SBI Big Alert: இதை செய்யவில்லை என்றால் கட்டண பரிமாற்றம் நடக்காது, உடனே செய்யவும்

ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் (பிஎன்பி) இணைக்கப்பட்டுள்ளதால், இந்த வங்கிகளின் வாடிக்கையாளர்களும் தற்போதுள்ள தகவல்களில் தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 16, 2021, 03:54 PM IST
  • UBI மற்றும் OBC வாடிக்கையாளர்களுக்கு SBI முக்கிய அறிவிப்பை அளித்துள்ளது.
  • இது அந்த வங்கிகள் வங்கிகள் மேற்கொண்ட சமீபத்திய மாற்றங்கள் தொடர்பானதாகும்.
  • பி.என்.பி தற்போது சுமார் 11,000 கிளைகளையும், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களையும் கொண்டுள்ளது.
SBI Big Alert: இதை செய்யவில்லை என்றால் கட்டண பரிமாற்றம் நடக்காது, உடனே செய்யவும் title=

SBI, UBI, OBC, PNB latest news:யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா (UBI), ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் (OBC) மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ( PNB) ஆகிய வங்கிகளுக்கு இந்தியாவின் மிகப்பெரிய பொது கடன் வழங்குநரான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) ஒரு மிகப்பெரிய அறிவிப்பை அளித்துள்ளது. UBI மற்றும் OBC வாடிக்கையாளர்களுக்கு SBI அளித்த அறிவிப்பு இந்த வங்கிகள் மேற்கொண்ட சமீபத்திய மாற்றங்கள் தொடர்பானதாகும்.

இந்த அறிவிப்பு யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) ஆகியவற்றின் ஐ.எஃப்.எஸ்.சி குறியீட்டின் இணைப்பு பற்றியதாகும். 

ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் (பிஎன்பி) இணைக்கப்பட்டுள்ளதால், இந்த வங்கிகளின் வாடிக்கையாளர்களும் தற்போதுள்ள தகவல்களில் தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும். யுபிஐ மற்றும் ஓபிசியின் ஐஎஃப்எஸ்சி (IFSC) குறியீடுகள் பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளதால், ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் வங்கி வாடிக்கையாளர்கள் யுபிஐ மற்றும் ஓபிசி கணக்குகளில் இருக்கும் பயனாளிகளின் விவரங்களை நீக்க வேண்டும். "அவர்கள் அனைத்து டிஜிட்டல் சேனல்களிலும் புதிய ஐ.எஃப்.எஸ்.சி மற்றும் கணக்கு எண்களுடன் பயனாளிகளை மீண்டும் பதிவு செய்ய வேண்டும்" என்று எஸ்பிஐ ட்வீட் செய்தது.

ALSO READ: ஊழியர்கள் உஷார்: இனி 12 மணி நேர பணி நேரம், சம்பளம் குறையும், PF அதிகரிக்கும், விவரம் உள்ளே!!

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) மேலும் கூறுகையில், "கட்டண பரிமாற்றங்கள் நடக்காமல் போவதைத் தடுக்க, ஒருங்கிணைந்த வங்கிகளின் கணக்குகளுடன் பயனாளிகளை மீண்டும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என கூறியுள்ளது. 

ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியாவின் பழைய வாடிக்கையாளர்களின் பயனர் ஐடி மாறிவிட்டது என்று முன்னதாக பிஎன்பி ஒரு ட்வீட்டில் கூறியிருந்தது. ஓபிசி மற்றும் யுபிஐ வங்கிகளை பிஎன்பி உடன் இணைத்த பின்னர், எம்ஐசிஆர் கோட் மற்றும் ஐஎஃப்எஸ்சி குறியீடுகளும் ஏப்ரல் 1, 2021 முதல் மாறிவிட்டன.

பி.என்.பி, ஓரியண்டல் வங்கி மற்றும் யுனைடெட் வங்கி ஆகியவை ஒன்றிணைந்து இந்தியாவின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியாக உருமாறும் என்றும், இதன் வர்த்தக அளவு சுமார் ரூ .1795 லட்சம் கோடிக்கு மேல் (பி.என்.பி-ஐப் போல 1.5 மடங்கு) இருக்கும் என்றும் 2019 ஆகஸ்டில் கூறினார். பி.என்.பி தற்போது சுமார் 11,000 கிளைகளையும், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களையும் கொண்டுள்ளது என வங்கி ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது. 

ALSO READ: NSC Interest Rate: அஞ்சலக NSCக்கு உத்தரவாத வருமானம், புதிய வட்டி வீதம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News