வெல்லம் பல வித நோய்களிலிருந்து பாதுகாக்கும் கவச உணவு என்றால் மிகையில்லை. உங்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க சர்க்கரைக்குப் பதிலாக வெல்லத்தைப் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
வெல்லத்தில் வைட்டமின்-ஏ, வைட்டமின்-பி, சுக்ரோஸ், குளுக்கோஸ், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம், மெக்னீசியம் ஆகிய விட்டமின்கள் மற்றும் கனிமங்கள் உள்ளன. உடல் எடையை குறைப்பதும் முதல் ரத்த சோகையை நீக்குவது வரிஅ இதில் எக்கசக்கமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன
உணவில் வெல்லம் சேர்ப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்
1. இரத்த சோகை நீங்கும்
இரத்த சோகை நீங்க, பீட்ரூட், மாதுளை மற்றும் பச்சை காய்கறிகளை சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இது மட்டுமல்ல இரத்த சோகையை வெல்லமும் போக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? வெல்லம் உடலில் இரத்தத்தை பெருக்குகிறது என்பதை மிகச் சிலரே அறிவார்கள். வெல்லத்தில் இரும்புச்சத்து அபரிமிதமாக நிறைந்துள்ளது.
மேலும் படிக்க | Health Alert: சாப்பிட்ட பின் ஒரு போதும் செய்யக் கூடாதவை
2. இரத்த அழுத்தத்தை சீராக்கும்
வெல்லத்தில் நிறைந்துள்ள இரும்புச்சத்து இரத்த அழுத்தத்தை (High Blood Pressure) ஒழுங்குபடுத்துவதில் பெரும் உதவியாக இருக்கும். இதன் மூலம், உயர் ரத்த அழுத்த பிரச்சனையையும் தவிர்க்கலாம். வெல்லத்தில் காணப்படும் பொட்டாசியம் மற்றும் சோடியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
3. ஜீரண சக்தியை மேம்படுத்தும்
வெல்லம் செரிமானத்தை மேம்படுத்துகிறது. செரிமானத்துக்கு உதவக்கூடிய என்சைம்களை தூண்டி, சீக்கிரம் செரிமானம் ஆக உதவுகிறது. அதுமட்டுமல்லாது கிட்னி சம்பந்தப்பட்டப் பிரச்சினைகள் ஏற்படாமல் வெல்லம் பாதுகாக்கிறது.
4. உடல் எடை குறையும்
வெல்லத்தில் இருக்கும் பொட்டாசியம் உடலில் இருக்கும் எலக்ட்ரோலைட் அளவை சரியான நிலையில் வைத்திருக்க உதவுகிறது. நாள் முழுவதும் வளர்சிதை மாற்றத்தை தூண்டி உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலையும் வழங்குகிறது. இதனால் உடல் எடை குறைய முக்கிய பங்கு வகிக்கிறது.
5. தூக்கமின்மை பிரச்ச்னை நீங்கும்
இரவு தூங்கும் முன் பாலுடன் வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தூக்கம் நன்றாக வரும். இது தவிர, காலையில் எழும் போது மிகவும் உற்சாகமாக உணரலாம்.
6. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இரவில் தூங்கும் முன் வெல்லம் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வெல்லம் வைட்டமின் சி சத்தும் நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் படிக்க | மிதமிஞ்சிய உப்பு உயிருக்கே ஆபத்து; எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | நரை முடி கருமையாக, முடி பளபளக்க இதை செய்தால் போதும்: சூப்பர் டிப்ஸ்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR