இந்தியா உட்பட உலகின் பல நாடுகள் பெரிய அளவில் பாதிப்புகளை சந்தித்துள்ளன. கடந்த ஆண்டு இரண்டாவது அலையின் போது இந்தியாவில் பல இறப்புகள் நிகழ்ந்தன. இருப்பினும், மூன்றாவது அலையின் போது நாட்டில் குறிப்பிடத்தக்க தாக்கம் எதுவும் ஏற்படவில்லை. கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதில் இருந்தே, வைரல் அதன் வடிவத்தை மாற்றிக் கொண்டே இருக்கும் நிலையில், புதுப் புது திரிபுகள் உருவாகி வருகின்றன. டெல்டா மற்றும் ஓமிக்ரான் போன்ற திரிபுகள் பெரிய அளவில் பரவின. பல நாடுகளில், தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்களை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், அனைத்து திரிபுகளுக்கு எதிராகவும் திறன்பட செயல்படும் உலகளாவிய தடுப்பூசியை தயாரிப்பதற்கான விவாதம் தீவிரமடைந்துள்ளது. யுனிவர்சல் தடுப்பூசி என்பது கொரோனாவின் அனைத்து திரிபுகளையும் எதிர்த்துப் போராட உதவும் தடுப்பூசி. 'நேச்சர்' இதழில் சமீபத்தில் வெளியான கட்டுரையில், சூப்பர் யூனிவர்சல் தடுப்பூசி தயாரிப்பது குறித்து பேசப்பட்டுள்ளது. 'பூஸ்டர் டோஸ் வழங்கும் பாதுகாப்பு காலப்போக்கில் குறையும்' என்று இந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. சூப்பர் தடுப்பூசியின் அவசியத்தை கட்டுரை வலியுறுத்துகிறது.
உலகளாவிய தடுப்பூசிகள் பற்றிய விவாதம் தொடங்குவது முதல் முறை அல்ல. விஞ்ஞானிகள் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக உலகளாவிய காய்ச்சல் தடுப்பூசியை உருவாக்க முயற்சித்து வருகின்றனர். தடுப்பூசியின் சோதனைகள் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. ஆனால் அது இன்னும் சந்தைக்கு அனுமதிக்கப்படவில்லை. பவுஸி மற்றும் பிற நிபுணர்கள் கோவிட் மாறுபாடுகள் மற்றும் எதிர்கால கொரோனாவுக்கான உலகளாவிய தடுப்பூசியை அவ்வளவு சீக்கிரம் தயாரிக்க இயலாது என்று நம்புகிறார்கள். ஆனால் சூப்பர் தடுப்பூசியை உருவாக்குவது சாத்தியம் என்று புதிய ஆராய்ச்சி கூறுகிறது.
மேலும் படிக்க | Health Alert! மறதி, குழப்பம் அதிகமாக இருக்கிறதா; Vitamin B குறைபாடு இருக்கலாம்!
உலகளாவிய தடுப்பூசியில், வைரஸ் கிருமியில் எந்த திரிபுகளிலும் மாறாத பகுதியை அடையாளம் கண்டு, அதனை தாக்கும் நோயெதிர்ப்பு சக்தியை கொண்ட தடுப்பூசியை உருவாக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள். அமெரிக்க இராணுவத்தின் வால்டர் ரீட் ஆர்மி இன்ஸ்டிடியூட் ஆப் ரிசர்ச் நடத்திய ஆய்வில், அனைத்து வகையான கொரோனா வைரஸையும் தடுக்கும் தடுப்பூசியின் முதல் கட்ட முடிவுகளுக்காகக் காத்திருக்கிறது. இது தவிர, DIOSyn என்ற நிறுவனமும் இதே போன்ற தடுப்பூசியை உருவாக்கி வருகிறது. யுனிவர்ஸ் தடுப்பூசி விரைவில் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | Kidney Health: சிறுநீரகத்தை டேமேஜ் செய்யும் இந்த '5' உணவுகளை தவிர்க்கலாமே..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR