டெல்லி மக்கள் ஏன் BJP-க்கு வாக்களிக்க வேண்டும் -கெஜ்ரிவால்!

மத்திய பட்ஜெட்டில் அரை மனதுடன் நடத்தப்பட்ட டெல்லி மக்கள் பாஜக-விற்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்!

Last Updated : Feb 1, 2020, 03:05 PM IST
டெல்லி மக்கள் ஏன் BJP-க்கு வாக்களிக்க வேண்டும் -கெஜ்ரிவால்! title=

மத்திய பட்ஜெட்டில் அரை மனதுடன் நடத்தப்பட்ட டெல்லி மக்கள் பாஜக-விற்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று புதிய வருமான வரி அடுக்குகள் உள்பட பல சிறப்பம்சங்களை கொண்ட மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். எனினும் இந்த பட்ஜெட் பல்வேறு மாநிலங்கள் தேவைகளை பூர்த்தி செய்தாற்போல் இல்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்நிலையில் தற்போது டெல்லி மக்களுக்கு தேரவையான பட்ஜெட்டாக இந்த நிதி நிலை அறிக்கை இல்லை என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்., டெல்லிக்கு பட்ஜெட்டில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் மீண்டும் டெல்லி மக்கள் அரை மனதுடன் நடத்தப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாஜகவின் முன்னுரிமையில் டெல்லி வரவில்லை என்பது தெளிவாகிறது, எனவே டெல்லி ஏன் பாஜக-வுக்கு வாக்களிக்க வேண்டும்? தேர்தலுக்கு முன்னர் டெல்லியை பாஜக ஏமாற்றும்போது, தேர்தலுக்குப் பிறகு அது தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுமா என்பதும் கேள்விகுறி... என குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி சட்டமன்றத்துக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 8.,-ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜனவரி 6-ஆம் தேதியன்று, டெல்லி சட்டமன்றத் தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம், பிப்ரவரி 8-ஆம் தேதி நகரம் தேர்தலுக்குப் போவதால், மத்திய பட்ஜெட்டில் எந்தவொரு "மாநில-குறிப்பிட்ட திட்டங்களையும்" மையம் அறிவிக்காது என்று வலியுறுத்தியது.

இருப்பினும், கெஜ்ரிவால் நகரத்திற்கு பல விஷயங்களை பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். அந்த வகையில் MTC-க்கான மையத்திடமிருந்து கூடுதல் நிதியையும் அவர் கோரி இருந்தார்.

இந்நிலையில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பாராளுமன்றத்தில் முன்வைத்த பட்ஜெட்டில் டெல்லிக்கான குறிப்பிடத்தக்க அறிவுப்புகள் இடம்பெறவில்லை. இந்நிலையல் தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது அதிருப்தியினை தெரிவித்துள்ளார்.

Trending News