EPF உறுப்பினர்களுக்கு சூப்பர் செய்தி: VPF வரி இல்லாத வட்டி வரம்பை அதிகரிக்க அரசு திட்டம்

Voluntary Provident Fund: EPFO கீழ் உள்ள தன்னார்வ வருங்கால வைப்பு நிதிக்கு (VPF) வரியில்லா பங்களிப்பு வரம்பை தற்போதுள்ள ரூ 2.5 லட்சத்தில் இருந்து அதிகரிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 26, 2024, 01:39 PM IST
  • தன்னார்வ வருங்கால வைப்பு நிதி (VPF) என்றால் என்ன?
  • விபிஎஃப் கணக்கில் பணத்தை எடுப்பதற்கான விதிகள் என்ன?
  • VPF வட்டி விகிதம் எவ்வளவு?
EPF உறுப்பினர்களுக்கு சூப்பர் செய்தி: VPF வரி இல்லாத வட்டி வரம்பை அதிகரிக்க அரசு திட்டம் title=

Voluntary Provident Fund: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு சமீபத்தில் ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் உள்ள தன்னார்வ வருங்கால வைப்பு நிதிக்கு (VPF) வரியில்லா பங்களிப்பு வரம்பை தற்போதுள்ள ரூ 2.5 லட்சத்தில் இருந்து அதிகரிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரிய வந்துள்ளது. குறைந்த-நடுத்தர மற்றும் நடுத்தர வருமானம் உள்ள தனிநபர்கள் EPFO ​​மூலம் தங்கள் சேமிப்பை அதிகரிக்க ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இது ஓய்வூதியத்திற்காக அதிக நிதியைக் குவிக்க உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

VPF: தற்போதைய வரி வரம்பு எவ்வளவு?

தற்போது, ​​2.5 லட்சம் ரூபாய்க்கும் மேல் உள்ள வட்டிக்கு வரி விதிக்கப்படுகிறது. இந்த புதிய முயற்சியின் மூலம், பயனாளிகள் அவர்களது ஓய்வூதிய திட்டங்களில் முதலீடு செய்ய ஊக்கம் கிடைக்கும்.

Budget 2025: பட்ஜெட் 2025 -இல் நல்ல செய்தி வருமா?

இபிஎஃப் உறுப்பினர்களுக்கு அதிக நன்மைகளை அளிக்கக்கூடிய்ய இந்த திட்டத்தை தொழிலாளர் அமைச்சகம் தற்போது மதிப்பாய்வு செய்து வருவதாக எகனாமிக் டைம்ஸ் அறிக்கை தெரிவிக்கின்றது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் விவாதத்தின் போது இது குறித்து நிதி அமைச்சகத்துடன் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

தன்னார்வ வருங்கால வைப்பு நிதி (VPF) என்றால் என்ன?

கட்டாய EPF -க்கு கூடுதலாக சம்பளம் பெறும் ஊழியர்கள் தாங்களாக செய்யும் விருப்ப முதலீடு விபிஎஃப் எனப்படும். இது ஊழியர்களின் ஓய்வூதிய சேமிப்பை அதிகரிக்கவும், அசல் PF வைப்புத் தொகையின் அதே வட்டி விகிதத்தைப் பெறவும் அனுமதிக்கிறது. கூட்டு வட்டிக்கு ஏற்ப VPF -க்கான பங்களிப்பும் அதிகரிக்கிறது. மேலும் இது EPFO ​​இன் கீழ் வருகிறது.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு டாப் அப்டேட்: ஊதிய உயர்வுடன் 8வது ஊதியக்குழு... அடுத்த மாதம் முக்கிய முடிவு

VPF Account: விபிஎஃப் கணக்கில் பணத்தை எடுப்பதற்கான விதிகள்

VPF -இன் கீழ், குறைந்தபட்சம் ஐந்தாண்டு காலத்தை முடிப்பதற்கு முன் பணத்தை எடுப்பது வரிவிதிப்புக்கு உட்பட்டது. இபிஎஃப் சந்தாதாரர்களை (EPF Subscribers) போலவே, VPF கணக்கு வைத்திருப்பவருக்கும் ஓய்வூதியம் கிடைக்கும். விபிஎஃப் உறுப்பினர் (VPF Member) இறந்தால், அவரது தொகை அவரது நாமினிக்கு அளிக்கப்படும். 

VPF வட்டி விகிதம் எவ்வளவு?

VPF -இன் வட்டி விகிதம் EPF இன் வட்டி விகிதம் போன்றது. இந்த திட்டம் அரசாங்கத்தால் நடத்தப்படுகிறது. இதில் ஆபத்து குறைவாகவும் வருமானம் அதிகமாகவும் இருப்பது இதன் சிறப்பம்சமாகும். ஊழியர்களின் பங்களிப்புக்கான அதிகபட்ச வரம்பு அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 100 சதவீதம் வரை இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

வரி இல்லாத வட்டியின் வரம்பு

- 2012 நிதியாண்டு பட்ஜெட்டில் தன்னார்வ பங்களிப்புகளுக்கு ரூ.2.5 லட்சம் வரம்பு அறிமுகப்படுத்தப்பட்டது. 
- அதிக வருமானம் ஈட்டுபவர்கள் வங்கிகள் அல்லது நிலையான வைப்புத்தொகைகள் மூலம் அதிக வரி இல்லாத வட்டியைப் பெறுவதைத் தடுப்பதே இதன் நோக்கமாக இருந்தது
- இது மற்ற முதலீட்டு விருப்பங்களை விட அதிக லாபம் ஈட்டக்கூடியதாக இருந்தது.

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், பல ஓய்வூதியதாரர்கள் (Pensioners) மற்றும் சம்பள வர்க்க மக்கள் (Salaried Class) தங்கள் சேமிப்பை அதிகரிக்கவும், அவர்களின் நிதி பாதுகாப்பை மேம்படுத்தவும் இது உதவியாக இருக்கும்.

மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களுக்கு தீபாவளி பரிசு: 20-100% கூடுதல் ஓய்வூதியம்... யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News