SIP - Mutual Fund Investment Tips: இன்றைய காலகட்டத்தில், வழக்கமான முதலீட்டுத் திட்டத்தை விட, பரஸ்பர நிதியம் என்னும் SIP திட்டங்களில் முதலீடு செய்ய பலர் விரும்புகிறார்கள். ஏனெனில் இதில் சராசரியாக 15% வருமானம் கிடைக்கிறது. சில சிறந்தபரஸ்பர நிதியங்கள் 30% கூட வருமானம் தருகின்றன. அதோடு கூட்டு வட்டியின் பலனும் கிடைக்கும்
SIP மூலம் சிறிய அளவிலான தொகையை கூட முதலீடு செய்யலாம். மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது அபரிமிதமான வருமானத்தையும் தருகிறது. கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற கனவு நிறைவேற தேவையானது சில திட்டமிடல் மட்டுமே. நீண்ட கால தொடர் முதலீடு உங்களை கோடீஸ்வரர் ஆக்கும்.
பரஸ்பர நிதிய முதலீடு: ஒரு முதலீட்டாளர் மாதத்திற்கு ரூ.1,000, ரூ.2,000, ரூ.3,000 மற்றும் ரூ.5,000 முதலீடு செய்வதன் மூலம் எளிதில் பணக்காரர் ஆகலாம். அதோடு, உங்கள் வருமானம் அதிகரிக்கும் போது, ஒவ்வொரு ஆண்டும் உங்கள் முதலீட்டின் அளவை சுமார் 10 சதவிகிதம் அதிகரிக்கும் போது, கோடீஸ்வர கனவு தொட்டு விடும் தூரம் தான்.
ஆண்டு தோறும் முதலீட்டு அளவை அதிகரிப்பதை ஸ்டெப் அப் எஸ்ஐபி என்பார்கள். அதாவது நீங்கள் ரூ.1000 என்ற அளவில் முதலீட்டை தொடங்கும் நிலையில், ஆண்டு தோறும் உங்கள் முதலீட்டு அளவை 10 சதவிகிதம், அதாவது முதல் ஆண்டும் 1100, அடுத்த ஆண்டு, 1100, அதற்கு அடுத்த ஆண்டும் ரூ. 1210 என்ற வகையில் அதிரித்துக் கொண்டே போனால், கோடீஸ்வர கனவு எளிதில் நனவாகும்.
ரூ.1,000 SIP: 10% வருடாந்திர அதிகரித்த முதலீட்டு முறையில் மாதத்திற்கு ரூ.1,000 முதலீடு செய்து ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானத்தை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், 31 ஆண்டுகளில் தோராயமாக ரூ.1.02 கோடியை சேர்க்கலாம். இதில், உங்கள் மொத்த முதலீடு சுமார் ரூ.21.83 லட்சமாக இருக்கும், மீதமுள்ள ரூ.79.95 லட்சம் முதலீட்டில் கிடைத்த வருமானம்.
ரூ.2,000 SIP: 10% வருடாந்திர அதிகரிப்புடன் உங்கள் மாதாந்திர SIP ஐ ரூ.2,000 ஆக உயர்த்தினால், 12% வருடாந்திர வருமானத்தில் 27 ஆண்டுகளில் ரூ.1.15 கோடி கார்பஸை அடையலாம். மொத்த முதலீடு ரூ.29.06 லட்சமாக இருக்கும்.அதே நேரத்தில் வருமானம் உங்கள் நிதிக்கு ரூ.85.69 லட்சமாக இருக்கும்.
ரூ.3,000 SIP: மாதாந்திர SIP ரூ.3,000, ஆண்டுதோறும் 10% அதிகரிப்புடன், 12% வருடாந்திர வருமானத்தில் 24 ஆண்டுகளில் ரூ.1.10 கோடி குவியும். இந்தக் காலகட்டத்தில், உங்கள் மொத்த முதலீடு ரூ.31.86 லட்சமாக இருக்கும். மேலும் வருமானம் ரூ.78.61 லட்சமாக அதிகரிக்கும்.
ரூ.5,000 SIP: இந்த மாதாந்திர SIP-ஐ ரூ.5,000 ஆக அதிகரித்து, ஒவ்வொரு ஆண்டும் 10% அதிகரித்து, 12% வருடாந்திர வருமானத்தை எதிர்பார்த்தால், 21 ஆண்டுகளில் ரூ.1.16 கோடி நிதியை அடைய முடியும். மொத்த முதலீடு ரூ.38.40 லட்சமாக இருக்கும், ரூ.77.96 லட்சம் வருமானம் ஈட்டப்படும்.
நீங்கள் ரூ.1,000 SIP-யுடன் தொடங்கி முதலீட்டை 10% அதிகரித்தால், நீங்கள் ஒரு கோடீஸ்வரராக 31 ஆண்டுகள் ஆகும். வருடத்திற்கு 10% முதலீட்டு அதிகரிப்புடன் ரூ.2,000 SIP மூலம் முதலீடு செய்வது உங்கள் கோடீஸ்வர இலக்கை 4 ஆண்டுகள் முன்னதாக 27 ஆண்டுகளில் உங்கள் இலக்கை அடைவீர்கள். SIP முதலீட்டை ரூ.3,000 ஆக அதிகரித்தால், 24 ஆண்டுகளில் நீங்கள் ரூ.1 கோடி நிதியை பெறலாம். இறுதியாக, இந்த SIP தொகையை ரூ.5,000 ஆக அதிகரித்தால், நீங்கள் 21 ஆண்டுகளில் கோடீஸ்வரராக முடியும்.
பரஸ்பர நிதி முதலீட்டாளர்களை பணக்காரர்களாக ஆக்கியுள்ளது என்றாலும், எப்போதும் சிறந்த வருமானம் கிடைக்கும் என்ற உத்தரவாதம் அல்ல என்பதை முதலீட்டாளர்கள் மனதில் கொள்ள வேண்டும். மியூச்சுவல் ஃபண்டுகளில், குறிப்பாக ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்வதில் நிறைய ரிஸ்க் உள்ளது. நீங்கள் ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்ய விரும்பினால், இது தொடர்பாக உங்கள் நிதி ஆலோசகர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும்.