EPFO Monthly Pension: பணி ஓய்வுக்குப் பிறகு வாழ்க்கையில் பொருளாதார சவால்கள் அதிகரிக்கும். பணியில் இருந்த போது செய்தது போல பணி ஓய்வுக்கு பின்னர் செலவு செய்வது கடினமாக இருக்கும். அரசும் இதை நன்கு புரிந்து கொண்டுள்ளது. இதன் காரணமாகத்தான் பணியாளர்களுக்கு உதவும் வகையில் பல வித ஓய்வூதியத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணிபுரியும் பணியாளர்களுக்காக, அரசாங்கம் பணியாளர் வருங்கால வைப்பு நிதியை (EPF) தொடங்கியது. இது பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் (EPFO) நிர்வகிக்கப்படுகின்றது.
EPFO ஓய்வூதியத் திட்டங்கள்
உங்கள் சம்பளத்திலிருந்து மாதா மாதம் இபிஎஃப் தொகை கழிக்கப்படுகின்றதா? அப்படியென்றால்ல், 58 வயதுக்குப் பிறகு ஓய்வூதியம் கிடைக்கத் தொடங்கும். இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) பல வழிகளில், பல விதமான ஓய்வூதியங்கள் கிடைக்கின்றன. ஆனால், இபிஎஃப் சந்தாதாரர்களாக (EPF Subscribers) இருக்கும் பலருக்கு பல வகையான இந்த ஓய்வூதியங்கள் பற்றி தெரிவதில்லை.
பல்வேறு வகையான ஓய்வூதியங்களைப் பற்றி காண்பதற்கு முன், உங்கள் ஓய்வூதியத்திற்கான நிதி எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதை பற்றி பார்க்கலாம். ஒவ்வொரு மாதமும் ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தில் 12% இபிஎஃப் கணக்கில் (EPF Account) டெபாசிட் செய்யப்படுகின்றது. அதே அளவு தொகையை நிறுவனமும் டெபாசிட் செய்கிறது. நிறுவனம் டெபாசிட் செய்த பங்கில், 8.67% ஊழியர் ஓய்வூதியத் திட்டத்திலும் (EPS) மீதமுள்ள 3.33% பிஎஃப் கணக்கிலும் டெபாசிட் செய்யப்படுகிறது.
ஓய்வூதியம் எப்போது கிடைக்கும்?
58 வயதிற்குப் பிறகு, 10 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு, இபிஎஸ் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்திலிருந்து ஓய்வூதியம் (Pension) கிடைக்கும். பணியாளர்களுக்கு எத்தனை வகையான ஓய்வூதியம் கிடைக்கும் என்பதை இங்கே காணலாம். இந்த ஓய்வூதியங்கள் உங்களை மட்டுமின்றி, உங்கள் குடும்பத்தையும் பொருளாதார ரீதியாகப் பாதுகாக்கின்றன.
இபிஎஃப்ஓ பொது ஓய்வூதியம் (EPFO General Pension)
ஒரு ஊழியர் 10 ஆண்டுகள் பணிபுரிந்து அவரது வயது 58 ஆக இருந்தால், அவர் ஓய்வூதியம் பெற உரிமை உண்டு. பணியாளர் விரும்பினால், அவர் தனது ஓய்வூதியத்தை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகும் பெறலாம். அதன் பிறகு பணியாளருக்கு ஆண்டுதோறும் 4% கூடுதல் விகிதத்தில் ஓய்வூதியம் கிடைக்கும்.
இபிஎஃப்ஓ எர்ளி ஓய்வூதியத் திட்டம் (EPFO Early Pension Scheme)
EPS-ன் கீழ் நீங்கள் ஓய்வூதிய வயதுக்கு முன்னரே ஓய்வூதியம் பெறலாம், அதாவது பணி ஓய்வுக்கு முன்பே ஓய்வூதியம் பெறலாம். பணியாளர் விரும்பினால், அவர் 58 வயதுக்கு முன்பே ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கலாம். எனினும், ஒரு ஊழியரின் வயது 50 -க்கு மேல் இருந்தால் மட்டுமே அவர் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். முன்கூட்டியே ஓய்வூதியம் பெறும் பட்சத்தில், பணியாளருக்கு ஒவ்வொரு ஆண்டும் 4% குறைவான வருடாந்திர விகிதத்தில் வட்டி வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | உங்கள் மகள் பெயரில் 2 SSY கணக்குகள் இருந்தால் என்ன ஆகும்? DEA முக்கிய தகவல்
அனாதை ஓய்வூதியம் (Orphan Pension)
ஊழியர் இறந்து, அவருக்கு வாழ்க்கைத் துணை இல்லை என்றாலோ, அல்லது, அவரும் ஏற்கனவே இறந்துவிட்டிருந்தலோ, ஊழியரின் குழந்தைகளுக்கு 25 வயது முடியும் வரை ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
விதவை ஓய்வூதியம் (Widow Pension)
ஊழியர் இறந்த பிறகு, அவரது வாழ்க்கைத் துணைக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
நாமினி ஓய்வூதியம் (Nominee Pension)
EPF உறுப்பினர் தனது மரணத்திற்கு பிறகு, ஓய்வூதியம் பெற யாரையாவது நாமினியாக பரிந்துரைத்திருந்தால், நாமினி ஓய்வூதியத்தைப் பெறலாம். EPFO போர்ட்டலில் ஈ-நாமினேட் செய்ய முடியும்.
இபிஎஃப்ஓ ஊனமுற்றோர் ஓய்வூதியம் (EPFO Disabled Pension)
இபிஎஃப் கணக்கு வைத்திருக்கும் PF உறுப்பினர் ஊனமுற்றால் (நிரந்தர அல்லது தற்காலிகமாக) இந்த வகையான ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவர் ஆகிறார். இதைப் பெற, 10 ஆண்டுகள் சேவை அல்லது குறைந்தபட்ச வயது வரம்பான 50 வயது ஆகியவற்றை பூர்த்தி செய்யத் தேவையில்லை.
மேலும் படிக்க | 8வது ஊதியக்குழுவில் ஏற்றத்துடன் மாற்றம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு மெகா சம்பள உயர்வு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ