கொரோனாவின் கோர தாண்டவம் தொடங்கி ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இன்னும் அதன் தக்கம் குறைந்தபாடில்லை. உலகையே ஆட்டி படைக்கும் கொரோனா, தற்போது எவரெஸ்ட் சிகரத்தையும் அடைந்து விட்டது.
நேபாள நாட்டில், உலகிலேயே மிக உயரமான மலைச்சிகரமான, இமயமலையில் உள்ள எவரெஸ்ட் மலைச் சிகரம் அமைந்துள்ளது. இந்த மலைச் சிகரத்தை எட்டி சாதனை படைக்க, உலகெங்கிலும் இருந்து ஏராளமான மலையேறும் வீரர்கள் அங்கு செல்வார்கள்.
கடந்த ஆண்டு கொரோனா பரவல் (Corona Virus) தொடங்கியதை அடுத்து, உலகெங்கிலும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட, நாடுகளுக்கு இடையிலான விமான போக்குவரத்து, உள்நாட்டு விமான போக்குவரத்து என கிட்டத்தட்ட உலக இயக்கம் ஸ்தபித்தது எனலாம்.
அந்நிலையில், நேபாள அரசும், எவரெஸ்ட் மலைச்சிகரம் ஏற, அரசு தடை விதித்தது. இதன் காரணமாக அந்த நாட்டின் சுற்றுலா துறை மூலம் கிடைக்கும் வருமானம் பாதிக்கப்பட்டதோடு, சுற்றுலா துறையை சார்ந்திருந்த பல லட்சம் பேர் வேலையிழந்தனர்.
ALSO READ | Covishield, Covaxin: கோவிஷீல்ட், கோவேக்ஸின் தடுப்பூசி விலைகள் அதிகரிப்பு
சுற்றுலா துறைக்கு ஏற்பட்ட பாதிப்பை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம், மலை ஏற்றம் உள்ளிட்ட சாகச பயணங்களை மேற்கொள்ளலாம் என மீண்டும் அனுமதி அளித்ததது.
கொரோனா இரண்டாவது அலை (Corona Second Wave) பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், எவரெஸ்ட் சிகர மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த நார்வே நாட்டை சேர்ந்த மலை ஏறும் வீரர் நெஸ் என்பவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மலைமுகட்டில் சிக்கி தவித்த, அந்த மலை ஏற்ற வீரர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு, காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிக உயரம் கொண்ட மலைச்சிகரத்தில் ஏறும் ஏற்கனவே, மூச்சி விடுவதில் சிரமம் இருக்கும் நிலையில், நோய் தொற்று ஏற்பட்டால் சுவாசிப்பது மிகவும் கடினம் என்பதால், அவருக்கு உடல் நிலை மோசமாகியுள்ளது.
தற்போது சிகிச்சையில் உள்ள நார்வே நாட்டு மலையேற்ற வீரர், சிகிச்சைக்கு பின் தான் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ALSO READ | கொரோனா காலத்தில் உங்கள் வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய 5 மருத்துவ கருவிகள்