கொரோனா வைரஸ்: உலகம் முழுதையும் ஆட்கொண்ட கொரோனா தொற்று இன்னும் மக்களை விட்டபாடில்லை. கோவிட் தொற்று காரணமாக இதுவரை ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், கோவிட் 19 தொற்று பற்றிய பல புதிய ஆய்வு முடிவுகளும், தகவல்களும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.
ஒருவர் கோவிட் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவதற்கு முன்னர், அவர் உடலில் இருக்கும் வைட்டமின் டி அளவுக்கும், நோய்த்தொற்றால் ஏற்படும் தீவிர நிலை மற்றும் இறப்பு நிகழ்வுகளுக்கும் நேரடியாக தொடர்பு உள்ளது என ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேலில் உள்ள ஒரு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வின் அறிக்கையின்படி, கோவிட் நோய்த்தொற்றுக்கு முன் உடலில் உள்ள வைட்டமின் டி அளவு நோய்த்தொற்றின் தீவிரத்தை பாதிக்கிறது. இதனுடன், வைட்டமின் டி-க்கும் நோயாளியின் இறப்புக்கும் கூட தொடர்பு இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு அறிக்கை பிஎல்ஓஎஸ் ஒன் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
வைட்டமின் டி எலும்பு ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. இது குறைவாக இருந்தால், அது ஆடோய்ம்யூன், இருதய மற்றும் தொற்று நோய்களுக்கு வழிவகுக்கும். கொரோனா நோய்த்தொற்றின் ஆரம்ப கட்டங்களில், வைட்டமின் டி எடுத்துக்கொள்ள சுகாதார அதிகாரிகள் மக்களை ஊக்குவித்தனர். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் உதவியாக இருக்கும். எனவே கோவிட்-19 க்கு எதிரான பாதுகாப்பில் வைட்டமின் டி நல்லது என்று கருதப்பட்டது.
மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
தீவிரமாக வாய்ப்புள்ளது
அறிக்கையின்படி, வைட்டமின் டி குறைபாடு கண்டறியப்பட்டவர்களுக்கு, கோவிட் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு 14 மடங்கு அதிகரிக்கிறது. இதேபோல், உடலில் போதுமான அளவு வைட்டமின் டி உள்ளவர்களில் கொரோனா தொற்று காரணமாக ஏற்படும் இறப்பு விகிதம் 2.3 சதவீதமாக இருந்தது. குறைந்த அளவு வைட்டமின் டி இருந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் 25.6 சதவீதமாக இருந்தது. கலிலி பல்கலைக்கழக மருத்துவ மையம் உடலில் வைட்டமின் டி அளவை பராமரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது என தெரிவித்துள்ளது.
வைட்டமின் டி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உலகம் முழுவதும் உள்ள சுகாதார நிபுணர்கள் மற்றும் உலகளாவிய சுகாதார நிறுவனங்கள் வைட்டமின் டி எடுத்துக்கொள்வது குறித்து ஒருமனதாக இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஆராய்ச்சியின் போது, ஏப்ரல் 2020 மற்றும் பிப்ரவரி 2021 க்கு இடையில் கலிலி மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்ட 1176 நோயாளிகளின் பதிவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. வயது, பாலினம், பருவம், நாள்பட்ட நோய் போன்ற காரணிகளும் ஆய்வின் போது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
ஆய்வு அறிக்கையை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ள பேராசிரியர் மைக்கேல் எடெல்ஸ்டீன் கூறுகையில், கொரோனா தொற்று சிலருக்கு கடுமையான தாக்கத்தையும் சிலருக்கு லேசான விளைவுகளையும் ஏன் ஏற்படுத்துகின்றது என இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று கூறினார். இந்தப் புதிரைத் தீர்க்கும் முயற்சியே இந்த ஆராய்ச்சி என்றார் அவர்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ஆடம்பரமாய் வாழும் பெண்களின் ராசிகள் இவைதான்: உங்க மனைவிக்கு என்ன ராசி?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR