CBSE Board 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கெட்ட செய்தி! என்ன தெரியுமா?

2020-21 கல்வியாண்டில் ஆன்லைன் வகுப்புகள், பள்ளியில் நடத்தப்படும் ப்ரீ-போர்ட் தேர்வுகள், மற்றும் அரை ஆண்டு தேர்வுகளை எழுதாத மாணவர்கள் அப்செண்ட் என்று கருதப்படுவார்கள். அதாவது அவர்கள் தேர்வு எழுதாதவர்கள், பெயில் ஆனவர்கள் என்று கருதப்படுவார்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 9, 2021, 08:11 PM IST
  • சிபிஎஸ்இ 12ம் வகுப்பு வாரிய தேர்வு 2021 முடிவு ஜூலை 31 அன்று வெளியிடப்படும்
  • சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு 2021 முடிவு ஜூலை 15 ஆம் தேதி அறிவிக்கப்படும்
  • 10, 12 வாரியத் தேர்வு 2021 முடிவுகளை தயாரிக்கும் பணி மும்முரம்
CBSE Board 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கெட்ட செய்தி! என்ன தெரியுமா? title=

புதுடெல்லி: இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகள் இல்லை என்று அறிவித்ததும் குதூகலமான மாணவர்களில் சிலருக்கு இது கெட்ட செய்தியாக இருக்கும். கொரோனா பரவலால் கடந்த கல்வியாண்டில் பெரும்பகுதி ஆன்லைன் வகுப்புகளில் கழிந்தது.

தேர்வுகளை நடத்த கொரோனாவின் இரண்டாம் அலை சிக்கல் ஏற்படுத்தியது. இதையடுத்து வாரியத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மதிப்பெண் கணக்கீடு குறித்தும் வழிகாட்டு நெறிமுறைகளை சி.பி.எஸ்.இ அறிவுறுத்தியிருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக வெளியிட்ட அறிவுறுத்தல்களில், 2020-21 கல்வியாண்டில் ஆன்லைன் வகுப்புகள், பள்ளியில் நடத்தப்படும் ப்ரீ-போர்ட் தேர்வுகள், மற்றும் அரை ஆண்டு தேர்வுகளை எழுதாத மாணவர்கள் அப்செண்ட் என்று கருதப்படுவார்கள் என்று சிபிஎஸ்இ (Central Board of Secondary (CBSE)) தெளிவுபடுத்தியுள்ளது.அதாவது அவர்கள் தேர்வு எழுதாதவர்கள், பெயில் ஆனவர்கள் என்று கருதப்படுவார்கள்.

Also Read | CBSE New Scheme: சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புகள் தேர்வு குறித்து புதிய அறிவிப்பு

இது தொடர்பான சுற்றறிக்கையை சிபிஎஸ்இ  அனுப்பியுள்ளது, அதன்படி, 2020-21 கல்வியாண்டில் ஆன்லைன் வகுப்புகள், பள்ளியில் நடத்தப்படும் ப்ரீ-போர்ட் தேர்வுகள், மற்றும் அரை ஆண்டு தேர்வுகளை எழுதாத மாணவர்கள் அப்செண்ட் என்று கருதப்படுவார்கள். அத்தகைய மாணவர்கள் தேர்வுக்கு எழுதுவதற்கான வாய்ப்பு கிடைக்குமா என்பதை வாரியம் தான் முடிவு செய்யவேண்டும்.  

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ஆண்டு முழுவதும் பள்ளியுடன் தொடர்பு கொள்ளாத மற்றும் எந்த பள்ளி தேர்வுக்கும் ஆஜராகாத மற்றும் ஆன்லைன் வகுப்புகளுக்கு கூட வராத மாணவர்கள், பள்ளியில் படிக்காதவரகளாக கருத வேண்டும் என்று தெரிவித்துள்ளது. எனவே அந்த மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படக்கூடாது, இதை பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும்.

ஆன்லைன் வகுப்புகள், பள்ளியில் நடத்தப்படும் ப்ரீ-போர்ட் தேர்வுகள் மற்றும் அரை ஆண்டு தேர்வுகள் தொடர்பான மாணவர்களின் தரவுகள் பள்ளி நிர்வாகத்துடன் கட்டாயம் இருக்கும். எனவே, அதன் அடிப்படையில் ஆன்லைன் வகுப்புகள், பள்ளியில் நடத்தப்படும் ப்ரீ-போர்ட் தேர்வுகளில் கலந்துக் கொள்ளாத மாணவர்கள் ஆப்செண்ட் என்று பள்ளி முடிவு செய்யவேண்டும் என்று சிபிஎஸ்இ (உத்தரகண்ட்) பிராந்திய இயக்குநர் ரன்வீர் சிங் தெரிவித்தார்.

Also Read | 12-ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்து சிபிஎஸ்இ விளக்கம்

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு, 12 வாரிய தேர்வுகள் 2021 முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும் என்று நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் காத்திருக்கின்றனர்.  இதனிடையில், சிபிஎஸ்இயுடன் இணைந்த பள்ளிகள், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுகின்றனவா என்பதை உறுதி செய்ய, பிராந்திய அதிகாரிகள் சோதனை மேற்கொள்ளவேண்டும் என்று CBSE அறிவுறுத்தியுள்ளது. 10, 12 வாரியத் தேர்வு 2021 முடிவுகளை தயாரிப்பதற்கான முயற்சிகளில் சிபிஎஸ்இ பள்ளிகள் மும்முரமாய் செயல்பட்டு வருகின்றன.  

"பள்ளிகள் தேர்வு முடிவை இறுதி செய்வதற்காக பணிகளில் ஈடுபட்டிருப்பது தொடர்பான உண்மையான தகவல்களை தெரிந்துக் கொள்வதற்காக, முன் அறிவிப்பு திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யவேண்டும். இந்த பொறுப்பை நிறைவு செய்வதற்கு, இந்த பணியில் ஈடுபடும் அனைத்து அதிகாரிகளும் வாரியத்தின் அட்டவணைக் கொள்கையுடன் தங்களை முழுமையாகப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம், ”என்று சிபிஎஸ்இ வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகள், கேந்திரியா வித்யாலா பள்ளிகள், நவோதயா வித்யாலா போன்ற அனைத்து வகை பள்ளிகளிலும் திடீர் ஆய்வை மேற்கொள்ளுமாறு சிபிஎஸ்இ தனது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

2021, ஜூலை 12க்குள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளிடம் சிபிஎஸ்இ கேட்டுக் கொண்டுள்ளது. சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு 2021 முடிவு ஜூலை 15 ஆம் தேதி அறிவிகப்படும். சிபிஎஸ்இ 12ம் வகுப்பு வாரிய தேர்வு 2021 முடிவு ஜூலை 31 அன்று வெளியிடப்பட உள்ளது.

Also Read | CBSE 12th Board Exam: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு 2021 ரத்து செய்யப்படாது எனத் தகவல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News