தேர்தலுக்கு பிந்தைய பட்ஜெட்! செல்வாக்கை மீட்க வருமான வரி விலக்கு ஒரு லட்சமாக உயருமா?

Pre-Budget Expectations : பிரதமர் மோடியின் மூன்றாவது ஆட்சிகாலத்தின் முதல் பட்ஜெட்டில், வருமான வரியில், நிலையான விலக்கு வரம்பு ரூ.1 லட்சமாக உயர்த்தப்படுமா?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 27, 2024, 08:03 AM IST
  • பிரதமர் மோடியின் மூன்றாவது ஆட்சியின் முதல் பட்ஜெட்
  • பட்ஜெட் எதிர்பார்ப்புகள்
  • வருமான வரி விலக்கு வரம்பு
தேர்தலுக்கு பிந்தைய பட்ஜெட்! செல்வாக்கை மீட்க வருமான வரி விலக்கு ஒரு லட்சமாக உயருமா? title=

பொதுமக்களின் பட்ஜெட் எதிர்பார்ப்புகள்:  புதிய ஆட்சி அமைந்த பிறகு, பிரதமர் மோடியின் மூன்றாவது ஆட்சிகாலத்தின் முதல் பட்ஜெட்டில், வருமான வரியில், நிலையான விலக்கு வரம்பு ரூ.1 லட்சமாக உயர்த்தப்படுமா? என்று மக்கள் ஆவலுடன் பட்ஜெட்டை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். வரி விதிப்பு முறையின் கீழ் அரசு ஸ்டாண்டர்ட் டிடெக்‌ஷன் என்று சொல்லும் நிலையான வருமான வரி விலக்கை இரட்டிப்பாக்கலாம் அல்லது  அடிப்படை வரி விலக்கு வரம்பை ரூ. 3.5 லட்சமாக உயர்த்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிலையான விலக்கு வரம்பு உயருமா?
எதிர்வரும் பட்ஜெட்டில் அடிப்படை வரி விலக்கு வரம்பை ரூ. 3.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும், புதிய சலுகை வரி விதிப்பு முறையின் கீழ் அரசு ஸ்டாண்டர்ட் கழிவை இரட்டிப்பாக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். வரி மற்றும் ஆலோசனை நிறுவனமான EY, இந்த கருத்தை முன்வைத்துள்ளது.

பொருளாதார வளர்ச்சி

வரவிருக்கும் பட்ஜெட்டில் வரிவிதிப்பு சீர்திருத்தங்களுக்கான முன்னுரிமைகள் பற்றி கணித்த EY, வரி கட்டமைப்பை ஒழுங்குபடுத்துதல், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான கொள்கை கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் முதலீடு மற்றும் வளர்ச்சிக்கு தேவையான சூழலை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

மேலும் படிக்க | திருமணமான இந்திய பெண்களுக்கு வேலை இல்லை!! சர்ச்சையில் சிக்கிய நிறுவனம்

கார்ப்பரேட் வரி விகிதங்களில் நிலைத்தன்மை, டிடிஎஸ் விதிகளை பகுப்பாய்வு செய்வது மற்றும் வருமான வரித்துறையுடனான மக்களின் தகராறுகளுக்கான தீர்வை ஒழுங்குபடுத்துதல் தொடர்பான பரிந்துரைகளை EY முன்வைத்துள்ளது. தனிநபர் வரியில் விலக்குகள்/கழிவுகள் இல்லாமல் சலுகை வரி முறை தொடர வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கத்தின் முன்னுரிமைகள் தொடர்பாக கணிப்பு வெளியிட்டுள்ள EY, இந்த பட்ஜெட்டில் வரிச்சலுகைகளின் கீழ் நிலையான விலக்கு தற்போதைய ரூ. 50,000 இலிருந்து ரூ. 1 லட்சமாக அதிகரிக்கப்படலாம் அல்லது வரி விலக்கு வரம்பை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.3.5 லட்சமாக அதிகரிக்கலாம் என்று கூறுகிறது.

புதிய மற்றும் பழைய வரி முறைக்கு இடையிலான வேறுபாடு

தற்போதைய வரி முறையின் கீழ், வரி செலுத்துவோர் பழைய மற்றும் புதிய வரிமுறைகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம். பழைய முறையில் பல்வேறு விலக்குகள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்ட நிலையில், புதிய வரி முறையில் ரூ.50,000 நிலையான விலக்கு அளிக்கப்படுகிறது.

தொழில்நுட்பம் மற்றும் தரவு சார்ந்த வரி இணக்க செயல்முறைகளை மேம்படுத்த அரசாங்கம் பல வரவேற்கத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக EY தெரிவித்துள்ளது. வருடாந்திர தகவல் அறிக்கைகள், வரி செலுத்துதலின் எளிமை, வருமானம் மற்றும் பணத்தைத் திரும்பப்பெறுதல் போன்றவற்றை விரைவாகச் செயலாக்குதல் போன்றவற்றால், தன்னார்வ வரி இணக்கத்தின் நிலைமை மேம்பட்டுள்ளதாக EY கூறுகிறது.

அதேபோல, இந்த பட்ஜெட்டில் வருமான வரி விதிப்பு மாற்றம் செய்யப்படலாம் என்றும், வரிச்சலுகை வரம்பை அதிகரிப்பதன் மூலம் நடுத்தர மக்களுக்கு அரசு நிவாரணம் கொடுக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். தேர்தலில் ஆளும் பாஜக அரசுக்கு மக்களிடையே இருந்த செல்வாக்கு குறைந்திருப்பதால், பொதுமக்களுக்கு இதுபோன்ற சில சலுகைகளை கொடுப்பது அவசியமானதாக இருக்கும் என அரசியல் நிபுணர்களும் கூறுகின்றனர்.

மேலும் படிக்க | வருமான வரியைச் சேமிக்க சூப்பர் டிப்ஸ்! வரி சேமிப்புக்கு இது தான் சரியான நேரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News