இந்திய ரயில்வே சுற்றுலா, வரலாறு, பாரம்பரியம், ஆன்மீகம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு ரயில் சேவை ஏற்பாடு செய்து வருகிறது. பாரத் கவுரவ் ரயில் (Bharat Gaurav Train), நாட்டின் பல்வேறு சுற்றுலா தலங்கள், ஆன்மீக தலங்களுக்கு எளிதாக பயணம் மேற்கொள்ள சாமான்ய மக்களுக்கு பெரிதும் உதவும் வகையில் உள்ளது. இந்த திட்டத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், ரயில்களை இயக்குவது மட்டுமே ரயில்வே நிர்வாகத்தின் பொறுப்பு. இது தொடர்பாக சுற்றுல பயணிகளுக்கு தேவைப்படும் மற்ற சேவைகளை தனியார் நிறுவனங்கள் கவனிப்பார்கள். பல்வேறு பாரத் கவுரவ் ரயில்களை அறிவித்து ரயில்வே நிர்வாகம் பயணிகளை அவ்வப்போது மகிழ்வித்து வரும் இந்திய ரயில்வே, இப்போது தமிழகத்தின் தென் மாவட்ட மக்களை மகிழ்விக்கும் வகையில், தென்காசியில் தொடங்கி கோவா வரை செல்லும்.
IRCTC அறிமுகம் செய்துள்ள சுற்றுலா சிறப்பு ரயில் (Indian Railway) தென் தமிழகத்தை சேர்ந்த பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளது எனலாம். ஏனெனில், இந்த ரயில் தென்காசியில் தொடங்கி வடக்கு, மேற்கு மண்டலங்களில் பயணித்து கோவா செல்லும் வகையில் ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவா / மூகாம்பிகா & தெற்கு கனரா ஸ்பெஷல் (Goa/Mookambika & South Canara Special) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரயில், கொச்சுவேலியில் இருந்து மத்கோவன் வரை செல்கிறது. இதில் கொச்சுவேலி என்பது கேரளாவிலும், மத்கோவன் என்பதும் கோவாவிலும் இருக்கிறது. கேரளாவில் புறப்படும் இந்த ரயில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் வழியாக பயணிக்கிறது.
கோவா / மூகாம்பிகா & தெற்கு கனரா ஸ்பெஷல் ரயிலில் பயணிப்பதன் மூலம் உடுப்பி, மூகாம்பிகா கோயில், முருடேஸ்வர் கோயில், சிருங்கேரி, ஹோரனாடு ஆகிய ஆன்மீக தலங்களை தரிசிக்கலாம். இந்த சிறப்பு ரயில் வரும் டிசம்பர் 7ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு கேரளா மாநிலம் கொச்சுவேலியில் இருந்து புறப்பட்டு, கொல்லம், செங்கோட்டை, தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிபுலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னை எழும்பூரை சென்றடைகிறது. சென்னை எழும்பூரில் இருந்து காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, போடனூர், பாலக்காடு, ஷோரனூர், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, மங்களூரு ஜங்ஷன், உடுப்பி, கர்வார் வழியாக மத்கோவன் சென்றடைகிறது. டிசம்பர் 8ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு மத்கோவன் சென்றடையும்.
மறுமார்க்கத்தில் டிசம்பர் 10ஆம் தேதி இரவு 7 மணிக்கு மத்கோவனில் இருந்து புறப்படும் பாரத கவுரவ் எக்ஸ்பிரஸ், அங்கிருந்து கர்வார், உடுப்பி, மங்களூரு, பாலக்காடு, போடனூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை, கொல்லம் வழியாக டிசம்பர் 12ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு கொச்சுவேலியை வந்தடையும்.
மேலும் படிக்க | Indian Railways: ரயில் பயணிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ‘6’ விதிகள்!
மற்ற ரயில்களைப் போலவே இந்த ரயிலுக்கான முன்பதிவிற்கு www.irctctourism.com என்ற இணையதளத்தை அணுகலாம். மேலும் சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா தகவல் மையத்தையும் தொடர்பு கொள்ளலாம். இதற்கான தொலைபேசி எண்கள் IRCTC இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது.
பாரத கவுரவ் ரயில் சேவை குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், பாரத் கவுரத் ரயில் சேவை திட்டத்தின் கீழ் 50 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன என்றும் மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 489 கி.மீ என்ற அளவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்த ரயில்களில் 24,848 பேர் பயணம் செய்துள்ளனர் எனவும் தெரிவித்தார். இந்தியாவில் பிரபலமான சுற்றுலா, மற்றும் ஆன்மீக இடங்களுக்கு பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டு, இதன் மூலம் தெற்கு ரயில்வேக்கு மொத்தம் ரூ.34 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ