EPFO ELI Scheme: இதை செய்யவில்லை என்றால் ELI நன்மைகள் கிடைக்காது, நாளை கடைசி நாள், எளிய ஆன்லைன் வழிமுறை இதோ

EPFO Latest News: ஜூலை மாதம் மத்திய பட்ஜெட் 2024 இல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இபிஎஃப் உறுப்பினர்களுக்காக (EPF Members) ELI திட்டத்தை பற்றி அறிவித்தார். இதில் A, B மற்றும் C என மூன்று வகைகள் உள்ளன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 14, 2025, 10:48 AM IST
  • ELI திட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன?
  • ஆதார் அடிப்படையிலான OTP மூலம் EPF UAN ஐ எவ்வாறு செயல்படுத்துவது?
  • ELI திட்ட நன்மைகளைப் பெறுவதற்கான செயல்முறை என்ன?
EPFO ELI Scheme: இதை செய்யவில்லை என்றால் ELI நன்மைகள் கிடைக்காது, நாளை கடைசி நாள், எளிய ஆன்லைன் வழிமுறை இதோ title=

EPFO ELI Scheme Activation: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி உள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (ELI) திட்டத்தின் கீழ் சலுகைகளைப் பெற, யுனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) செயல்படுத்தி, அதை வங்கிக் கணக்கு மற்றும் ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடு சமீபத்தில் ஜனவரி 15, 2025 வரை நீட்டிக்கப்பட்டது. நாளை காலக்கெடு முடியவுள்ள நிலையில், இந்த பணியை உடனடியாக செய்து முடிக்க வேண்டியது மிக அவசியமாகும்.

முன்னதாக, இதற்கான கடைசி தேதி நவம்பர் 30, 2024 என நிர்ணயிக்கப்பட்டது. எனினும், இது முதலில் டிசம்பர் 15, 2024 வரை நீட்டிக்கப்பட்டது. அதன் பின்னர் அது மீண்டும் ஜனவரி 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

Employment Linked Incentive Scheme

ஜூலை மாதம் மத்திய பட்ஜெட் 2024 இல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இபிஎஃப் உறுப்பினர்களுக்காக (EPF Members) ELI திட்டத்தை பற்றி அறிவித்தார். இதில் A, B மற்றும் C என மூன்று வகைகள் உள்ளன. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) நிர்வகிக்கும் இந்த கட்டாய செயல்முறை, ELI திட்டத்தின் பலன்களைப் பெறுவதற்கு மிகவும் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.   

Finance Minister Nirmala Sitharaman

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 2024 பட்ஜெட் உரையில், "வேலைவாய்ப்பு மற்றும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டத்தில் முதன்முறையாக சேருபவர்களை மையமாகக் கொண்டு திட்டம் A செயல்படும். திட்டம் B உற்பத்தியில் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் கவனம் செலுத்துகிறது. திட்டம் C முதலாளிகளுக்கு ஆதரவளிப்பதில் கவனம் செலுத்தும்" என்று கூறியிருந்தார்.

இது தொடர்பாக EPFO ​​டிசம்பர் 20, 2024 அன்று ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. அதில், "மேற்கோள் காட்டப்பட்டுள்ள சுற்றறிக்கைகளைப் பார்க்கவும். இது தொடர்பாக, அனைத்து ஊழியர்களின் UAN ஆக்டிவேஷன் மற்றும் வங்கிக் கணக்கில் ஆதார் இணைப்புக்கான காலக்கெடு 15.12.2024 இலிருந்து 15.01.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது," என்று தெரிவிக்கப்பட்டது.

ஆதார் அடிப்படையிலான OTP மூலம் EPF UAN ஐ எவ்வாறு செயல்படுத்துவது

UAN ஐ செயல்படுத்தி ELI திட்ட நன்மைகளைப் பெறுவதற்கான செயல்முறை:

- முதலில் இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) EPFO உறுப்பினர் போர்ட்டலுக்குச் செல்லவும்.

- பிரவுசரில் EPFO ​​உறுப்பினர் போர்ட்டலைத் திறக்கவும்.

- “Important Links” பிரிவின் கீழ் உள்ள “Activate UAN” என்பதைக் கிளிக் செய்யவும்.

- உங்கள் UAN, ஆதார் எண், பெயர், பிறந்த தேதி (DOB) மற்றும் ஆதார்-இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்.

- EPFO ​​இன் டிஜிட்டல் சேவைகளை தடையின்றி அணுக உங்கள் மொபைல் எண் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.

- ஆதார் OTP சரிபார்ப்புக்கான உங்கள் ஒப்புதலை உறுதிப்படுத்தவும்.

- அங்கீகார PIN ஐப் பெறுங்கள்: உங்கள் ஆதார்-இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் OTP ஐப் பெற “Get Authorization PIN” என்பதைக் கிளிக் செய்யவும்.

- UAN செயல்படுத்தும் செயல்முறையை முடிக்க OTP ஐ உள்ளிடவும்.

- வெற்றிகரமாக ஆக்டிவேட் செய்யப்பட்ட பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு கடவுச்சொல் அனுப்பப்படும்.

ELI Scheme: பட்ஜெட் ஆவணங்களின்படி ELI திட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன?

ELI என்பது ஜூலை மாதம் 2024 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஒரு திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ள மூன்று மாற்று வகைகள் பின்வருமாறு:

Scheme A, First-time employees: முதல் முறை ஊழியர்கள்

இந்தத் திட்டத்தின் மூலம் அனைத்து முறையான துறைகளிலும் புதிதாகப் பணியில் சேரும் அனைத்து நபர்களுக்கும் ஒரு மாத ஊதியம் வழங்கப்படும். EPFO-வில் பதிவு செய்யப்பட்ட முதல் முறை ஊழியர்களுக்கு 3 தவணைகளில் ஒரு மாத சம்பளத்தின் நேரடிப் பலன் பரிமாற்றம் ரூ.15,000 வரை இருக்கும். தகுதி வரம்பு மாதத்திற்கு ரூ.1 லட்சம் சம்பளமாக இருக்கும்.

Scheme B, Job creation in manufacturing: உற்பத்தியில் வேலை உருவாக்கம்

இந்தத் திட்டம் முதல் முறை ஊழியர்களின் வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட உற்பத்தித் துறையில் கூடுதல் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும். வேலையின் முதல் 4 ஆண்டுகளில் பணியாளர் மற்றும் முதலாளி / நிறுவனம் இருவருக்கும் அவர்களின் EPFO ​​பங்களிப்புக்காக ஒரு குறிப்பிட்ட அளவில் நேரடியாக ஒரு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

Scheme C, Support to employers: முதலாளிகள் / நிறுவனங்களுக்கு ஆதரவு

முதலாளி / நிறுவனத்தை மையமாகக் கொண்ட இந்த திட்டம் அனைத்து துறைகளிலும் கூடுதல் வேலைவாய்ப்பை உள்ளடக்கும். மாதத்திற்கு ரூ.1 லட்சம் சம்பளத்துடன் கூடிய அனைத்து கூடுதல் வேலைவாய்ப்புகளும் இந்தத் திட்டத்தின் கீழ் பரிசீலிக்கப்படும். கூடுதலாக சேர்க்கப்பட்ட ஒவ்வொரு பணியாளருக்கும் செய்யப்படும் இபிஎஃப் பங்களிப்புகளுக்கு ஈடு செய்யும் வகையில், அரசாங்கம் முதலாளிகள் / நிறுவனங்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3,000 வரை செலுத்தும்.

மேலும் படிக்க | EPFO Pension: 10 ஆண்டு கால சர்வீஸுக்கு எவ்வளவு பென்ஷன் கிடைக்கும்.. எளிய கணக்கீடு இதோ

மேலும் படிக்க | Budget 2025: ஓய்வூதிய உயர்வு, ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்.... பட்ஜெட்டில் EPFO அதிரடி அறிவிப்புகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News