Weight Loss Tips: உடல் பருமன், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் பிற வாழ்க்கை முறைக் கோளாறுகளைத் தவிர்க்க ஆரோக்கியமான உணவை உட்கொள்வது மிகவும் அவசியம். நமது உடலுக்கு அனைத்து சத்துகளும் கண்டிப்பாக சரியான அளவில் தேவை. அதேபோல், குறைந்த அளவு கலோரி உட்கொள்ளலும் உடலுக்கு அவசியம். நாம் நாள் முழுவதும் கலோரி நிறைந்த உணவுகளை உட்கொண்டால், உடல் தேவைக்கு அதிகமான கலோரிகளை சேமித்து வைக்கிறது. மேலும் நாள் முழுவதும் எவ்வளவு கலோரிகளை நாம் எடுத்துக்கொள்கிறோமோ அவ்வளவு கலோரிகளை நாம் எரிக்க வேண்டும். ஆனால் இதைச் செய்யாவிட்டால், கூடுதல் கலோரிகள் உடலில் கொழுப்பு வடிவில் சேமிக்கப்படும். இதன் காரணமாக உடல் பருமன் பிரச்சனை ஏற்படுகின்றது. அதே போல் உடல் பருமன் பல்வேறு வாழ்க்கை முறை கோளாறுகளை ஏற்படுத்துகிறது.
இப்போதெல்லாம் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையால் பலர் அவதிப்பட்டு வருகின்றனர். ஒரே இடத்தில் மணிக்கணக்கில் உட்கார்ந்து வேலை செய்வதால் உடல் எடை கூடும், தொப்பை கொழுப்பு (Belly Fat) அதிகரிக்கும். இதனால் உடல் பருமன் மட்டுமின்றி பல உடல்நல பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. உடல் பருமன் ஒரு தீவிர பிரச்சனையாகும். இது பல உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஆகையால் அதிகரிக்கும் எடையை சரியான நேரத்தில் கட்டுப்படுத்துவது அவசியம்.
சிலர் உடல் எடையை குறைக்க மிகவும் கடினமாக உழைக்கிறார்கள். சிலர் உணவுக் கட்டுப்பாட்டின் உதவியை எடுத்துக்கொள்கிறார்கள், சிலர் ஜிம்மில் மணிக்கணக்கில் நேரம் செலவிடுகிறார்கள். இருப்பினும், எடை இழப்பை பொறுத்தவரை பெரும்பாலும் நமது கடின உழைப்பு பலன் தருவதில்லை. ஆனால், சில எளிய, இயற்கையான வழிகளிலேயே உடல் எடையை குறைக்கலாம் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். உடல் பருமனை கட்டுப்படுத்தும் அப்படி ஒரு எளிய வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும் பல பானங்கள் உள்ளன. அவை உடல் எடையையும் குறைக்க உதவுகின்றன. உடல் எடையை குறைப்பதில் மிகவும் பயனுள்ளவையாக கருதப்படும் பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். இவற்றை சரியான முறையில் உட்கொண்டால் கண்டிப்பாக கணிசமாக உடல் எடையை குறைத்து ஆரோக்கியமான வாழ்வை வாழலாம்.
உடல் எடையை குறைக்க உதவும் பானங்கள் (Weight Loss Drinks):
சோம்பு தேநீர்
சோம்பு தேநீர் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க சிறந்தது. உடல் எடையை குறைக்க இந்த பானத்தை குடிக்கலாம்.
கிரீன் டீ (Green Tea For Weight Loss)
எடை இழப்புக்கு கிரீன் டீ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடல் எடையை குறைக்க பலர் கிரீன் டீயை டயட்டில் சேர்த்துக் கொள்கின்றனர். இதில் கேடசின் எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது, இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.
பிளாக் டி (Black Tea For Weight Loss)
பிளாக் டீயில் எடையைக் குறைக்க உதவும் கலவைகள் உள்ளன. இதில் பாலிஃபீனால்கள் அதிகம் உள்ளன. இவை சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இது எடையை குறைக்க உதவுகிறது.
இஞ்சி எலுமிச்சை பானம்
எடை இழப்புக்கு இஞ்சி எலுமிச்சை பானத்தையும் முயற்சி செய்யலாம். எடை இழப்பு தவிர, இரைப்பை குடல் பிரச்சனைகளுக்கு இந்த பானம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது வீக்கம் மற்றும் உப்பசத்தை தடுக்கவும் உதவுகிறது.
காய்கறி சூப்
காய்கறி சூப்கள் எடை இழப்புக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகின்றன. நீங்களும் உடல் எடையை குறைக்க முயற்சிப்பவராக இருந்தால், குறைந்த கலோரி கொண்ட காய்கறி சூப்பை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இது உடல் எடையை குறைக்க உதவும்.
ஆப்பிள் வினிகர்
உணவுக்கு முன் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகரை தண்ணீரில் கலந்து குடிக்கவும். இதைச் செய்வதன் மூலம், உங்கள் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கிறது. மேலும் வயிற்றில் நிரம்பிய உணர்வு ஏற்படுகின்றது. இதனால், தேவையில்லாத ஆரோக்கியமற்ற உணவுகளை சபபிடுவது தவிர்க்கப்படுகின்றது.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உங்களை நீங்கள் காதலித்தால், இந்த டிப்ஸை மிஸ் பண்ணாதீங்க! அழகாய் வாழ உணவு வழிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ