மருத்துவக் குணங்கள் நிறைந்த ஓமத்தின் பயன்கள் என்ன

ஓமம் நம் உடலுக்கு எவ்வளவு நன்மைகளை  தருகின்றது. அதனால் என்ன பயன் என்பதை இந்த பதிவில் காண்போம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 20, 2021, 06:09 PM IST
மருத்துவக் குணங்கள் நிறைந்த ஓமத்தின் பயன்கள் என்ன title=

ஓமம் (Trachyspermum copticum) மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு செடியாகும். இந்தியாவில் மலைதேச பகுதிகளில் பயிராகின்ற நல்ல மனமுள்ள செடி வகையினை சேர்ந்த தாவரத்தின் விதையை தான் ஓமம் (carom seeds in tamil) என்று நாம் சொல்கிறோம். ஓமத்தில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. அதோடு ஓமத்தில் மருத்துவ குணங்கள் நிறைய உள்ளது. இந்த ஓமத்தின் மருத்துவ பயன்களை என்னவென்று இந்த பதிவில்
பார்போம்.

* ஓமத்தை (Ajwin) நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும். உடல் தேறாமல் இருப்பவர்கள் இந்த ஓம நீரை குடித்து வந்தால் உடல் பலமாகும்

ALSO READ | இயற்கை குளிர்பானம் இளநீரின் பயன்கள் -ஒரு பார்வை!

* தொண்டையில் புகைச்சல், இருமல் ஏற்பட்டால் ஓமம், முக்கடுகு, சித்தரத்தை, கடுக்காய் தோல், திப்பிலி வேர்,  அக்கிரகாரம் இவைகளின் பொடி செய்த்து சம அளவு எடுத்து அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை கொடுத்து வந்தால் தொண்டை புகைச்சல் மற்றும் இருமல் குணமாகிவரும். 

* குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அஜீரணக் கோளாறு, வயிற்று வலி, வயிற்றுப் பொருமல் உள்ளவர்கள் ஒரு லிட்டர் தண்ணீரில் நூறு கிராம் ஓமத்தை கலந்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் வயிற் பிரச்சனைகள் நீங்கும்.

* வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகள் தீரவும், சாப்பிட்ட உணவு சீரணமாகவும், ஓமத்தை கஷாயமாக்கி அருந்தி வந்தால் நல்லது. இதனால் இரும்பல் குணமாகும்.

* தண்ணீரில் சிறுது ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் தேங்காய் எண்ணெயை விட்டு கொதிக்க விட்டு வடிகட்டி அதனுடன் கற்பூரப் பொடியைக் கலந்து  இடுப்பில் நன்றாகத் தேய்த்து வந்தால் இடுப்பு வலி குணமாகிவரும்.

ALSO READ | இளநீர் மற்றும் கருப்பட்டி குளிர்பானம் தயாரிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News