Skin Care Tips: கோடையில் உங்கள் பையில் இருக்க வேண்டிய 3 முக்கிய பொருட்கள்

கோடையில் வெப்பநிலை அதிகரித்து நம் உடலுக்கு பலவித பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. வெப்பம் மற்றும் வெப்ப அலைகள் சருமத்தை அதிகமாக பாதிக்கின்றன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 1, 2021, 03:39 PM IST
  • கோடையில் வெப்பநிலை அதிகரித்து நம் உடலுக்கு பலவித பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன.
  • வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன் சன்ஸ்கிரீனை உங்கள் பையில் வைத்துக்கொள்ளவும்.
  • கோடையில் வெளியே செல்வதால், தூசி, மண் மற்றும் மாசுபாடு உங்கள் முகத்தில் பலவித அழுக்கை படியச்செய்யும்.
Skin Care Tips: கோடையில் உங்கள் பையில் இருக்க வேண்டிய 3 முக்கிய பொருட்கள்  title=

Health News: கோடையில் வெப்பநிலை அதிகரித்து நம் உடலுக்கு பலவித பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. வெப்பம் மற்றும் வெப்ப அலைகள் சருமத்தை அதிகமாக பாதிக்கின்றன. எனினும், பலருக்கு பல வித பணிகளுக்காக வீட்டை விட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இந்த நேரங்ளில் என்ன செய்வது?

வெளியே உள்ள வெப்பத்தை குறைப்பது நம் கையில் இல்லை. ஆனால் நமது சருமத்தை வெப்பம் மற்றும் சூடான காற்றிலிருந்து பாதுகாக்க சில நடவடிக்கைகளை நாம் எடுக்கலாம். நீங்கள் கோடைக்காலத்தில் வெயிலில் வீட்டை விட்டு வெளியே செல்கிறீர்கள் என்றால், கண்டிப்பாக இந்த 3 விஷயங்களை உங்கள் பையில் வைத்திருப்பது மிகவும் நல்லது.

வெயிலில் வெளியே செல்வதற்கு முன் இந்த 3 விஷயங்கள் மீது கவனம் தேவை.

அனைத்து வகையான சருமங்களும் (Skin) வெயிலிலும் வெப்பத்திலும் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றன. ஆனால் எண்ணெய் பசை உள்ள சருமம் உள்ளவர்களுக்கு, இந்த பருவத்தில் தோல் தொடர்பான பிரச்சினைகள் அதிகமாக வருவதுண்டு. சருமத்தில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோடைக்காலத்தில், சருமத்தின் துளைகள் அடைக்கப்பட்டு முகப்பரு, கரும்புள்ளிகள், வெள்ளை திட்டுகள் போன்ற பிரச்சினைகள் வருகின்றன.

எனவே, அனைத்து விதமான தோல் வகைகளைக் கொண்டிருப்பவர்கள், குறிப்பாக எண்ணெய் பசை உள்ள சருமம் உள்ளவர்கள் கண்டிப்பாக வெளியே செல்லும்போது, இந்த 3 விஷயங்களை வைத்திருப்பது நல்லது. அவற்றைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

1. கோடையில் சன்ஸ்கிரீன் பயன்பாடு (Sunscreen Use):

வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன் சன்ஸ்கிரீனை உங்கள் பையில் வைத்துக்கொள்ளவும். நீங்கள் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு 20 முதல் 30 நிமிடங்களுக்கு முன்பு சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும். ஆனால் வெயிலில் வியர்வை வருவதால், இது குறைந்து கொண்டே இருக்கும். ஆகையால் நீங்கள் உங்கள் பையில் சன்ஸ்கிரீனை எப்போதும் வைத்திருக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். அப்படி இருந்தால், நீங்கள் தேவைப்படும்போது அதைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் தீங்கு விளைவிக்கும் கதிர்களிடமிருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

ALSO READ: உங்கள் முகத்தை வெறும் 15 நிமிடத்தில் ஜொலிக்க வைக்க இதை செய்யுங்கள்!!

2. மாய்ஸ்சரைசர் பயன்பாடு

வெப்பம் காரணமாக, தோல் மிகவும் சோர்வானதாகி விடுகிறது. ஏனெனில் சூரிய ஒளியும் (Sunlight) வெப்பமும் உங்கள் சருமத்திலிருந்து தேவையான ஈரப்பதத்தையும் ஊட்டச்சத்தையும் பறிக்கிறன. உலர்ந்த அல்லது உயிரற்றதாக தோல் இருந்தால், அப்போது கண்டிப்பாக மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள், உங்கள் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குங்கள்.

3. ஃபேஸ்வாஷ் மற்றும் ஸ்க்ரப் பயன்பாடு:

கோடையில் (Summer) வெளியே செல்வதால், தூசி, மண் மற்றும் மாசுபாடு உங்கள் முகத்தில் பலவித அழுக்கை படியச்செய்யும். அதனால்தான் உங்கள் பையில் ஃபேஸ் வாஷ் அல்லது ஸ்க்ரப் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். இதன் மூலம் உங்கள் முகத்தை சுத்தம் செய்து தூசி, அழுக்கு மற்றும் இறந்த செல்களை நீக்கி சுத்தமாகவும் பளபளப்பாகவும் வைத்துக்கொள்ளலாம். 

இங்கே வழங்கப்பட்ட தகவல்கள் எந்தவொரு மருத்துவ ஆலோசனைக்கும் மாற்று அல்ல. இது கல்வியின் நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.

ALSO READ:உங்கள் சருமத்தை மென்மையாகவும், ஒளிரும் வகையில் வைத்துக் கொள்ள ஒரு எளிய வழி...

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News