LIC Jeevan Saral policy: எல்ஐசி ஜீவன் சாரல் பாலிசி என்பது பாலிசிதாரர்களுக்கு சேமிப்பு மற்றும் பணத்திற்கு பாதுகாப்பை வழங்கக்கூடிய ஒரு எண்டோமென்ட் திட்டமாகும். லைஃப் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா எனப்படும் எல்ஐசி பீமா ரத்னா, ஜீவன் ஆசாத், ஜீவன் சாரல் மற்றும் பல திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டங்கள் அனைத்தும் தனிநபர்கள் மற்றும் குடும்பங்களின் நிதித் தேவைகளை சமாளிக்கும் வகையில் பல நன்மைகளை வழங்குகின்றன. எல்ஐசி வழங்கக்கூடிய சிறப்பான திட்டங்களில் ஒன்று எல்ஐசி ஜீவன் சாரல் திட்டம், இந்த திட்டம் வரி சேமிப்பு மற்றும் கடன் வழங்குவது போன்ற பல்வேறு நன்மைகளை பாலிசிதாரர்களுக்கு வழங்குகிறது. எல்ஐசி ஜீவன் சாரல் திட்டத்தில் முதலீடு செய்த பாலிசிதாரர் பாலிசி காலத்திலேயே எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டால், அது அவர்களின் குடும்பத்திற்கு நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது.
மேலும் படிக்க | LIC பீமா ரத்னா... தினம் ₹166 முதலீட்டில் 50 லட்சம் அள்ளலாம்!
பாலிசிதாரர்களுக்கான இறப்பு நன்மை என்பது வாக்குறுதியளிக்கப்பட்ட தொகை மற்றும் தொடர்புடைய டெர்மினல் போனஸ் மற்றும் ரிவர்ஷனரி போனஸ் போன்றவற்றை வழங்குகிறது. இதுபோன்ற நன்மைகளை வழங்குவதன் மூலம் பாலிசிதாரரின் குடும்பம் அவர்கள் இல்லாத நிலையிலும் கூட நிதி நிலையில் நல்ல நிலைமையில் இருக்க முடிகிறது. மேலும் எல்ஐசி வழங்கக்கூடிய இந்த திட்டமானது மற்றொரு நன்மையாக பல்வேறு பிரீமியம் கட்டண விருப்பங்களை வழங்குகிறது. பாலிசிதாரர்கள் தங்களுக்கு மிகவும் வசதியான வகையில் வருடாந்திர, அரையாண்டு, காலாண்டு அல்லது மாதாந்திர பிரீமியம் கட்டணங்களைத் தேர்வு செய்து கொள்ளலாம்.
எல்ஐசி ஜீவன் சாரல் பாலிசியின் சிறப்பு அம்சங்கள் மற்றும் நன்மைகள்:
1) கூடுதல் ரைடர்ஸ்
2) பிரீமியம்
3) லாயல்டி பெனிஃபிட்
4) விபத்து மரணம் மற்றும் இயலாமை நன்மை ரைடர்
5) முதிர்வு நன்மை
6) ஸ்பெஷல் சரண்டர்
உதாரணமாக, ஒரு 30 வயதுடைய தனிநபர் பாலிசிக்கு ரூ. 10 லட்சம் மற்றும் பிரீமியம் செலுத்துதலுக்கான 15 ஆண்டுகள் பதவிக்காலம் மற்றும் 20 வருட பாலிசி காலத்தைத் தேர்வு செய்கிறார் என்றால் அந்த பாலிசிதாரர் பல ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வு தொகையாக ரூ.15.5 லட்சம் பெறுவார். இந்த முதிர்வு தொகையில் ரூ.10 லட்சம் உறுதி செய்யப்பட்ட தொகையும், ரூ.5.5 லட்சம் போனஸும் அடங்கும். பாலிசிதாரரின் நாமினி துரதிர்ஷ்டவசமாக இறந்துவிட்டால் அவருக்கு இறப்புப் பலனாக ரூ.15.5 லட்சம் வழங்கப்படும்.
மேலும் எல்ஐசி ஜீவன் லேப் பாலிசி எடுத்தால், ஒருவர் ஜீவன் லாப் பாலிசியை 25 வயதில் எடுத்தால், அவர் மாதம் ரூ.7,572 அல்லது ஒரு நாளைக்கு ரூ.252 முதலீடு செய்ய வேண்டும். அதாவது, இந்த திட்டத்தில், ஆண்டுக்கு ரூ.90,867 டெபாசிட் செய்யப்படும். அவர் சுமார் 20 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்வார். முதிர்வு முடிந்ததும், பாலிசிதாரர் ரூ.54 லட்சம் தொகையைப் பெறுவார். நீங்கள் எல்ஐசியின் லைஃப் பெனிபிட்டில் முதலீடு செய்தால், முதிர்ச்சியின் போது உங்களுக்கு ரிவர்ஷனரி போனஸ் மற்றும் இறுதி கூடுதல் போனஸ் வழங்கப்படும்.
மேலும் படிக்க | LIC: மாதம் ரூ. 7, 572 செலுத்தினால் ரூ. 54 லட்சம் கிடைக்கும் - முழு தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ