தட்டையான வயிறு வேண்டுமா? அப்போ தினமும் இதை மட்டும் செய்யுங்கள்

Reduce Belly Fat: வாழ்க்கை முறை மாற்றங்களே தொப்பை வர முக்கியக் காரணம். உணவு அதில் பெரும் பங்கு வகிக்கிறது. அனாலும் கட்டுப்படுத்தமுடியாத வாயால் கிடைத்த விளைவு தொப்பை. எனவே இதை தினமும் செய்து வந்தால் தொப்பை குறையும் அதியசத்தை காணலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 2, 2023, 04:33 PM IST
  • நம் உடலின் செயல்பாட்டுத் தன்மை குறைந்து விடுகிறது.
  • எடை குறைய சிலர் உடற்பயிற்சி மையத்துக்குச் சென்று வருகின்றனர்.
  • தினமும் 30 நிமிடம் இந்த பயிற்சியை செய்து வந்தால், தொப்பை குறையும்.
தட்டையான வயிறு வேண்டுமா? அப்போ தினமும் இதை மட்டும் செய்யுங்கள் title=

தொப்பை கொழுப்பை குறைக்கும் உடற்பயிற்சி: யாருக்காவது தன்னுடைய தொப்பை சதை தொங்கிக் கொண்டு இருந்தால் பிடிக்குமா? ஆனால் இன்றைய சூழலில் நாம் அனைவரும் அதைத் தான் எதிர்கொண்டு வருகிறோம். இதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவு, மோசமான வாழ்க்கை முறை மற்றும் நாள் முழுவதும் மடிக்கணினி முன் அமர்ந்திருப்பது தான். இதனால் நம் உடலின் செயல்பாட்டுத் தன்மை குறைந்து விடுகிறது. சிலர் இதைச் சரி செய்ய உடற்பயிற்சி மையத்துக்குச் சென்று வருகின்றனர். சிலரோ காலையிலும் மாலையிலும் ஜாக்கிங் செல்கின்றனர். எனவே நீங்களும் இந்த தொப்பை கொழுப்பு தொல்லையில் இருந்து விடுபட விரும்பினால், சில பயிற்சிகளைப் பற்றி இன்று நாங்கள் கூற உள்ளோம். இது உங்களை பிட்டாக வைத்திருக்க உதவும். எனவே தினமும் 30 நிமிடம் இந்த பயிற்சியை செய்து வந்தால், தொப்பை தட்டையாக மாறிவிடும்.

இந்த முறைகளால் தொப்பையை போக்கலாம்

லெக் அப் வால் போஜ்
இந்த யோகா செய்வதன் மூலம் தொப்பை கொழுப்பை சுலபமாக போக்கலாம். இதைச் செய்ய, முதலில் உங்கள் தரையில் படுத்து, உங்கள் கால்களை நேராகவும் ஒன்றாகவும் வைக்கவும். பின்னர் உங்கள் கைகளை உங்களை நோக்கி திருப்பி, உங்கள் கால்களை நேராக வைக்கவும். உங்கள் பிட்டம் தரையிலிருந்து வெளியேறும் வரை அவற்றை உயர்த்தவும். இதற்குப் பிறகு, மெதுவாக உங்கள் கால்களை தரையில் கொண்டு வாருங்கள். பின்னர் 2-3 வினாடிகள் இடைநிறுத்தி, பின்னர் உங்கள் கால்களை மேலே உயர்த்தவும். இந்த எளிதான லெக் அப் வால் போஸை முயற்சிக்கவும்.

மேலும் படிக்க | சூட்டை தணிக்கும் துளசி விதை..! கொட்டி கிடக்கும் கோடி மகத்துவம்

கும்பகாசனம்
கும்பகாசனம் மூலம் தொப்பையை பெருமளவு குறைக்கலாம். இந்த பயிற்சியின் அடிப்படையே கை, கால் விரல்கள் மற்றும் உடல் எடையை பேலன்ஸ் செய்வது தான். வழக்கமாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இந்த பொசிஷன் தெரியும். இதை உடற்பயற்சியில் பிளாங் என்று சொல்வார்கள். முதலில் கால்களையும் கைகளையும் நீட்டியபடி குப்புறப் படுத்துக் கொள்ள வேண்டும். பிறகு கைகளை தலையில் ஊன்றி தலையை இடுப்பு வரை உயர்த்த வேண்டும். பின் மெதுவாக தொடைகளை உயர்த்தி கால்விரல்களை தலையில் ஊன்றியபடி இருக்க வேண்டும். இந்த நிலையிலேயே உங்களுடைய முழு எடையையும் நீங்கள் பேலன்ஸ் செய்ய வேண்டும். சிறிது நேரம் இதேநிலையில் இருந்துவிட்டு பின் இயல்பு நிலைக்குத் திரும்பலாம். இதை 2 முதல் 3 முறை செய்யலாம், இதை செய்வதன் மூலம் தொப்பை கொழுப்பை போக்கலாம்.

நவாசனம்
சமஸ்கிருதத்தில் நவ என்றால் படகு, ஆசனம் என்றால் நிலை என்று பொருள். படகு போன்ற நிலையைக் கொண்டிருப்பதால், இந்த ஆசனம் நவாசனம் என்று அழைக்கப்படுகிறது. நவாசனத்தை ஒருவர் தினமும் செய்து வந்தால், அது உடலின் சமநிலையைப் பராமரிக்க உதவும். இடுப்பு மூட்டு, கால்கள் போன்றவற்றை வலுவாக்குவதோடு, நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது. உங்கள் கைகளை தரையில் அழுத்தி, உங்கள் இடுப்புக்கு சற்று பின்னால், கால்களை விரல்கள் நோக்கி சுட்டிக்காட்டி கைகளை வலுப்படுத்த வேண்டும். சிறிது பின்னால் சாய்ந்து உட்காருங்கள். உங்கள் முதுகு நேராக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்கள் உடல் முன்பகுதியை நீட்டிக்க தொடர்ந்து செய்யுங்கள்.

தனுராசனம்
உடல் எடையை குறைக்க தனுராசனம் மிகவும் பயனுள்ள மற்றும் எளிதான யோகா ஆகும். இது தொப்பையை குறைப்பது மட்டுமல்லாமல், முழு உடலின் எடை சமநிலையையும் மேம்படுத்துகிறது. இதைச் செய்ய, விரிப்பில் குப்புறப் படுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இரு கைகளையும் உடலோடு ஒட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இரு கால்களையும் முழங்கால்களை மடக்கி ஒன்று மாற்றி ஒன்றாகத் தூக்கிக் கொண்டு சில முறை பயிற்சி செய்துவிட்டுப் பின்னர் இரு கால்களையும் முழங்காலை மடக்கித் தூக்கிய வண்ணமே இரு கைகளாலும் பிடிக்க வேண்டும். அப்படியே கால்களைத் தலைக்கு நேராகக் கொண்டு வந்த வண்ணமே தலையையும், நெஞ்சுப் பகுதியையும் மேல் நோக்கித் தூக்கிக்கொள்ள வேண்டும். இரு பாதங்களும் மேலே சேர்ந்த வண்ணம் இருக்க வேண்டும். இதைச் செய்த பிறகு, உடலின் வடிவம் வில் போல தோற்றமளிக்கத் தொடங்குகிறது, அதனால்தான் இது தனுராசனம் என்று அழைக்கப்படுகிறது. இதை ஒரு நாளைக்கு 10-15 முறை செய்யலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அதிகமானால் ஆபத்து: இந்த அறிகுறிகள் தோன்றும், ஜாக்கிரதை!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News