இயற்கை நமக்கு அளித்திருக்கும் கொடை கணக்கில் அடங்காதது. நாம் சுவைக்காக உண்ணும் உணவாக இருந்தாலும் சரி, ஆரோக்கியத்திற்காக உண்ணும் உணவாக இருந்தாலும் சரி, அவை தான் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் தீர்மானிக்கின்றன.
அதிலும் அந்தந்த பருவத்தில் கிடைக்கும் காய் கனிகளை உண்பது உடலுக்கு நன்மை தரக்கூடியது. நம் நாட்டு சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப விளையும் காய்கறிகளையும், பழங்களை உண்டாலே போதும், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
கோடைக்காலத்தில் நம் ஊரில் எளிதாக கிடைப்பது நுங்கு. நுங்கு மிகவும் சுவையானது மட்டுமல்ல, எண்ணற்ற நன்மைகள் நிறைந்தது. கோடையில் உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்த்தைக் கொண்டுள்ளது நுங்கு.
Also Read | 16 மனைவிகள் 151 குழந்தைகள், அடுத்த திருமணத்திற்கு ரெடி!
உடலின் கனிமச்சத்து மற்றும் சர்க்கரையின் அளவை சீராக வைத்து, சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு பெரிதும் உதவியாக இருப்பது நுங்கு.
நுங்கில், வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களும் உள்ளன. இதில் அடங்கியுள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, உடல்வெப்பத்தை தணிக்கக் கூடியது.
வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கக்கூடியது நுங்கு. கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் உண்டு.
Also Read | மனைவி, ஆசைநாயகி இருவருக்கும் மரண காப்பீட்டுத் தொகை பிரித்து கொடுக்கப்பட்ட விநோதம்
குடல் புண்ணை ஆற்றும் தன்மை கொண்ட நுங்கு, கோடையில் வெயில் கொப்பளம் வராமல் பாதுகாக்கும். நுங்கை சாப்பிட்டால் செரிமானம் அதிகரிப்பதுடன், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். ரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மருந்தாகும்.
நுங்கு நீரை தொடர்ந்து அருந்தி வந்தால், கோடைக்காலத்தில் ஏற்படும் வேர்க்குரு நீங்கும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR.