இந்தியன் ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 17 2021 ஆம் தேதி வணிக நேரத்திற்குப் பிறகு, ஏப்ரல் 18, 2021, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி வரை வங்கி பயனர்கள் நிகழ்நேர மொத்த தீர்வு (RTGS) கட்டண பரிமாற்ற முறையை பயன்படுத்த முடியாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தொழில்நுட்ப ரீதியாக தனது RTGS சேவையை மேம்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்வதற்காக தற்காலிகமாக இந்த நிறுத்தம் செய்யப்படுவதாக ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி (RBI) தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில், "RTGS-ல் அவ்வப்போது ஏற்படும் பின்னடைவை மேம்படுத்தவும், RTGS அமைப்பின் பேரழிவு மீட்பு நேரத்தை மேலும் மேம்படுத்துவதற்கும் இதில் ஏப்ரல் 17 2021-க்குப் பிறகு தொழில்நுட்ப மேம்பாடு குறித்த பணிகளைச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து, வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்துமாறும், அவர்கள் தங்களது கட்டண செயல்முறைகளை முன்னரே திட்டமிட உதவுமாறும் ரிசர்வ் வங்கி, வங்கிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கிடையில், பயனர்கள் இந்த காலகட்டத்தில் தங்கள் நிதிகளை பரிமாற்ற தேசிய மின்னணு நிதி பரிமாற்ற (NEFT) சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ALSO READ: Good news: மொபைல் வாலட்டுகள் குறித்து RBI அளித்த மிகப்பெரிய அறிவிப்புகள்!!
RTGS க்கும் NEFT க்கும் உள்ள வித்தியாசம் என்ன?
RTGS மற்றும் NEFT இரண்டும் டிஜிட்டல் கட்டண முறைகள் ஆகும். இருப்பினும், இரண்டிற்கும் இடையே சில வேறுபாடுகள் உள்ளன. RTGS பரிவர்த்தனைகள் பெரிய அளவிலான தொகைகளை மட்டுமே கையாள்கின்றன. ரூ .2 லட்சத்துக்கு மேலான நிதியை RTGS வழியாக அனுப்பலாம். NEFT கட்டண முறையில் அத்தகைய வரம்பு எதுவும் இல்லை.
சுருக்கமாக, பெரிய தொகையின் பரிமாற்றத்திற்கு RTGS சேவை பரிந்துரைக்கப்படுகிறது. ரூ .2 லட்சத்திற்கும் குறைவான தொகையை பரிமாற்ற NEFT சரியான செயல்முறையாக இருக்கும். மேலும், ஒரு நாளைக்கு 25 லட்சம் ரூபாய் வரையிலான தொகையை பயனர்கள் பரிமாற்றலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
முன்னதாக, ரிசர்வ் வங்கி ஏப்ரல் 7, 2021-ல் வெளியிடப்பட்ட தனது சமீபத்திய நாணயக் கொள்கை அறிவிப்புகளில் சில புதிய நடவடிக்கைகளைப் பற்றி கூறியுள்ளது. இதன் மூலம், Amazon Pay, Paytm, PhonePe, MobiKwik, PayU மற்றும் Ola Pay போன்ற வாலட்டுகள் அளிக்கும் சலுகைகளுக்கு அதிக மதிப்பு கிடைக்கும்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் மொபைல் வாலட்டின் பயன்பாடுகளை அதிகரிக்கும் மூன்று முக்கிய நடவடிக்கைகளை அறிவித்தார். ப்ரீபெய்ட் பேமென்ட் இன்ஸ்ட்ரூமென்ட் (PPI) வழங்குநர்கள், கார்டு நெட்வொர்க்குகள், ஒயிட் லேபிள் ஏடிஎம் (WLA) ஆபரேட்டர்கள், வர்த்தக பெறுதல் தள்ளுபடி அமைப்பு (TReDS) இயங்குதளங்கள் உள்ளிட்ட வங்கி அல்லாத நிறுவனங்களின் கட்டண அமைப்புகளுக்கு RTGS மற்றும் NEFT கட்டண முறைகளை ரிசர்வ் வங்கி அதிகரித்துள்ளது. வங்கி அல்லாத கட்டண அமைப்பு ஆபரேட்டர்களில் Amazon Pay, Paytm, PhonePe, MobiKwik, PayU மற்றும் Ola Pay போன்றவை அடங்கும். இனி இந்த சேவைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு RTGS மற்றும் NEFT முறைகள் வழியாக நிதியை பரிமாற்ற உதவும்.
ALSO READ: SBI Customers Alert: வாடிக்கையாளர்களிடமிருந்து எஸ்பிஐ வங்கி அநியாய வசூல்!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR