Weight Loss Tips: இன்றைய காலகட்டத்தில் அனைவருமே தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார்கள். உடல் எடை அதிகரிக்காமல் இருக்க பலரும் பல வித முயற்சிகளையும் மேற்கொள்கிறார்கள். எனினும் இன்று பரவலாக இருக்கும் தவறான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை பழக்கங்களால் உடல் எடை மிக வேகமாக அதிகரித்து விடுகிறது. உடல் எடையை கட்டுப்படுத்த பலர் பலவித நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். சிலர் ஜிம் செய்கிறார்கள், சிலரோ கடுமையான உணவு கட்டுப்பாடுகளையும் மேற்கொள்கிறார்கள். பல சமயங்களில் இவற்றாலும் தேவையான விளைவுகளை பெற முடிவதில்லை
இன்னும் சில எளிய மற்றும் இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இயற்கையான வழிகளில் உடல் எடையை குறைக்க நாம் முயற்சிக்கும் போது எந்த வித பக்கவிளைவுகளும் நமக்கு ஏற்படாது. உடல் எடையை குறைகக் முற்படும் போது நமது உணவில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.
பொதுவாக தொப்பை கொழுப்பை குறைக்கவும் (Belly Fat) உடல் எடையை குறைக்க கார்போஹைட்ரேட்ஸ், கொழுப்புகள் ஆகியவற்றை தவிர்த்து அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் உடல் எடையை குறைகக் நினைப்பவர்கள் சில பழங்களை உட்கொள்ளக் கூடாது என்பது பலருக்கு தெரிவதில்லை. அனைத்து பழங்களும் உடல் எடையை குறைக்க பயன்படுவதில்லை. சில பழங்களில் கலோரி அளவு அதிகமாக இருப்பதால் (High Calorie Fruits) இவற்றால் உடல் எடை அதிகமாவதும் உண்டு. ஏனெனில் இந்த பழங்களில் இனிப்பு தன்மையும் கலோரிகளும் அதிகமாக உள்ளன.
உடல் பருமன் அதிகமாக உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய சில பழங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்
வாழைப்பழம்
ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள வாழைப்பழத்தில் (Banana) கலோரிகளும் அதிகமாக (High Calories) உள்ளன. இதை சமச்சீரான உணவின் அங்கமாக்க, சரியான அளவில் உட்கொள்வது அவசியமாகும்.
மாம்பழம்
மாம்பழத்தில் (Mango) இனிப்பு சுவை அதிகமாக இருப்பதோடு கலோரிகளும் அதிகமாக உள்ளன. இதை அதிகமாக உட்கொள்வது உடல் எடையை அதிகரிக்கும்
அவகேடோ
அவகேடோ (Avocado) பழத்தில் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகமாக இருந்தாலும் இவற்றில் கலோரிகளும் அதிகமாக உள்ளன. ஆகையால் இதை உட்கொள்ளும் போது கலோரி உட்கொள்ளலின் அளவை கணக்கிட்டு உட்கொள்ள வேண்டும். சரியான அளவில் இதை உட்கொண்டால் இதில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் நம் உடலுக்கு கிடைப்பதோடு, உடல் எடையும் அதிகரிக்காமல் (Weight Loss) பார்த்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க | அடிக்கடி முதுகுவலியால் அவதியா? ‘இவை’ காரணங்களாக இருக்கலாம்..
திராட்சை
திராட்சை (Grapes) பழங்களில் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது. இதில் உள்ள இயற்கையான சர்க்கரை உடலில் எளிதாக கலந்து விடும். இதன் மூலம் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது
உலர் பழங்கள்
உலர் பழங்கள் (Dry Fruits) உடல் ஆரோக்கியத்திற்கு நல்லவை என்றாலும் இவற்றை உட்கொண்டால் கலோரி அளவுகள் அதிகமாவதுடன் உடல் எடை அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளன.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பழங்களும் உடல் ஆரோக்கொயத்திற்கு ஏற்றவை என்றாலும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இவற்றை சரியான அளவில் உட்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | மருந்தே உணவாகாமல் இருக்க, உணவையே மருந்தாக மாற்றினால்? 100 ஆண்டு ஆரோக்கியம் கேரண்டி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ