புதுடெல்லி: துக்ளக் பத்திரிகையின் (Thuglak) ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி ஜீ மீடியாவுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அவர் கூரிய கருத்துகள் தமிழக அரசியலில் பல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஏன் பிஜேபி முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளவில்லை? இந்த மில்லியன் டாலர் கேள்விக்கு துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தியின் கருத்து என்ன?
கேள்வி: தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி பழனிசாமியை தேசிய ஜனநாயக கூட்டணி முதலமைச்சர் ஏன் முறையாக ஏற்றுக்கொள்ளவில்லை? முதல்வர் வேட்பாளர் பெயரை அறிவிப்பதில் தாமதப்படுத்துவது நல்லதா? ஏன் பாஜக தயங்குகிறது?
பதில்: முதல்வர் வேட்பாளரை முன்வைப்பதன் மூலம் அதிமுக (AIADMK) எந்தவித ஆதாயமும் பெற்றுவிடவில்லை. எடப்பாடி பழனிசாமி அதிமுக என்ற கட்சி உடைந்துவிட்டாமல் ஒன்றிணைத்துள்ளார், அது அவர்களுக்கு ஒரு நன்மை, ஆனால் அவருடைய பெயரை முன்னிறுத்துவதால் அவர்களுக்கு ஒரு வாக்கு கூட கிடைக்காது. அதேபோல், ஸ்டாலினை முன் நிறுத்துவதால் மட்டுமே திமுக-வுக்கு (DMK) வாக்கு கிடைக்காது.
இது தலைவர்களையோ, ஒரு நட்சத்திர வேட்பாளரையோ மையப்படுத்தும் தேர்தல் அல்ல, இது கட்சியை மையமாகக் கொண்ட தேர்தல். எனவே, முதல்வர் (CM) முகத்தை முன்வைக்காத பாஜக (BJP) மூலோபாயம் சரியானது தான். ஏனெனில் எடப்பாடி பழனிசாமியை (Edappadi Palaniswami) முதலமைச்சர் வேட்பாளராக முன் நிறுத்துவது தமிழக சட்டமன்ற தேர்தலின் வெற்றிக்கு காரணமாக இருக்காது.
Also Read | Rajinikanth: ”கடவுளின் எச்சரிக்கை” அறிக்கை, அரசியலுக்கு மட்டுமா, இல்லை சினிமாவுக்குமா?
கேள்வி: 2019 நாடாளுமன்றத் தேர்தல்களில் நடைபெற்றது போல, ஆட்சிக்கு எதிரான ஒரு திமுகவுக்கு ஆதரவாகுமா?
பதில்: இது ஒருதலைப்பட்ச தேர்தலாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை, ஏனெனில் திமுக அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்யும் என்று நிறைய பேர் பயப்படுகிறார்கள். இது மிகப் பெரிய கேள்வி. பொதுவாக தங்கள் வாக்குச்சீட்டைப் பயன்படுத்தாத ஒரு பகுதியினரைத்தான் நான் குறிப்பிடுகிறேன்.
அதிகாரத்திற்கு திமுக வந்தால் அது ஆபத்தானது என்று நினைப்பவர்கள் அவர்கள் தான். இந்தப் பிரிவைச் சேர்ந்த மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்தால், திராவிட முன்னேற்ற கழகத்திற்கு வெற்றி எளிதானது அல்ல. இதுவொரு வித்தியாசமான தேர்தலாக இருக்கும்.
மேலும் பல கணிக்க முடியாத காரணிகள் இந்தத் தேர்தலில் உள்ளன - ரஜினி NDA ஐ அப்பட்டமாக ஆதரித்தால் என்ன செய்வது? அவர் டிஜிட்டல் முறையில் பிரச்சாரம் செய்தால் என்ன செய்வது? தனது ரசிகர் மன்றத்தினர் தேர்தலில் பணியாற்ற அறிவுறுத்தினால் என்ன நடக்கும்? இந்த தேர்தலில் ரஜினி (Rajinikanth) என்ற காரணி உயிரிப்புடன் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
கேள்வி: கமல்ஹாசன் 2018 இல் தனது கட்சியை தொடங்கிவிட்டார். சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்களை தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளுக்கு முன்பே தொடங்கிவிட்டார். அவருக்கு தமிழக தேர்தலில் வாய்ப்பு எப்படி இருக்கும் இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
பதில்: கமலின் அரசியல் நிலைப்பாட்டை ஒரு திராவிடவாதியின் நிலைப்பாடாக நான் பார்க்கிறேன், அவர் திராவிடக் கட்சிகளின் கருத்தியல் பி-டீமைப் போன்றவர். வைகோ திராவிடக் கட்சிகளின் பி-அணியாக மாறிவிட்டார். ஆனால் ஏ-டீம் இருக்கும்போது, பி-டீம் என்ன நன்மையைப் பெறும்? எனவே, கமல்ஹாசன் (Kamal Hassan) கடுமையான திராவிட நிலைப்பாட்டை எடுத்துள்ளார். அவர் சமூகத்தின் அனைத்து பிரிவுகளின் வாக்குகளையும் எளிதில் பெற்றுவிட முடியாது. அவருக்கு பெரிய அளவில் வாக்குகள் கிடைக்காது, ஆனால் ஒரு தாக்கம் இருக்கும், இது திமுகவை (DMK) பாதிக்கும்.
கேள்வி: ரஜினியின் அறிக்கை அவர் அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னாலும், 2021 சட்டமன்றத் தேர்தலில் அவர் ஒரு குறிப்பிடத்தக்க காரணியாக இருப்பார் என்று சொல்கிறீர்களா?
பதில்: ரஜினி தனது அறிக்கையின் இறுதிப் பத்தியில் (29 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கை) சுட்டிக்காட்டியுள்ள விஷயத்தை கவனியுங்கள். "தேர்தல் அரசியலில் இறங்காமல், என்னால் முடிந்த வழிகளில் தமிழக மக்களுக்கு சேவை செய்வேன்" என்று ரஜினி கூறியுள்ளார். அவர் குறிப்பிடும் சேவை, மற்றவர்களுக்கு உதவுவதைப் பற்றி இல்லை என்று அனைவருக்கும் தெரியும். ரஜினி சொல்லும் சேவை அரசியல் சார்ந்த தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்.
Also Read | AIADMK vs BJP: முதல்வர் வேட்பாளரை நாங்கள் தான் முடிவு செய்வோம் -பாஜக உறுதி
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR