வீட்டுக்கடன் இருக்கா? ரியல் எஸ்டேட் துறைக்கு பரிசாக பட்ஜெட்டில் நல்ல செய்தி!!

Budget 2024: வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 24 -இன் கீழ் வீட்டுக்கடனுக்கான வரி விலக்கு 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று துறை நிபுணர்களும் பொருளாதார நிபுணர்களும் கருத்துகிறார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 18, 2024, 05:22 PM IST
  • ரியல் எஸ்டேட் துறையின் எதிர்பார்ப்புகள்.
  • வீட்டுக்கடன் சுமை குறையுமா?
  • பட்ஜெட்டில் இருக்கும் எதிர்பார்ப்புகள் என்ன?
வீட்டுக்கடன் இருக்கா? ரியல் எஸ்டேட் துறைக்கு பரிசாக பட்ஜெட்டில் நல்ல செய்தி!!  title=

Budget 2024: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) 2024 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை ஜூலை 23 ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். பாஜக தலைமையிலான எண்டிஏ அரசாங்கம் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள நிலையில் இந்த புதிய அரசாங்கத்தின் முதல் பட்ஜெட்டாக இது இருக்கும். ஆகையால் இந்த பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகளும் அதிகமாக உள்ளன. பொதுமக்கள் மட்டுமல்லாமல் பலவித வர்த்தகங்கள் மற்றும் துறைகளை சார்ந்தவர்களும் இந்த பட்ஜெட் அறிவிப்புகளுக்காக காத்திருக்கிறார்கள்.

Union Budget 2024: ரியல் எஸ்டேட் துறை

பலவித துறைகளில் ரியல் எஸ்டேட் துறையும் (Real Estate Sector) முக்கிய அறிவிப்புகளுக்காக காத்திருக்கிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வரும் சில குறிப்பிட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் (Finance Minister) நிர்மலா சீதாராமன் வெளியிடக்கூடும் என்ற நம்பிக்கை உள்ளது. அரசாங்கம் வீட்டுக் கடனுக்கான வட்டியை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பிலும் ரியல் எஸ்டேட் துறை உள்ளது. ஜூலை 23 அன்று தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் குறித்து ரியல் எஸ்டேட் துறையின் எதிர்பார்ப்புகள் என்ன என்பது பற்றி இந்த பதிவில் காணலாம்.

Real Estate: கடனில் வரி நிவாரணம்

வீடு கட்டுவது அல்லது வாங்குவது என்பது பலருக்கு மிகப்பெரிய ஒரு கனவாக உள்ளது. பலரது வாழ்வில் இலக்காகவும் இது அமைகின்றது. பெரும்பாலான மக்களால் தம்மிடம் உள்ள பணத்தை கொண்டே வீட்டை வாங்க முடிவதில்லை. ஆகையால் இவர்கள் பல்வேறு இடங்களில் இருந்து கடன் பெறுகிறார்கள். இவற்றில் வங்கிக் கடன்கள் முக்கியமாக பெரிய பங்கு வகிக்கின்றன. வங்கிகள் வீடு வாங்க கடன்களை அளித்தாலும் அதிகமான வட்டி விகிதங்கள் (Interest Rate) கடன் வாங்குபவர்களுக்கு பெரும் சுமையாக அமைகின்றன. கடன் தொகையை அவர்கள் கட்டி முடிக்கும் வேளையில் அவர்கள் வாங்கிய கடனை விட அதிக தொகையை அவர்கள் கட்ட வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

இதை கருத்தில் கொண்டு வருமான வரிச் சட்டத்தின் (Income Tax Rules) பிரிவு 24 -இன் கீழ் வீட்டுக்கடனுக்கான (House Loan) வரி விலக்கு (Tax Exemption) 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று துறை நிபுணர்களும் பொருளாதார நிபுணர்களும் கருத்துகிறார்கள். இது நடந்தால் வீட்டுக் கடன் வாங்கியவர்களின் வரிச் சுமை பெரிய அளவில் குறைவதோடு பொருளாதார ரீதியாக பின் தங்கிய நிலையில் இருக்கும் பலரது வீட்டு கனவு நிஜமாகும்.

மேலும் படிக்க | பட்ஜெட்டில் 6 கோடி மக்களுக்கு மெகா அறிவிப்பு: இரட்டிப்பாகும் ஓய்வூதிய தொகை?

ரியல் எஸ்டேட் துறைக்கு தொழில் அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரிக்கை

இந்தியாவின் ஒரு முக்கியமான துறையாக இருக்கும் ரியல் எஸ்டேட் துறைக்கு தொழில் அந்தஸ்தை வழங்க வேண்டும் என்று பல நிபுணர்கள் கருதுகிறார்கள். பல ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தி அதனை முன்னோக்கி எடுத்துச் செல்வதிலும் ரியல் எஸ்டேட் துறை முக்கிய பங்கு வகித்துள்ளது. வீடுகள், வணிக வளாகங்கள், அலுவலக கட்டிடங்கள் ஆகிவற்றுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் இந்த துறையை மேம்படுத்தி ஊக்கமளிக்கும் வகையில் பலவித முக்கிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

நிபுணர்கள் கூறுவது என்ன

- மலிவு மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட வீடுகளுக்கான நிதியின் சிறப்பு சாளரத்தின் (SWAMIH) இரண்டாவது தவணைக்கு நிதியமைச்சகம் ஐம்பதாயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.

- உள்ளூர் அதிகாரிகளுக்கு செலுத்தப்படும் நகராட்சி கட்டணம் ஜிஎஸ்டி வரம்பிலிருந்து விலக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில காலங்களில் அதிகப்படியான வளர்ச்சி அடைந்துள்ள துறைகளில் ரியல் எஸ்டேட் துறையும் ஒன்றாகும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாத இருக்கும் துறைகளில் ரியல் எஸ்டேட் துறைக்கு முக்கிய பங்கு உண்டு. ஆகையால் இதில் செய்யப்படும் ஆக்கபூர்வமான மாற்றங்கள் இந்த துறைக்கு உந்துதலை அளிப்பதோடு சாமானிய மக்களின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்த உதவும்.

மேலும் படிக்க | குஷியில் விவசாயிகள்... பட்ஜெட்டில் இரட்டிப்பாகும் PM Kisan உதவித்தொகை: ரிப்போர்ட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News