Central Government Pensioners: அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. சுமார் ஏழு லட்சம் மத்திய அரசு ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு, ஓய்வூதிய மறுசீரமைப்பு காலத்தை 15 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாகக் குறைக்கக் கோரி அமைச்சரவை செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தவிர கூடுதல் ஓய்வூதியம் அளிக்கப்படும் வயதை மாற்றவும் கோரிக்கை உள்ளது. இவை நடந்தால், ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் இது மிக நல்ல செய்தியாக இருக்கும். இது குறித்து இந்த பதிவில் காணலாம்.
இது தோடர்பாக பொதுச் செயலாளர் எஸ்.பி. யாதவ் அமைச்சரவை செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட ஓய்வூதிய கம்யூடேஷன் அட்டவணைகளை பற்றி அவர் இதில் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 38 ஆண்டுகளில் தற்போதுள்ள அட்டவணைகளுக்கு ஆதாரமாக உள்ள பல காரணிகள் மாறிவிட்டன என்பதைக் குறிப்பிட்டார். கூடுதலாக, பல்வேறு மத்திய ஊழியர் சங்கங்களும் தேசிய கவுன்சிலின் (JCM) ஊழியர் பிரிவும் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளன.
Commutation Recovery: கம்யுடேஷன் மீட்பு காலம்
கம்யுடேஷன் பென்ஷன் என்றால் என்ன? ஊழியர்கள் ஓய்வு பெறும்போது அவர்களின் அடிப்படை ஓய்வூதியத்தில் 40 சதவீதம் வரை ஓய்வூதியத்தை மாற்றத் தேர்வு செய்யலாம். இதன் கீழ் அவர்களின் ஓய்வூதியத்தில் 40 சதவீதத்தை அரசாங்கத்திடமிருந்து முன்கூட்டியே பெற அனுமதிக்கப்படுகின்றது. இதன் பின்னர் தொகை முழுமையாக வசூலிக்கப்படும் வரை ஆண்டுதோறும் ரூ.8,000 அவர்களின் ஓய்வூதியத்திலிருந்து கழிக்கப்படுகிறது. முன்பு, இந்த விலக்கு ஓய்வூதியதாரரின் வாழ்நாள் முடியும் வரை தொடர்ந்தது, ஆனால் புதிய முறையின் கீழ், இது ஓய்வுக்குப் பிறகு 15 ஆண்டுகளுக்கு நீடிக்கும்.
அதன் பிறகு ஊழியர் தனது முழு ஓய்வூதியத்தையும் பெறுகிறார். மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் ஓய்வூதியத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமான தொகையை மொத்த தொகையாக மாற்றிக்கொள்ளலாம். ஓய்வு பெற்ற ஒரு வருடத்திற்குள் ஓய்வூதிய கம்யுடேஷனைத் தேர்வுசெய்தால், அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பதாரரின் வங்கிக் கணக்கில் கம்யூடேஷன் ஓய்வூதியம் வரவு வைக்கப்பட்டவுடன், ஓய்வூதியக் குறைப்பு தொடங்குகிறது. மாற்றப்பட்ட ஓய்வூதியத்திற்கான அதிகபட்ச வரம்பு மொத்த ஓய்வூதியத்தில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். பிரிவு 12A இன் கீழ் மாற்றத்தைத் தேர்வுசெய்தால், அவர்கள் ஓய்வு பெற்ற 15 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களின் முழு ஓய்வூதியத்தையும் பெறுவார்கள். கூட்டு ஆலோசனை இயந்திரத்தின் (JCM) தேசிய கவுன்சில் (பணியாளர்கள் தரப்பு) செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ரா, மத்திய அரசு ஊழியர்களைப் பாதிக்கும் பல்வேறு தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பாக 14 கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார். இதில் கம்யுடேஷன் காலத்தைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அடங்கும்.
Pensioners: ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம் அளித்துள்ள மாநிலங்கள்
சில மாநில அரசுகள் நிபுணர் அமைப்புகளின் பரிந்துரைகளைப் பின்பற்றி 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஊழியர்களின் மாற்றியமைக்கப்பட்ட ஓய்வூதியத்தை மீட்டெடுக்க வசதியை அளிக்கின்றன. கேரளா 12 வருட மறுசீரமைப்பை ஏற்றுக்கொண்டுள்ளது. சமீபத்தில் அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்த பிறகு, குஜராத் மாநில அரசு 13 வருட மறுசீரமைப்பை வெளியிட்டுள்ளது.
ஓய்வூதிய கம்யுடேஷன் தொடர்பாக இந்திய அரசு 1986 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவுகளை கூட்டமைப்பு எடுத்துக்காட்டியுள்ளது. இந்த விதிகள் 38 ஆண்டுகளுக்கு முன்பு 1986 இல் உருவாக்கப்பட்டன. அப்போது இருந்த நிலைமைகளுடன் ஒப்பிடும்போது, இன்று வட்டி விகிதங்கள், ஆயுட்காலம், இறப்பு விகிதங்கள் போன்ற பல காரணிகள் கணிசமாக மாறிவிட்டன. ஆகையால் மத்திய அரசு இதில் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Pension Hike: ஓய்வூதிய உயர்வு
இது தவிர கூடுதல் ஓய்வூதியத்திற்கான (Additional Pension) வயது குறித்தும் நீண்ட நாட்களாக கோரிக்கை உள்ளது. தற்போது உள்ள விதியின்படி, 80 வயதுக்குப் பிறகு ஓய்வூதியம் 20% உயர்த்தப்படுகிறது. ஆனால் 65 வயது முதல் 75 வயது வரைதான் அதிக பணம் தேவைப்படுகிறது. அதை விடுத்து 80 வயதிற்குப் பிறகு ஓய்வூதியத்தை அதிகரிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்பது பரவலான கருத்தாக உள்ளது.
நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைக்குப் பிறகு, 65 வயதிலிருந்து 5 வருடங்களுக்கு ஒரு முறை ஓய்வூதியத்தை 5% அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தாலும், இது குறித்து இன்னும் தெளிவான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இந்த பரிந்துரையின்படி, 65 வயதில் 5%, 70 வயதில் 10%, 75 வயதில் 15%, 80 வயதில் 20% என்ற வகையில் ஓய்வூதியத்தை உயர்த்த பரிந்துரைக்கப்பட்டது. விரைவில் இந்த பரிந்துரை அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ