுக்கவே அரசாங்கம் விரும்புகிறது.
நீண்ட கால திட்டம்
இந்த ஆண்டு உலகின் மூன்றில் ஒரு பங்கு நாடுகள் மந்தநிலையின் பிடியில் இருக்கக்கூடும் என்று IMF எச்சரித்துள்ளது. அமெரிக்காவுடன் ஐரோப்பாவின் பல நாடுகளும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மந்தநிலை இந்தியாவையும் பாதிக்கலாம்.
நடப்பு கணக்கு பற்றாக்குறை அடுத்த நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.2-3.4 சதவீதமாக இருக்கும் என கூறப்படுகின்றது. மறுபுறம், ஐசிஆர்ஏ தலைமை பொருளாதார நிபுணர் அதிதி நாயர், உள்ளூர் தேவை அதிகமாக இருக்கும் என எண்ணுகிறார். ஆகையால், சரக்கு வர்த்தக பற்றாக்குறை ஒவ்வொரு மாதமும் 25 பில்லியன் டாலர்களாக இருக்கக்கூடும், இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.2-3.4 சதவீதம் ஆகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ