LPG Gas Cylinder Price Update: பெரும்பாலும், மாதத்தின் முதல் நாளில் எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலைகளில் மாற்றத்தை செய்வது வழக்கம். அந்த வகையில், ஆகஸ்ட் மாதத்தின் முதல் நாளான இன்று, எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி சிலிண்டர்களின் விலையை பெரிய அளவில் குறைத்துள்ளன. ஜூலை மாதத்தில் சிலிண்டர் விலை உயர்வுக்கு பிறகு விலையில் சரிவு காணப்படுகிறது.
ஆகஸ்ட் 1 ம் தேதி காலை வர்த்தக சிலிண்டர்களின் விலையை (LPG Gas Cylinder Price) எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் சுமார் ரூ.100 குறைத்துள்ளன. 19 கிலோ கமர்ஷியல் எல்பிஜி எரிவாயு சிலிண்டருக்கு இப்போது ரூ.1680 செலுத்த வேண்டும். இதற்கு முன்பு ரூ.1780 செலுத்த வேண்டியிருந்தது. எனினும், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை.
இன்று முதல் அமல்
வணிக எரிவாயு சிலிண்டரின் புதிய விலை ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இதற்கு முன்பு போல் தலைநகர் டெல்லியில் ரூ.1103 செலுத்த வேண்டும். டெல்லியில் வணிக எரிவாயு சிலிண்டர் ரூ.1780ல் இருந்து ரூ.1680 ஆக குறைந்துள்ளது. கொல்கத்தாவில் முன்பு ரூ.1895.50 ஆக இருந்த நிலையில், இப்போது ரூ.1802.50 செலுத்த வேண்டும். இதேபோல் மும்பையில் முன்பு ரூ.1733.50க்கு கிடைத்தது, இப்போது ரூ.1640.50க்கு கிடைக்கும். சென்னையில் விலை ரூ.1945.00ல் இருந்து ரூ.1852.50 ஆக குறைந்துள்ளது.
மேலும் படிக்க | ஆகஸ்ட் 1 முதல் இந்த விதிகளில் மாற்றம்! தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
27 நாட்களுக்கு பிறகு
27 நாட்களுக்குப் பிறகு வணிக எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன. முன்னதாக, ஜூலை 4ம் தேதி சிலிண்டருக்கு ரூ.7 உயர்த்தி நிறுவனங்கள் அறிவித்தன. ஜூலைக்கு முன், மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் சிலிண்டர் விலை குறைந்துள்ளது. கடந்த மார்ச் 1ஆம் தேதி அன்று சிலிண்டரின் விலை ரூ.2119.50 ஆக இருந்தது. அதன் பிறகு ஏப்ரலில் ரூ.2028 ஆகவும், மே மாதம் ரூ.1856.50 ஆகவும், ஜூன் 1ஆம் தேதி ரூ.1773 ஆகவும் குறைந்துள்ளது. ஆனால் இதன் பிறகு ஜூலையில் ரூ.7 உயர்ந்து டெல்லியில் சிலிண்டர் ரூ.1780 ஆனது.
ஆகஸ்ட் 1இன் படி, மெட்ரோ நகரங்களில் எரிவாயு சிலிண்டர் விலை
டெல்லி - ரூ.1,680
கொல்கத்தா - ரூ. 1,802.50
மும்பை - ரூ. 1,640.50
சென்னை - ரூ. 1,852.50
வீட்டு உபயோக சிலிண்டர்
உங்கள் வீட்டில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. நாட்டின் தலைநகரில் ஒரு வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1,103 ஆக உள்ளது. அதன் விலையில் கடைசியாக கடந்த மார்ச் 1ஆம் தேதி அன்று மாற்றம் செய்யப்பட்டது. மூன்று ஆண்டுகளில் இதன் மதிப்பு இரட்டிப்பாகியுள்ளது. வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையை குறைத்து அரசு எப்போது நிவாரணம் அளிக்கும் என மக்கள் காத்திருக்கின்றனர். 14.2 கிலோ வீட்டு உபயோக சிலிண்டர் சென்னையில் ரூ. 1,118.50 ஆக உள்ளது நினைவுக்கூரத்தக்கது.
மேலும் படிக்க | ஆகஸ்ட் மாதத்தில் ரேஷன் பெற வேண்டுமா? அப்போ உடனே படியுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ