கிழக்கு லடாக்கில் (Ladakh), அமைதியான “பதற்ற” நிலை இருப்பதால், துருப்புக்கள் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்கின்றனர், வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், சீனா வெளியுறவு அமைச்சர் வாங் யியைச் (Wang Yi) சந்தித்ததிலிருந்து தாக்குதல் எதுவும் இல்லை என்றாலும், துருப்புகள் எதுவும் பின்வாங்கப்படவில்லை, பாங்காங் த்சோவின் (Pangong Tso) வடக்கு கரையில், பிங்கர் 3 மற்றும் பிங்கர் 4 பகுதிக்கு இடையில், ஒவ்வொரு பக்கத்திலும், 1,500-2,000 துருப்புக்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
இந்த வாரம், கமாண்டர்-நிலையில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கமாண்டர் நிலை பேச்சுவார்த்தைகளுக்கான நடைமுறைகளை இறுதி செய்ய சீனா ஆய்வுக் குழு ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் சந்திக்கக்கூடும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
எஸ்.ஜெய்சங்கருக்கும் வாங் யிக்கும் இடையிலான சந்திப்பிற்கு பிறகு, பாங்காங்கிற்கு அருகே பிரிகேடியர் நிலையிலான பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால் குறிப்பிட்ட அளவில் எந்த ஒஇரு முன்னேற்றமும் இல்லை என கூறப்படுகிறது.
ராணுவ கமாண்டர்-நிலையிலான பேச்சுவார்த்தைகளின் மூலம் ஒரு தீர்வு ஏற்படும் சாத்தியக்கூறு குறைவாக உள்ளது என இந்திய தரப்பில் எண்ணம் நிலவுகிறது. சீனா ஒரு நீண்ட பயணத்திற்கு தயாராகி வருகிறது என இந்தியா எண்ணுகிறது. அதனால் மிகுந்த எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ALSO READ | இந்தியாவின் அதிரடி நடவடிக்கையால் பயத்தில் அடக்கி வாசிக்கும் சீனா... !!!
இந்தியாவிடம் ராணுவ ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் கட்டுப்பாட்டில் இருப்பதால், இந்தியா சீனாவை முழுமையாக கண்காணிக்க இயலும்.
நவம்பர்-டிசம்பர் மாதங்களில் பூஜ்ஜியத்திற்கு கீழே -50 டிகிரி செல்சியஸ் வரை செல்லக்கூடிய தட்பநிலையில், அங்கு ராணுவத்தினருக்கு உதவ அதற்கான தனிப்பட்ட சிறப்பு உபகரணங்கள் மற்றும் கூடாரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
கடும் குளிருக்கு ஏற்ற வகையிலான சிறப்பு துணியால் செய்யப்பட்ட கூடாரங்களில் 8-10 வீரர்கள் தங்க முடியும் மற்றும் வீரர்கள் குளிர் காய்வதற்கான சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பனிப்பொழிவு காரணமாக சோஜிலா மற்றும் ரோஹ்தாங் பாஸ்கள் மூடப்படுவதற்கு முன் தேவையான அனைத்து எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. உறைபனியினால் ஏற்படும் உடல் நல பாதிப்புகளில் இருந்து, போன்றவற்றிலிருந்து வீரர்களைப் பாதுகாக்க சிறப்பு காலணிகள் மற்றும் ஆடைகளையும் அரசு வாங்கியுள்ளது. படைகளுக்கு வழங்கப்படும் ஆடை மற்றும் உபகரணங்கள் சியாச்சின் பகுதியில் படையினர் பயன்படுத்தப்படும் ஆடைகள் மற்றும் உபகரணங்களை போலவே இருக்கும்.
ALSO READ |குளிரில் உறையப்போகும் லடாக்.. இனியாவது எல்லையில் தொல்லைகள் தீருமா..!!