இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு நோய் என்பது சாதாரண ஒன்றாக மாறிவிட்டது, மக்களின் மோசமான வாழ்க்கை முறை காரணமாக இப்பொழுது சிறுவயது முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நீரிழிவு நோய் வர தொடங்கிவிட்டது. இது ஒரு பொதுவான நோயாக கருதப்பட்டாலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் அதன் கஷ்டம் என்னவென்பதை உணர முடியும். இந்நோய் உடலின் இன்சுலின் மற்றும் இரத்த சர்க்கரை அளவை பாதிக்கிறது, கணையத்தால் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாமல் போகிறது. நீரிழிவு நோய்க்கு நமது உணவுமுறை, உடல் உழைப்பின்மை, மரபணு போன்ற பல காரணிகள் காரணங்களாக அமைகின்றது. நீரிழிவு நோய் உயிருக்கு ஆபத்து என்று கருதப்பட்டாலும் நாம் இதனை திறம்பட கையாள்வதன் மூலம் நமது ஆயுளை நீட்டிக்க முடியும். ஆயுர்வேதத்தில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், அவை வராமல் தடுக்கவும் பல மூலிகை சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படுகிறது, நமது உணவில் ஆயுர்வேதத்தில் கூறப்படும் சில மூலிகை பொருட்களை சேர்த்துக்கொள்வதன் மூலம் நீரிழிவு நோயின் தாக்கத்தை குறைக்க முடியும்.
மேலும் படிக்க | நோய்களை ஓட விரட்டும் இந்த ‘மேஜிக்’ மசாலாக்கள் தினசரி உணவில் இருக்கட்டும்!
1) திரிபலா:
ஆயுர்வேதத்தில் திரிபலாவின் பலவிதமான ஆரோக்கிய நன்மைகள் கூறப்பட்டுள்ளது, அதில் முக்கியமானது இவை உடலின் இரத்தத்திலுள்ள குளுக்கோஸ் அளவைக் குறைக்கிறது. இது கணையத்தின் செயல்திறனை தூண்டி இன்சுலின் சுரப்பை ஊக்குவிக்கிறது.
2) வேம்பு:
பழங்காலந்தொட்டே வேப்பிலையை பல நோய்களை தீர்க்கும் மருந்தாக மக்கள் கருதி வருகின்றனர், மொத்த மரமுமே பலவித நன்மைகளை கொண்டுள்ளது. வேப்ப இலைகளை சுத்தமாக அலசி அதனை சற்று நசுக்கி தண்ணீரில் சேர்த்து கொதிக்கவைத்து சாறை வடிகட்டி அந்த டிகாஷனை எடுத்து குடிக்க வேண்டும். குளுக்கோஸால் ஏற்படும் ஹைப்பர் கிளைசீமியாவுக்கு சிகிச்சையளிப்பதற்கான மிகச் சிறந்த சிகிச்சைகளில் இதுவும் ஒன்றாகும்.
3) நெல்லிக்காய் :
பொதுவாக நெல்லிக்காய் சாப்பிடுவது இளமை தோற்றம், அடர்த்தியான முடி மற்றும் நோயெதிர்ப்பு சக்தி போன்றவற்றை ஊக்குவிப்பதாக அறிந்திருக்கிறோம். நெல்லிக்காயில் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியான வைட்டமின் சி சத்து நிறைய இருப்பதால், ஆயுர்வேத மருத்துவர்கள் இதனை நீரிழிவு சிகிச்சைக்கு பரிந்துரைக்கின்றனர்.
4) பாகற்காய் சாறு:
இயற்கையிலேயே இனிப்பான உணவுப்பொருட்களை விட கசப்பான உணவுப்பொருட்கள் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக பாகற்காய் சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது, டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் சாறு சிறந்த மருந்தாக பயன்படுகிறது என்று ஆயுர்வேதத்தில் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | இரத்த சோகைக்கு எதிரி! நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கற்றாழை சாறு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ